கோபம் வருதல்
வணக்கம் நண்பர்களே..! கோபம் என்பது அனைவருக்கும் உணர்ச்சிவசமாக வரக்கூடிய ஒன்று. இந்த கோபம் மனிதர்களாக இருந்தாலும் விலங்குகளாக இருந்தாலும் கோபம் படும் முறை என்பது ஒன்று தான் அதனை வெளிப்படுத்துவதில் தான் வேறுபடுகின்றன. அத்தைய கோபம் வரும் போது ஒவ்வொருவரும் ஒரு செயலை செய்கின்றன. விலங்குகளை பொறுத்தவரை நாய் கோபம் வந்தால் குறைக்கும் அல்லது கடிக்கும். மாட்டிற்கு கோபம் வந்தால் முட்டும் மற்றும் குரங்கிற்கு கோபம் வந்தால் அதனுடைய கைகளால் கீரி விடும். இந்த வரிசையில் கோபம் வந்தால் வாலை மட்டும் ஆட்ட கூடிய விலங்கு என்ன என்பதை பற்றி இன்றைய பதிவில் தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
இதையும் படியுங்கள்⇒ பூனையை கனவில் கண்டால் என்ன பலன்..!
கோபம் வந்தால் வாலை மட்டும் ஆட்டும் விலங்கு எது தெரியுமா..?
கோபம் வந்தால் தன்னுடைய வாலை மட்டும் ஆட்டும் விலங்கு பூனை. இந்த பூனை ஒரு சிலர் வீட்டில் செல்ல பிராணியாகவும் வளர்ந்து வருகிறது.
இத்தகைய பூனை கோபம் வந்தால் தன்னுடைய வாலை ஆட்டுவது அல்லது வாலை தரையில் அடிப்பது போன்ற செயல்களை செய்து வருகிறது.
இந்த பூனை பலநிறங்களில் 2 வகையாக காணப்படுகிறது. அதுபோல பூனை பாலூட்டி இனத்தை சேர்ந்த ஒரு வகையான விலங்கு ஆகும்.
பண்டைய எகிப்தில் இந்த பூனை அவர்கள் வழிபடும் விலங்குகளாக இருக்கின்றன. அதுமட்டும் இல்லாமல் எல்லோர் வீட்டிலும் பூனையை எகிப்தியர்கள் வளர்த்து வருகின்றனர்.
பூனையின் சிறப்புகள்:
பூனை வால் ஆடுவதின் சிறப்புகள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.
பூனை தன்னுடைய வால் நுனியால் லேசாக வாலை ஆட்டினால் அது உங்களின் செயலை கவனித்து கொண்டி இருக்கிறது என்று அர்த்தம்.
அதே பூனை வேகமாக அதனுடைய வாலை ஆட்டினால் உங்கள் மீது கோபமாக இருக்கிறது அதனால் நீங்கள் அதன் பக்கத்தில் வரக்கூடாது என்று பூனை அதனுடைய சைகையால் உங்களுக்கு தெரியப்படுத்தக்கிறது.
இத்தகைய பூனை தன்னுடைய வாலை தாழ்வாக லேசாக ஆட்டினால் அது கவலையுடன் இருப்பதை வெளிக்காட்டுகிறது.
அந்த பூனை உங்களுடைய கால்களுக்கு அடியில் வந்து அமர்ந்தது என்றால் உங்கள் வீட்டில் எதையோ பார்த்த பயந்து இருப்பதை அதை உங்களிடம் தெரியப்படுத்துகிறது.
பூனை சற்று ஆரோக்கியம் குறைவாக இருக்கும் போது தன்னுடைய வாலால் உடலை முழுவதுமாக சுருட்டிக்கொள்ளும்.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |