First Democracy Country in the World in Tamil
இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதிலும் குறிப்பாக போட்டி தேர்வுகளுக்கு தங்களை தயார்ப்படுத்தி கொண்டிருப்பவர்களுக்கும் படித்து கொண்டிருக்கும் மாணவ மாணவிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே நமது பதிவின் மூலம் தினமும் போட்டி தேர்வுகளுக்கு தயார்படுத்தி கொண்டிருப்பவர்களுக்கும் படித்து கொண்டிருக்கும் மாணவ மாணவிகளுக்கும் பயன்படும் வகையில் ஒரு பொது அறிவு தகவலை அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் மக்களாட்சியை முதன் முதலில் அறிமுகப்படுத்திய நாடு எது என்பதை பற்றி தான் அறிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ இந்திய அரசியலமைப்பு பற்றிய பொது அறிவு வினா விடைகள்
மக்களாட்சி என்றால் என்ன..?
மக்களாட்சி எங்கு உருவானது என்பதை அறிந்து கொள்வதற்கு முன் மக்களாட்சி என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதாவது மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்ட அரசாங்க முறை தான் மக்களாட்சி என்று சொல்லப்படுகிறது.
மக்களாட்சி முதன் முதலில் தோன்றிய நாடு எது..?
மக்களாட்சி அல்லது ஜனநாயகம் முதன் முதலில் கிமு 5 ஆம் நூற்றாண்டில் பண்டைய கிரேக்க ஏதென்ஸில் நிறுவப்பட்டது என்று சில கூற்றுகள் கூறுகின்றன. ஆனால் உண்மையில் ஏதென்ஸ் ஒரு நாடு இல்லை என்பதால் சிலர் இந்த கூற்றுகளை மறுக்கின்றன.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ பொது அறிவு வினா விடைகள்
அடுத்து ஐஸ்லாந்து மற்றும் ஐல் ஆஃப் மேன் ஆகிய இரண்டு நாடுகளும் தான் முதன் முதலில் மக்களாட்சி முறையை அறிமுகப்படுத்திய நாடுகள் என்று கூறப்படுகின்றது. மேலும் இதற்கு உதாரணமாக இவை இரண்டும் 1,000 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு பாராளுமன்ற அமைப்பை கொண்டுள்ளன என்பதை சுட்டிக்காட்டுகின்றன.அதனால் இவை தான் முதன் முதலில் மக்களாட்சி அல்லது ஜனநாயகத்தை நிறுவிய நாடுகள் என்று பல கூற்றுகள் கூறுகின்றன.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ கல்வியை முற்றிலும் இலவசமாக அளிக்கும் டாப்- 3 நாடுகள் எது தெரியுமா
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |