எட்டுத்தொகை நூல்கள் யாவை | Ettuthogai Noolgal yavai

Ettuthogai Noolgal Names in Tamil

எட்டுத்தொகை நூல்கள் யாவை ஆசிரியர் பெயர்கள் | Ettuthogai Noolgal Names in Tamil

எட்டுத்தொகை என்பது எட்டு நூல்களின் தொகுப்பு. இது சங்க இலக்கியத்தில் ஒன்று. இதில் அடங்கிய ஒவ்வொரு நூலும், பலரால் பல காலகட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர் ஒருசேரத் தொகுக்கப்பட்டது. இவற்றில், பல பாடல்களில் அவற்றை எழுதியவரது பெயர் காணப்படவில்லை. அகத்தையும் புறத்தையும் பற்றிய பாடல்களாக இந்நூல்களைப் பகுக்கின்றனர். தொழில், அளவு, பாட்டு, பொருள் ஆகியவற்றால் தொகுக்கப்பட்டமையால், தொகை எனப் பெயர் பெற்றது. இத்தொகையுள், ஏறத்தாழ 2352 பாடல்களை 700 புலவர்கள் பாடியுள்ளனர். இவர்களில் 25 அரசர்களும், 30 பெண்பாற்புலவர்களும் உண்டு. ஆசிரியர் பெயர் தெரியாப் பாடல்கள் 102.

எட்டுத்தொகை நூல்களுள், பரிபாடலும், கலித்தொகையும் தவிர்த்து, மற்றவை ஆசிரியப்பாவால் அமைந்து, சில சமயம் வஞ்சிப்பாவால் வரப்பெற்று அமைந்துள்ளன. 3 அடிகள் சிற்றெல்லையாகவும் 140 அடிகள் பேரெல்லையாகவும் பெற்றுள்ளன. இந்நூல்கள், கடைச் சங்க காலத்தில் இயற்றப்பட்டன என்பர். தொகுக்கப்பட்ட காலம் கி.பி. 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டு என்றும் கருதுவர். சரி இந்த பதிவில் எட்டுத்தொகை ஒவ்வொரு நூலையும் தொகுத்தவர் யார்? தொகுக்க உதவியவர் யார்? என்பதை படித்தறியலாம்.

எட்டுத்தொகை நூல்கள் யாவை & ஆசிரியர் பெயர்கள் – Ettuthogai Noolgal Names and Authors in Tamil :

எட்டுத்தொகை நூல்கள் தொகுத்தவர் தொகுப்பித்தவர்
நற்றிணை பெயர் தெரியவில்லை பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
குறுந்தொகை பூரிக்கோ பெயர் தெரியவில்லை
ஐங்குறுநூறு புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
பதிற்றுப்பத்து பெயர் தெரியவில்லை பெயர் தெரியவில்லை
பரிபாடல் பெயர் தெரியவில்லை பெயர் தெரியவில்லை
கலித்தொகை நல்லந்துவனார். பெயர் தெரியவில்லை
அகநானூறு உத்திர கண்ணனார். பாண்டியன் உக்கிரப் பெருவழுதி.
புறநானூறு பெயர் தெரியவில்லை பெயர் தெரியவில்லை

 

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
பதினெண் மேற்கணக்கு நூல்கள்

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil