வித்தியாசமாக தூங்கும் விலங்கு எது தெரியுமா..?

Dolphin Information in Tamil

பொதுவாக மனிதனாக இருந்தாலும் சரி விலங்காக இருந்தாலும் சரி உடல் உறுப்புகள் என்பது அனைவருக்கும் ஒன்று தான். ஆனால் மனிதர்களும் விலங்குகளும் செயல்படும் திறன் மட்டும் வேறுபாடாக இருக்கும் என்று நாம் நினைத்து கொண்டிருப்போம். ஆனால் அது உண்மை கிடையாது. அதனால் இன்றைய பதிவில் வித்தியசமாக தூங்கும் விலங்கு எது..? மற்றும் அதனுடைய தகவல்களையும் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

இதையும் படியுங்கள்⇒ கோபம் வந்தால் வாலை மட்டும் ஆட்டும் விலங்கு எது தெரியுமா..?

வித்தியாசமாக தூங்கும் விலங்கு எது..?

டால்பின் பற்றிய தகவல்

டால்பின்கள் மற்ற விலங்குகளை போலவோ அல்லது மனிதர்களை போலவோ இரண்டு கண்களையும் மூடிக்கொண்டு தூங்காது. அதனால் வித்தியாசமாக தூங்கும் விலங்கு டால்பின் தான்.

டால்பின்கள்  எப்போதும் தூங்கும் போது ஒரு கண்ணை மூடியும் மற்றொரு கண்ணை திறந்தும் தான் தூங்கும். ஏனென்றால் இரண்டு கண்களையும் மூடிக்கொண்டு தூங்கும் போது அது இறந்து விடும்.

இரண்டு கண்களையும் மூடிக்கொண்டு டால்பின் தூங்கினால் அது இறந்து விடும் அல்லது அதனுடைய மூளை செயல் இழந்து விடும். அதனால் வித்தியசமாக தூங்கும் திறன் கொண்டது டால்பின்.

டால்பின் பற்றிய தகவல்கள்:

டால்பின்

டால்பின் நீரில் வாழக்கூடிய ஒரு பாலூட்டி உயிரினமாககும். இந்த டால்பின் 20 ஆண்டுகள் வரை வாழும் ஒரு உயிரினம் ஆகும்.

இது 1.2 மீட்டரில் இருந்து 9.5 மீட்டர் வரை நீளமும் மற்றும் 40 கிலோ கிராம் முதல் 10 டன் வரை எடையும் கொண்ட சிறப்பு வாய்ந்த ஒரு விலங்கு டால்பின்.

இந்த  டால்பின்கள் அனைத்து விலங்குகளையும் விட மிக வேகமாக நீச்சல் அடிக்கும் திறன் கொண்டது. அதுமட்டும் இல்லாமல் நீருக்கு மேலையும் மற்றும் நீருக்கு கீழேயும் நன்றாக கூர்மையாக பார்க்கும் சிறப்பு வாய்ந்தது.

இத்தகைய டால்பின்கள் அதனுடைய பல்லின் எதிர் ஒளியை வைத்து ஒரு பொருள் இருக்கும் இடத்தை சரியாக கண்டுபிடிக்கும் தன்மை கொண்டது.

இதையும் படியுங்கள்⇒ வயிற்றில் பல் இருக்கும் உயிரினம் எது தெரியுமா..?

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil