Tamilnadu GK in Tamil
நாம் அனைவருக்கும் நம் வாழும் நாட்டை பற்றியும் மாநிலத்தை பற்றியும் அறிந்துகொள்ளும் ஆவல் இருக்கும். தமிழ்நாட்டில் என்ன என்ன சிறப்புகள் உள்ளது என்பதை தெரிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்று. இந்த தகவல்களை போட்டி தேர்வுக்கு தயாராகும் நபர் மட்டும் தெரிந்துவைத்திருந்தால் போதும் என்னும் நிலை மாற வேண்டும். நாம் அனைவரும் நம்மை சுற்றியுள்ள பகுதிகளின் நிலவரங்கள், நடப்பு நிகழ்வுகளை தெரிந்துவைத்திருக்க வேண்டும். அதுவும் குறிப்பாக நமது மாநிலத்தினை பற்றி தெரிந்துவைத்திருக்க வேண்டும். அந்த வகையில் இன்று தமிழ்நாட்டை பற்றிய சில முக்கியமான தகவல்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
தமிழ்நாடு பொது அறிவு வினா விடை
- இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது?
விடை : 7வது இடம்
2. இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
விடை : 23 வது இடம்
3. இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?
விடை : 16வது இடம்
4. இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?
விடை : 15வது இடம்
5. இந்தியாவின் கல்வியறிவில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
விடை : 14வது இடம்
6. சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது?
விடை : மதுரை
7. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
விடை : 2004
8. தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் எவ்வளவு?
விடை : 72993
9. தமிழக உயர்நீதி மன்றம் எங்குள்ளது?
விடை : சென்னை
10. தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு?
விடை : 1076 கி.மீ
11. தமிழ்நாட்டின் மாநில நடனம் எது?
விடை : பரத நாட்டியம்
12. தமிழ்நாட்டின் மாநில பறவை எது?
விடை : மரகதப்புறா
13. தமிழ்நாட்டின் மாநில மரம் எது?
விடை : பனைமரம்
14. தமிழ்நாட்டின் மாநில மலர் எது?
விடை : செங்காந்தர் மலா்
15. தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?
விடை : கபடி
16. தமிழ்நாட்டின் மொத்த பரப்பு எவ்வளவு?
விடை : 1,30,058 ச.கி.மீ
17. தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு?
விடை : 7,21,38,958
ஆண் 3,61,58,871
பெண் 3,59,80,087
18. தமிழக சட்டசபை எந்த ஆண்டு முதல் ஒரு அவையாக மாற்றப்பட்டது
விடை : 1986
19. தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம் எது?
விடை : கன்னியாக்குமரி (92.14 சதவீதம்)
20. தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்?
விடை : சென்னை (23,23,454)
21. தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?
விடை : சென்னை (46,81,087)
22. தமிழகத்தில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 68.45 ஆண்டுகள்
23. தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் எத்தனை?
விடை : 13 மாவட்டங்கள்
24. தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
விடை : 234
25. தமிழகத்தில் உள்ள சட்டமன்ற நியமன உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு?
விடை : 1
26. தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் எவ்வளவு?
விடை : 12 துறைமுகங்கள் தமிழகத்தில் உள்ளன
27. பன்னாட்டு விமான நிலையம் எங்குள்ளது?
விடை : சென்னை
28. தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 71.54 ஆண்டுகள்
29. தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
விடை : 15979
30. தமிழகத்தில் உள்ள மொத்த நகர பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
விடை : 561
31. தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
விடை : 146
32. தமிழகத்தில் உள்ள ராஜ்யசபாவின் எண்ணிக்கை எவ்வளவு?
விடை : 18
33. தமிழகத்தில் உள்ள லோக்சபாவின் எண்ணிக்கை எவ்வளவு?
விடை : 39
34. தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது?
விடை : தர்மபுரி (64.71 சதவீதம்)
35. தமிழகத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?
விடை : பெரம்பலூர் 5,64,511
36. தமிழகத்தில் மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம்?
விடை : சென்னை
37. தமிழகத்தில் மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது?
விடை : நீலகிரி
38. தமிழகத்திலுள்ள மொத்த மாவட்டங்கள் எத்தனை?
விடை : 38
39. தமிழகத்தின் 37 வது மாவட்டம் எது?
விடை : இராணிப்பேட்டை
40. தமிழகத்தின் 38 வது மாவட்டம் எது?
விடை : மயிலாடுதுறை
40. தமிழகத்தின் கல்வியறிவு எவ்வளவு சதவீதம்?
விடை : 80.33 சதவீதம்
41. தமிழகத்தின் காடுகளின் பரப்பு எவ்வளவு?
விடை : 17.58 சதவீதம்
42. தமிழகததின் மாநில விலங்கு எது?
விடை : வரையாடு
43. தமிழகத்தின் முக்கிய 3 துறைமுகங்கள் எது?
விடை : சென்னை, எண்ணூர், தூத்துக்குடி
44. தமிழகத்தின் முக்கிய ஆறுகள் எது?
விடை : காவேரி, வைகை, தாமிரபரணி, பாலாறு, பவானி
45. தமிழகத்தின் முக்கியமான 6 விமானநிலையங்கள் எங்குள்ளது?
விடை : 1. சென்னை
2. கோவை
3. மதுரை
4. திருச்சி
5. தூத்துக்குடி
6. சேலம்
46. தமிழ்நாட்டில் 2011 கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் எவ்வளவு?
விடை : 999 பெண்கள் (1000 ஆண்கள்)
47. தமிழ்நாட்டில் காடுகள் அதிகமாக உள்ள மாவட்டங்கள் எவை?
விடை : 1. நீலகிரி
2. சேலம்
3. வேலூர்
4. கன்னியாக்குமாரி
48. தமிழ்நாட்டில் காடுகள் குறைவாக உள்ள மாவட்டங்கள் எவை?
விடை : 1. திருவாரூர்
2. இராமநாதபுரம்
3. தூத்துக்குடி
4. கடலூர்
49. தமிழ்நாட்டில் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட முதல் மாவட்டம் எது?
விடை : மதுரை (மேலக்கோட்டை – ஆண்டு 1997)
50. தமிழ்நாட்டின் இணைய தளம் எது?
விடை : www.tn.gov.in
51. தமிழ்நாட்டின் தலைநகரம் எது?
விடை : சென்னை
52. தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு?
விடை : ஒரு ச.கி.மீட்டருக்கு 555 பேர்
53. தமிழ்நாட்டின் மாநில அரசு சின்னம் எது?
விடை : திருவில்லிபுத்தூர் கோபுரம்
54. தமிழ்நாட்டின் மாநில எல்லையை குறிப்பிடுக?
விடை : கிழக்கே வங்காள விரிகுடா, மேற்கே கேரளா, வடக்கே ஆந்திரபிரதேசம், தெற்கே இந்தியபெருங்கடல்
55. தமிழ்நாட்டின் மாநில தமிழ்தாய் வாழ்த்து எது?
விடை : நீராடும் கடலுடுத்த
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |