இந்தியாவில் தங்கத்தை அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் எது தெரியுமா..!

Advertisement

Highest Gold Producing State in India in Tamil

நமது பொது அறிவு பதிவின் மூலம் தினமும் நாம் அனைவருக்கும் பயனுள்ள ஒரு பொது அறிவு தகவல்களை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவிலும் மிகவும் பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அது என்ன தகவல் என்றால் இந்தியாவில் தங்கத்தை அதிக அளவு உற்பத்தி செய்யும் மாநிலம் எது என்று தான் அறிந்துகொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது எந்த மாநிலம் அங்கு எவ்வளவு தங்கம் உற்பத்தி செய்யப்படுகிறது போன்ற தகவல்களை அறிந்து கொள்ளுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

இதையும் படித்துப்பாருங்கள்=> இந்தியாவில் உள்ள நாட்டு மாடு இனங்களின் வகைகள்

Largest Gold Production State in India in Tamil:

Largest Gold Production State in India in Tamil

பொதுவாக நாம் அனைவருக்குமே தங்கம் என்றால் மிகவும் பிடிக்கும். அப்படி அனைவருக்கும் பிடித்த தங்கத்தை இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிக அளவு உற்பத்தி செய்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா..?

 இந்தியாவில் தங்கத்தை அதிக அளவு உற்பத்தி செய்யும் மாநிலம் கர்நாடகா மாநிலம் தான். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தங்கத்தில் 80% அளவு தங்கம் இங்கு தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

எனவே தான் இதனை தங்க நிலம் என்று அழைக்கப்படுகிறது. கோலார் தங்க வயல்கள் மற்றும் ஹட்டி தங்க வயல்கள் என இரண்டு முக்கியமான தங்க வயல்கள் இங்கு அமைந்துள்ளது.  

இதையும் படித்துப்பாருங்கள்=> இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் 10 பொருட்கள்

Which State is the Largest Producer of Gold in India in Tamil:

கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில் ஹட்டி தங்கவயல் அமைந்துள்ளது. இது உலகில் உள்ள பழமையான தங்க சுரங்கங்களில் இதுவும் ஒன்று ஆகும். இது அசோகன் காலத்திற்கு முந்தையது மற்றும் கோலார் தங்க வயலுக்கு பிறகு இரண்டாவது ஆழமான தங்கச் சுரங்கம் இது தான்.

இந்த தங்கச் சுரங்கத்தில் தினமும் 2000 டன் தங்கம் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது, ​​ஹட்டி தங்கச் சுரங்கங்கள் இந்தியாவில் செயல்படும் ஒரே தங்கச் சுரங்கமாகும்.

பெங்களூரில் இருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் கோலார் என்னும் மாவட்டத்தில் அமைந்துள்ள கோலார் தங்க வயல்கள் உலகின் இரண்டாவது ஆழமான தங்கச் சுரங்கம் ஆகும். இது ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் மினி இங்கிலாந்து என்று அழைக்கப்பட்டது.

இதையும் படித்துப்பாருங்கள்=> இந்தியாவில் உள்ள அனல் மின் நிலையங்கள்

இங்கு உயர்தர தாது இருப்பு குறைந்தது, உற்பத்தி செலவு அதிகரிப்பு மற்றும் பல சமூக-பொருளாதார பிரச்சனைகள் காரணமாக கோலார் சுரங்கம் 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று மூடப்பட்டது.

தற்போது இந்தியாவில் தங்கம் உற்பத்தியில் முதலிடத்தில் இருப்பது கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள ஹட்டி தான்.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil

 

Advertisement