ஈராக் நாட்டின் நாணயத்தின் பெயர் என்ன தெரியுமா..?

Advertisement

இராக் நாட்டின் நாணயத்தின் பெயர்

இப்பதிவில் ஈராக் நாட்டின் நாணயத்தின் பெயர் ( The name of the currency of Iraq in tamil) என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். அது மட்டுமில்லாமல் இராக் நாட்டை பற்றி சில முக்கியமான விஷயங்களை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள போகிறோம்.

பொதுவாக ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு விதமான சிறப்பு தன்மைகள் இருக்கும். அந்த வகையில் இன்று இராக் நாட்டின் நாணயத்தின் பெயர் மற்றும் அந்த நாட்டை பற்றிய தகவலை அறிந்து கொள்வோம் வாங்க..

ஈராக் நாட்டின் நாணயத்தின் பெயர் என்ன.?

விடை: இராக்கி தினார்

ஈராக் நாட்டின் தலைநகரம்:

விடை: பாக்தாத் 

ஈராக் நாட்டை பற்றிய தகவல்:

  • குடியரசு என்று அதிகாரபூர்வமாக அழைக்கப்படும் நாடு இராக் ஆகும். இந்த நாடு தென்மேற்கு ஆசியாவில் உள்ள மத்தியகிழக்கு நாடாகும். நகரத்தின் முன்னுதாரணமாக இருக்கும் இராக் ஆகும்.
  • இந்த நாட்டில் அதிகளவு நடந்த போரின் காரணமாக பொருளாதாரம் ரீதியாக பின் தங்கிய நாடகம்.
  • பண்பாடு, பாரம்பரியம், உணவு, கற்றல் மற்றும் பல்வேறு விஷயங்களின் முன் உதாரணமாக இருக்கிறது.
  • இராக் என்பது அரபு மொழில் வளமான மண் என்று அர்த்தம். இந்த பெயரானது ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னிருந்து பயன்பாட்டில் உள்ளதாம்.
  • பல ஆண்டுகளாக ஒட்டோமன் சாம்ராஜ்ய ஆட்சியின் கீழ் இருந்த இராக் பின்னர் பிரிட்ஸ் ஆட்சியின் கீழ் 17 ஆண்டுகள் இருந்தன 1932 ஆண்டு அக்டோபர் 3 தேதி பிரிட்ஸ்சிடமிருந்து சுகந்திரம் பெற்றது இராக்.
  • சிவப்பு, வெள்ளை, கருப்பு என்ற இராக் தேசிய கொடியின் நடுவே 1991 ஆம் ஆண்டு அல்லாஹு அக்பர் என்ற வார்த்தையை பச்சை நிறத்தில் சேர்க்கப்பட்டது.
எந்த தமிழக மாவட்டம் சமய நல்லிணக்கத்தின் பூமி?
  • 1979 ஆம் ஆண்டு இராக் ஆட்சியாளராக பொறுப்பேற்ற சதாம் உசேன் 1980 ஆம் ஆண்டு ஈரான் மீதும், 1990 ஆம் ஆண்டு குவைத் மீதும் போர் புரிந்தார் அவ்வாறு போர் தொடுத்தாலும் இரண்டு போரிலும் வெற்றிபெற முடியவில்லை.
  • ஈராக்கின் முக்கிய நதிகள் திக்ரிஸ் மற்றும் உபிரைட்ஸ் என்பதாகும்/இந்த இரண்டு நதிகளும் இராக்கின் மண் வளத்தை மிகவும் வளமையாக மாற்றுவதற்கு கணிசமான பங்குகளை அளிக்கிறது.
  • உலகில் ஐந்தாவது எண்ணெய் வளமிக்க நாடக இருக்கிறது இராக்.
  • மிகப்பெரிய தொழில் தொழி துறைகளில் ஒன்றாக தேன் உற்பத்தி உள்ளது. இந்த தேன் அதிசய மருத்துவ குணமுடையது என்று இராக் மக்கள் நம்புகிறார்கள். அந்நாட்டின் நடந்த போரின் காரணமாக தேன்  உற்பத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாம்.
  • பேரிச்சை உற்பத்தியில் முன்னணி நாடுகளில் இராக் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
  • இராக் நாட்டில் 20 முதல் 50 நாட்கள் மணல் அல்லது புழுதி புயல் வீசுகிறது பெருபாலும் கோடைகாலத்தில் வீசும் மணல் புயல் 50 அடி உயரத்தை தாண்டும்  என்கிறார்கள். புழுதி புயல் சராசரியாக 3000 முதல் 6000 அடி உயரத்தில் வீசும் என்கிறார்கள்.

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement