வயிற்றில் பல் இருக்கும் உயிரினம் எது தெரியுமா..?

Advertisement

Crab Information in Tamil

உயிரினங்களில் பல வகைகள் இருக்கின்றன. அத்தகைய உயிரினங்கள் பல வகைகள் இருப்பது போல சில மாற்றங்களும் அதில் இருக்கின்றன. வாய், பல் மற்றும் கண் இது போன்ற இன்னும் சில உறுப்புகள் மனிதர்களாக இருந்தாலும் சரி விலங்குகளாக இருந்தாலும் சரி அது பொதுவான ஒன்றாக இருக்கிறது. ஆனால் ஒரு உயிரினத்திற்கு மட்டும் நாம் பார்க்க முடியாத இடத்தில் பல் இருக்கிறது. அப்படி பல் கொண்டிருக்கும் உயிரினம் என்ன என்பது பற்றிய தகவல்களை இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

இதையும் படியுங்கள்⇒ கோபம் வந்தால் வாலை மட்டும் ஆட்டும் விலங்கு எது தெரியுமா..?

வயிற்றில் பல் இருக்கும் உயிரினம் எது தெரியுமா..?

நண்டு பற்றிய தகவல்கள்

வயிற்றில் பல் இருக்கும் உயிரினம் நண்டு. இந்த நண்டு அசைவ சாப்பாட்டில் அனைவருக்கும் பிடித்த ஒரு உணவாக இருக்கிறது.

இத்தகைய நண்டுகள் நன்னீர் மற்றும் உவர்நீரில் தான் வாழ்கின்றனர். அதேபோல நண்டு வாழ்வதற்கு வலை போன்ற அமைப்பினை அமைத்து கொண்டு அதன் உள்ளே வாழ்கிறது.

இந்த நண்டுகள் 10 கால்களையும் அதன் மேலே ஒரு ஓட்டினையும் கொண்டுள்ளது. அதில் 2 கால்களை மட்டும் கவ்விகளாக நண்டு பயன்படுத்தி கொள்கிறது.

அதுமட்டும் இல்லாமல் நண்டு அதனுடைய ஓட்டினை வருடத்திற்கு ஒரு முறை மாற்றி கொள்ளும் சிறப்பு கொண்டது.

இதில் பெண் நண்டுகள் மற்றும் ஆண் நண்டுகள் இரண்டுமே தன்னுடைய வயிற்றில் பல்லினை கொண்டிருக்கிறது. பெண் நண்டுகள் அதனுடைய அடி வயிற்றிற்கும் கீழே முட்டைகளை வைத்து இருக்கிறது.

தேங்காய் கால் நண்டு, குதிரைலாட நண்டு, நீலக்கால் நண்டு மற்றும் குழுவான் நண்டு என மொத்தம் நான்கு வகைகளாக இருக்கிறது.

இதில் இரண்டு வகை நண்டினை மட்டுமே மக்கள் பெரும்பாலும் உணவாக சாப்பிடுகின்றனர். 

நண்டில் மருத்துவக் குணங்களும் அதிகமாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்⇒ டால்பின் ஒரு கண்களால் மட்டுமே தூங்குமா? இதைவிட நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil
Advertisement