புத்தர் ஞானம் பெற்ற இடம்..! | Buddhar Gnanam Petra Idam in Tamil

Advertisement

புத்தர் ஞானம் பெற்ற இடம் | Buddhar Gnanam Petra Idam in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் புத்தர் ஞானம் பெற்ற இடம் எது.? (Buddhar Gnanam Petra Idam in Tamil) என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து  தெரிந்து கொள்ளலாம். பொதுவாக நமக்கு தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவரிடமும் இருக்கும். அதனால், அதனை தெரிந்துகொள்ள அதிக ஆர்வம் காட்டி வருவோம்.

அப்படி நமக்கு தெரியாமல் இருக்கும் விசயங்களில் ஒன்று தான் புத்தர் ஞானம் பெற்ற இடம். இதனை நாம் அனைவருமே அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்போம். எனவே, நீங்கள் புத்தர் ஞானம் பெற்ற இடம் எது.? என்பதை அறிந்து கொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

புத்த பூர்ணிமா என்றால் என்ன..? வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்..!

புத்தர் ஞானம் பெற்ற இடம் எது.?

புத்தர் ஞானம் பெற்ற இடம்

 புத்தர் ஞானம் பெற்ற இடம் போத்கயா ஆகும். இது, பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். போத்கயாவில் உள்ள மகாபோதி கோயிலின் மரத்தின் அடியில் ஞானம் பெற்றார்.  

இதனால், புத்தர் மரத்தின் கீழ் அமர்ந்து 49 நாட்கள் தியானம் செய்து ஞானம் பெற்ற தலமாக இது போற்றப்படுகிறது. மேலும், போதி மரம் புனிதமாகவும் போற்றப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் வழிபடும் தலமாகவும் உள்ளது.  . இந்த மரத்தின் வரலாற்று முக்கியத்துவம் கௌதம புத்தரின் ஆன்மீக பயணத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது, இது பௌத்த வரலாற்றில் ஒரு முக்கிய தருணத்தை குறிக்கிறது.

போத்கயா இடம் பக்தி கொண்ட ஒருவர் அவசியம் பார்க்கவேண்டிய முக்கிய இடமாக திகழ்கிறது.

புத்தர், ஞானம் பெற்ற ஏழு நாட்கள் வரை தனது இருக்கையை விட்டு நகராமல் போதி மரத்தடியில் தொடர்ந்து தியானம் செய்து வந்தார். இரண்டாவது வாரத்தில் நடைபயிற்சி தியானம் செய்தார்.

மகாபோதி கோவிலின் உள்ளே பூமிஸ்பர்ஷா முத்ரா என்ற “தரையைத் தொடும் போஸில்” புத்தரின் பிரம்மாண்டமான உருவம் உள்ளது. இது 1700 ஆண்டுகள் பழமையானது என்றும் கூறப்படுகிறது.

புத்தரின் இயற்பெயர் என்ன?

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement