உலகின் நீளமான கடற்கரை எது? – First Longest Beach in the World
ஹலோ நண்பர்களே வணக்கம்.. நமது பதிவில் பலவகையான பயனுள்ள பதிவுகளை பதிவு செய்து வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது உலகின் மிக நீளமான கடற்கரை பட்டியலில் முதல் பத்து இடங்களில் உள்ள கடற்கரைகள் மற்றும் அதனுடைய நீளம், அந்த கடற்கரை எங்கு அமைந்துள்ளது போன்ற தகவல்களை பார்க்கலாம். பொது அறிவு சார்ந்த பதிவுகளை படிப்பவர்களுக்கு இந்து மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க உலகின் நீளமான கடற்கரைகள் பட்டியலை இப்பொழுது நாம் பார்க்கலாம்.
1. ப்ரையா டூ கேஸினோ (Praia do Cassino)
உலகின் மிகப்பெரிய கடற்கரையைக் கொண்ட நாடு ப்ரேசில். இங்கு தான் உலகின் நீளமான கடற்கரை அமைந்துள்ளது. இந்த Praia do Cassino கடற்கரையின் நீளம் சுமார் 158 மைல்கள் ஆகும்.
2. எய்ட்டி மைல் பீச் (Eighty Mile Beach)
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய கடற்கரை. உலகின் மூன்று பெரிய கடற்கரைகளை கொண்ட பெருமை ஆஸ்திரேலியாவையே சேரும். இந்த எய்ட்டி மைல் பீச்சியின் நீளம் 140 மைல்கள் ஆகும்.
3. பட்ரி ஸ்லாண்ட் பீச் (Padre Island beach)
அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்கரை இதுவாகும். டாக்சஸ் மாகாணத்தில் கல்ஃப் ஆஃப் மெக்சிகோ கடல் பகுதியில் அமைந்துள்ளது. பட்ரி ஸ்லாண்ட் கடலின் நீளம் 113 மைல்கள் ஆகும்.
4. 90 மைல் பீச் விக்டோரியா (Ninety Mile Beach, Victoria):
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய கடற்கரை. இதனுடைய பெயரும் நயன்டி மைல் பீச் தான். இந்த பீச்சியின் நீளம் 94 மைல்கள் ஆகும்.
5. காக்ஸ் பஜார் பீச் (Cox’s Bazar beach):
ஆசியாவின் மிக நீளமான கடற்கரை காக்ஸ் பஜார் பீச் ஆகும். வங்காளதேசம் நாட்டில் தான் இந்த பெரிய கடற்கரை அமைந்துள்ளது. இதனுடைய நீளம் 78 மையில்ஸ் ஆகும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தமிழ்நாட்டின் மிகப்பெரிய நூலகம் எது?
6.ப்ரசெர் இஸ்லாண்ட் பீச் (Fraser Island beach):
ஆஸ்திரேலியாவில் உள்ள மூன்றாவது மிக நீளமான கடற்கரை. குயின்ஸ்லாந்து மாநிலத்தில் அமைந்துள்ள இந்த ப்ரசெர் இஸ்லாண்ட் கடற்கடரையின் மொத்த நீளம் 75 மையில்.
7.கிராண்ட் ஸ்ட்ராண்ட் பீச் (Grand Strand Beach):
இந்த கிராண்ட் ஸ்ட்ராண்ட் பீச் அமெரிக்காவில் உள்ள சவுத் கரோலினா மாகாணத்தில் அமைந்துள்ளது. அமெரிக்காவில் அதிக பயணிகள் வந்து செல்லும் மிகப்பெரிய கடற்கரை. இதன் மொத்த நீளம் 60 மைல்கள்.
8.ப்லயா நோவில்லேரோ பீச் (Playa Novillero Beach):
இந்த ப்லயா நோவில்லேரோ பீச் மெக்சிகோவில் உள்ளது. இதனுடைய மொத்த நீளம் 55 மைல்கள் தொலைவு. தென் அமெரிக்காவின் மிக நீளமான கடற்கரை இது.
9. 90 மைல் பீச் (Ninety Miles Beach):
இந்த பீச் நியூஸிலாந்தில் உள்ளது. பெயர் தான் 90 மைல் பீச். ஆனால் அதனுடைய உண்மையான நீளம் 54 மைல்கள் தான். ஓசியான நிலப்பரப்பில் அமைந்துள்ள மிக நீளமான கடற்கரைகளில் இதுவும் ஒன்று.
10. லாங் பீச் (Long Beach):
இந்த பீச் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மாநிலத்தில் உள்ளது. இதன் மொத்த நீளம் 28 மைல்கள் ஆகும். இது அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய கடற்கரைகளில் ஒன்றாகும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உலகில் ராணுவம் இல்லாத நாடுகள்
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |