இந்திய அரசியலமைப்பு அட்டவணைகள் | Fundamental Rights in Tamil

india arasiyal amaippu sattam in tamil

இந்திய அரசியலமைப்பு அட்டவணைகள் | India Arasiyal Amaippu Sattam in Tamil

இந்திய அரசியலமைப்பு சட்டம் என்பது ஒரு எழுதப்பட்ட சட்டம் ஆகும். அதாவது எவ்விதமான சட்டங்கள் கொண்டு வரலாம் என்று ஒரு குழு அமைத்து எழுதப்பட்டதாகும். அரசியலமைப்பு சட்டத்தில் இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளது. இந்தியாவில் மொத்தம் 12 அட்டவணைகள் மற்றும் 395 கட்டுரைகள் 25 பாகங்களை கொண்டுள்ளது. நாம் இந்த பதிவில் இந்திய அரசியலமைப்பில் உள்ள அட்டவணைகள் மற்றும் அவற்றின் சட்டங்கள் என்ன என்பதை எல்லாம் படித்து அறியலாம் வாங்க.

 Fundamental Rights in Tamil:

இந்திய அரசியலமைப்பு அட்டவணைகள்
அட்டவணை 1 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 
அட்டவணை 2 உரிமைகள் மற்றும் சம்பளம் 
அட்டவணை 3 பதவி பிராமணம் மற்றும் உறுதிமொழிகள் 
அட்டவணை 4 ராஜ்ய சபா எண்ணிக்கை 
அட்டவணை 5 பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டவரின் நிர்வாகம் 
அட்டவணை 6 நான்கு மாநிலங்களின் நிர்வாகம் 
அட்டவணை 7  அதிகார மற்றும் பொது பட்டியல் 
அட்டவணை 8  அங்கீகரிக்கப்பட்ட மொழி 
அட்டவணை 9 நில சீர்திருத்தம் மற்றும் ஜமீன்தாரி ஒழிப்பு சட்டம்
அட்டவணை 10 கட்சித்தாவல் மற்றும் பதவி நீக்கம்
அட்டவணை 11 பஞ்சாயத்துகளின் நிர்வாக பொறுப்பு 
அட்டவணை 12 நகராட்சிகளின் நிர்வாக பொறுப்பு 

Indian Constitution in Tamil:

 • 1950-ம் ஆண்டு ஜனவரி 26 வரை அட்டவணைகள் 8, பாகங்கள் 22 மற்றும் 395 கட்டுரைகள் தான் வழக்கில் இருந்து வந்தன. பின் வந்த சட்ட திருத்தம் மூலமாக 4 சட்டங்கள் இயற்றப்பட்டு 12 அட்டவணைகள் 25 பாகங்கள் உருவானது.

அட்டவணை 1

 • யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களின் எல்லையை பற்றி கூறுகிறது. இந்தியாவில் மொத்தம் 8 யூனியன் பிரதேசங்களும், 28 மாநிலங்களும் உள்ளது

அட்டவணை 2

 • அரசியலில் உள்ள குடியரசு தலைவர், ஆளுநர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், துணை சபாநாயகர், சபாநாயகர் போன்றவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் மற்றும் சலுகைகள் பற்றி விவரிக்கிறது.

India Arasiyal Amaippu Sattam in Tamil:

 அட்டவணை 3

 • பதவிப்பிரமாணம் அதாவது பிரதமர், மக்களவை தலைவர், மாநிலங்களவை தலைவர் போன்றவர்களை யார் நியமனம் செய்ய வேண்டும் என்பதை விவரிக்கிறது.

அட்டவணை 4

 • ராஜ்ய சபா ஒதுக்கீடு.
 • Rajya Sabha seats மொத்தம் 250.
 • ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கும் எத்தனை Rajya Sabha MP-க்கள் இருக்க வேண்டும் என்பதை விவரிக்கிறது.
 • உத்திரபிரதேசத்தில் 31 MP-களும் தமிழ்நாட்டில் 18 MP-களும் உள்ளன.

அட்டவணை 5

 • பழங்குடியினர் வசிக்க வேண்டிய இடம் மற்றும் அனைத்து விதிகளையும் ஜனாதிபதி அறிவிக்க வேண்டும் என்ற விதிகளை விவரிக்கிறது.

Fundamental Rights in Tamil – அட்டவணை 6:

 • அசாம், திரிபுரா, மேகாலயா, மிசோரம் போன்ற மாநிலங்களில் பழங்குடியினர் பகுதிகளில் நிர்வாகம் பற்றி விவரிக்கிறது.

அட்டவணை 7

 • இந்த அட்டவணையில் மத்திய பட்டியல், மாநில பட்டியல், மற்றும் பொதுப்பட்டியல் என 3 பட்டியல்கள் உள்ளன
 • மத்திய பட்டியல் மொத்தம் 100 துறைகள் உள்ளன. இந்த பட்டியலில் மத்திய அரசு சட்டம் இயற்றும்.
 • மாநில பட்டியல் இதில் 61 துறைகள் உள்ளன. இந்த பட்டியலில் மாநில அரசு சட்டம் இயற்றும்.
 • பொதுப்பட்டியல் இதில் 52 துறைகள் உள்ளன. இந்த பட்டியலில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு இரண்டு அரசுகளும் சட்டம் இயற்றும்.

இந்திய அரசியலமைப்பு அட்டவணைகள்:

அட்டவணை 8

 • இந்த அட்டவணை மொழிகள் பற்றி கூறுகிறது. இந்தியாவில் பல மொழிகள் பேசப்பட்டாலும் அதில் இந்திய அரசால் 22 மொழிகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

அட்டவணை 9

 • இந்த அட்டவணையில் ஜமீன்தார் மற்றும் நில சட்டம் அதாவது நிலம் சம்மந்தமான பல்வேறு வகை சட்டங்கள் கொண்டு வரப்பட்டது.
தகவல் அறியும் உரிமை சட்டம்

Indian Constitution in Tamil:

அட்டவணை 10

 • இந்த அட்டவணையில் கட்சித்தாவல் தடை சட்டம் கொண்டு வரப்பட்டது.
 • ஒரு கட்சியில் இருந்து கொண்டு மற்ற கட்சிக்கு சென்றால் அவைத்தலைவர் அந்த பதவியை நீக்கம் செய்யும் உரிமை கொண்டு வரப்பட்டது. இது 1952-ம் ஆண்டு 52-வது சட்ட சீர்திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது.

அட்டவணை 11

 • இந்த அட்டவணையில் பஞ்சாயத்துகளின் அதிகாரம், நிர்வாகம்  மற்றும் பொறுப்புகளை உள்ளடக்கியது.
 • 1992 ஆம் ஆண்டு 73 ஆவது சட்ட திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது.

அட்டவணை 12

 • நகராட்சிகளின் அதிகாரம் மற்றும் பொறுப்புகளை உள்ளடக்கியது.
 • 1992-ஆம் ஆண்டு 24-ஆவது சட்ட திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது.
இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் அதிகாரி
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் உயர் நீதிமன்றம்

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil