Chandrayaan 3 Lander Name in Tamil..!
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அதாவது ஜூலை மாதம் முதலே இந்திய நாடு மட்டுமின்றி பல நாடுகளிலும் ஒரு விண்கலம் பற்றிய பேச்சு ஆனது அதிகமாக இருந்து கொண்டே இருந்தது. ஏனென்றால் இதற்கு முன்பாக அனுப்பட்ட சந்திரயான் 1 மாற்றும் 2 ஆனது வெற்றியினை அளிக்காத காரணத்தினால் சந்திரயான் 3 ஆனது என்ன மாதிரியான ரிசல்ட்டை கொடுக்க போகிறது என்ற ஆர்வம் பலருக்கும் இருந்தது. இதன் படி சொல்லப்போனால் இந்த சந்திரயான் 3 தானாகவே நன்றாக பிரபலம் அடைந்தது என்று கூறலாம். அந்த வகையில் சந்திரயான் 3 ஆனது வெற்றியையும் தழுவியது. எனவே இப்படிப்பட்ட சந்திரயான் 3-யின் லேண்டர் பெயர் என்ன என்பதை தான் இன்றைய பதிவில் தெரிந்துக்கோல போகிறோம்.
Chandrayaan-3 Lander Name:
சந்திரயான் 3-யில் இரண்டு அமைப்புகள் வைக்கப்பட்டுள்ளது. அதாவது லேண்டர் மற்றும் ரோவர் என்ற அமைப்புகள். இதில் லெண்டரின் பெயர் விக்ரம் என்றும், ரோவரின் பெயர் பிரக்யான் என்று குறிப்பிடப்படுகிறது.
சந்திரயான் 3 பற்றிய தகவல்கள் தமிழ்:
2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14-ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் என்ற விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து சந்திரயான் 3 விண்கலம் ஏவப்பட்டது.
இத்தகைய சந்திரயான் லேண்டர் மற்றும் ரோவர் கட்டமைப்பைக் கொண்டு விண்ணில் ஏவப்பட்டது. மேலும் இந்த இரண்டு அமைப்பின் மொத்த எடை மட்டுமே 3900 கிலோவாகும்.
அந்த வகையில் சந்திரயான் 3 ஆனது சந்திர மேற்பரப்பில் பாதுகாப்பான மற்றும் மென்மையான தரையிறக்கத்தை கண்டுப்பிடிக்கவும், சந்திரனில் ரோவர் சுற்றுவதை கண்டுபிடிப்பதை நோக்கமாகவும் கொண்டே இந்த விண்கலம் தயார் செய்யப்பட்டது. மேலும் சந்திரயான் 3 விண்கலத்தின் மொத்த எடை என்பது 640 டன்கள் ஆகும்.
ஜூலை மாதம் அனுப்பப்பட்ட விண்கலம் ஆனது சரியாக ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி அன்று நிலவின் தென்துருவம் அருகே வெற்றிகரமாக தரை இறங்கியது. இவ்வாறு இஸ்ரோ உருவாக்கிய சந்திரயான் 3 ஆனது நிலவின் தென்துருவதில் களம் இறங்கிய விண்கலம் இந்தியாவில் இருந்து அனுப்பட்டதால் இந்தியாவிற்கு நிலவின் வெற்றிகரமாக இறங்கிய 4-வது நாடு என்ற புகழும் வந்து சேர்ந்தது.
பொது அறிவு வினா விடைகள் தெரிந்து கொள்வோமா
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |