பதேபூர் சிக்ரியை கட்டியவர் பெயர்
வணக்கம் நண்பர்களே.. இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் பதேபூர் சிக்ரியை கட்டியவர் யார் என்று தெரிந்துக்கொள்ளலாம். பொது அறிவு சார்ந்த கேள்வி பதில்களை இளம் வயதிலிருந்தே நாம் படிக்கும் ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் பெரியளவில் நடக்கும் போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெறலாம். எங்களுடைய பொதுநலம்.காம் பதிவில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வாளர்களுக்கு பயனுள்ள வகையில் அமைய பல பொது அறிவு கேள்வி பதில்களை பதிவிட்டு வருகிறோம். அதனை தொடர்ந்து இந்த பதிவில் பதேபூர் சிக்ரியை கட்டியவர் யார் என்று படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..
இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் யார்? |
பதேபூர் சிக்ரியை கட்டியவர் யார்?
விடை: பதேபூர் சிக்ரியை கட்டியவர் அக்பர்.
பதேபூர் சிக்ரி கோட்டை சிறப்பு:
பதேபூர் சிக்ரிக் கோட்டை ஆக்ராவில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த கோட்டையை அக்பர் என்பவர் கட்டியுள்ளார். இந்த கோட்டையை 1573-ல் குஜராத்தின் மீது படையெடுத்து வெற்றி கொண்டதன் நினைவாக அக்பர் இந்த கோட்டையை நிறுவினார்.
சிக்ரிக் கோட்டை அமைப்பு:
இந்த கோட்டையானது ஆறு மைல் சுற்றளவில் உயர்ந்த சுவர்களை கொண்டுள்ளது. இந்த நகரில் ஒரு புறம் செயற்கை ஏறி அமைந்துள்ளது.
இந்தியாவின் முதல் பெண் பிரதமர் யார்? |
சுவர்களின் அடி:
சிக்ரி கோட்டையின் சுவர்களின் உயரம் அடி 32. கோட்டையின் அகலம் 11 அடி. இந்த கோட்டையின் வாயிற்படிக்கு புலந்த்தர்வாசா என்று சிறப்பு பெயரும் உள்ளது. இதற்கு அர்த்தம் வெற்றி வாசல் என்பதாகும்.
இந்த கோட்டையின் கோபுரங்கள் நிலப்பரப்பில் இருந்து 176 அடிகள் உயரத்தில் அமைந்துள்ளது. அக்பர் இந்த சிக்ரி கோட்டையை சலவை கற்களாலும், கூழாங்கற்களாலும் கட்டி அமைத்துள்ளார்.
சிறப்பம்சங்கள்:
பதேபூர் சிக்ரியில் உள்ள முக்கியமான மாளிகைகளுள் ஒன்று திவானிசிகாஸ். இந்த கோட்டையின் பெரிய தூணின் உச்சியில் ஒரு பளிங்கு மேடை உள்ளது. இந்த மேடையில் தான் அக்பர் அமர்ந்து பல அறிஞர்களுடன் விவாதம் செய்வார்.
இக்கோட்டையில் அக்பர் சதுரங்கம் விளையாடிய இடம் ஒன்று உள்ளது. மனிதர்களை சதுரங்கக் காய்களாக அவர் பயன்படுத்தி விளையாடியுள்ளார். இதற்காகத் தரையில் வெள்ளை, கறுப்புக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளதை இங்கு பார்க்கலாம்.
இந்தியாவின் முதல் பெண் நீதிபதி யார்? |
பயண வசதி:
பதேபூர் சிக்ரியை அடைவதற்கு ரயில் வசதிகள் மற்றும் சாலை வசதிகள் ஏராளமாக உள்ளது. மிகவும் அருகில் உள்ள விமான நிலையம் ஆக்ரா விமான நிலையம் தான். பதேபூர் சிக்ரிக்கு பயணம் செய்ய நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலம் சிறந்த பருவமாக உள்ளது.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |