தமிழ்நாட்டின் முதல் மாவட்டம் எது

Advertisement

தமிழ்நாட்டின் முதல் மாவட்டம் எது.?

இன்றைய காலத்தில் பலருக்கும் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதற்காக தங்களை prepare செய்து கொள்கிறார்கள். இந்த அரசு தேர்வுகளில் பொது அறிவு கேள்விகள் அதிகமாக கேட்கப்படுகிறது. இதனை நாம் படித்தாலே தேர்வில் வெற்றியை அடையலாம். உங்களுக்கு உதவும் வகையில் நம்முடைய பதிவில் தினந்தோறும் பொது அறிவு சார்ந்த கேள்வி பதில்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் தமிழ்நாட்டின் முதல் மாவட்டம் எதுவென்று அறிந்து கொள்வோம் வாங்க.

தமிழ்நாட்டின் முதல் மாவட்டம் எது.?

 நம்முடைய தமிழ்நாட்டின் முதல் மாவட்டமாக இருப்பது சேலம் மாவட்டம் தான்.  

இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் நகரம் எது?

சேலம் பற்றிய  தகவல்கள்:

 தமிழ்நாட்டின் முதல் மாவட்டம் எது

தமிழ்நாட்டின் முதல் மாவட்டம் சேலம் மாவட்டம். 1792 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் சேலம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.  சேலம் மாவட்டம் “இரும்பு நகரம்”, “மாம்பழ நகரம்” என்று அழைக்கப்படுகிறது. மாம்பழத்திற்கு பேர் போன எதுவென்று கேட்டால் சின்ன குழந்தைகள் பதில் கூறும்.

சேலம் மாவட்டம் கொங்குநாட்டின் ஒரு பகுதியாக பண்டைய நாட்களில் இருந்து வந்துள்ளது. அதற்கு முன்னர் அதியமான் ஆட்சிப் பகுதியில் இருந்து வந்துள்ளது. சேலம் மாவட்டத்தின் வரலாறு பழமையானது. இங்கு புதிய கற்கால மனிதன் பயன்படுத்திய கோடரிகள், சுத்திகள், பானைகள், தேய்ப்புக் கற்கள், வளையல்கள் போன்றவை சேர்வராயன், கல்ராயன், வத்தலமலை, மேலகிரி, குட்டிராயன் மலை முதலிய பகுதியில் கிடைத்திருக்கிறது.

இவ்வூரில் உள்ள மலையைச் சேரன் ஆண்டதால் சேர்வராயன் மலை ஆயிற்று; அது போலச் ‘சேரலம்’ என்பது ‘ சேலம்’ ஆயிற்று என்றும் கூறுவர். ஏத்தாப்பூர் செப்பேடு இவ்வூரைச் “சாலிய சேரமண்டலம்” எனக் குறிப்பிடுகிறது. எனவே, சேரலம் என்னும் பெயரே காலப்போக்கில் மருவி சேலம் என கூறப்பட்டது.

1937 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல்முறையாக மதுவிலக்கு அமல்படுத்தியது சேலம் மாவட்டத்தில் தான் என்ற சிறப்பு பெற்றது.  சேலத்தில் இருக்கும் ரயில்வே ஜங்ஷனின் நடைமேடை இந்தியாவிலேயே மிக நீளமான நடைமேடையாகிறது.  சேலம் வணிகத்தில் பெயர் பெற்ற மாவட்டம். இங்கு பிரதான தொழிலாக விளங்குவது கைத்தறியும், ஜவ்வரிசி உற்பத்தியும், வெள்ளி கொலுசுகள் தொழிலும் ஆகும்.

உலகின் மிக உயரமான முத்துமலை முருகன் கோவில் சேலம் மாவட்டத்தில் தான் இருக்கிறது. சுற்றுலாவாசிகளுக்கு ஏற்ற மாவட்டமாகவும் சேலம் உள்ளது. இங்குள்ள “ஏழைகளின் ஊட்டி”யான ஏற்காடு சுற்றுலாவுக்கு மிகச்சிறந்த மலை வாசஸ்தலமாகிறது.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil

 

Advertisement