வீட்டுக்கு வீடு விமானம் வைத்திருக்கிறார்களா..? ஆச்சிரியமாக இருக்கே ..!

Advertisement

History of Residential Airpark in Tamil  

ஹாய் நண்பர்களே..! உங்கள் பக்கத்துவீட்டுக்காரர் என்ன வாகனம் வைத்திருக்கிறார்? சிடி 100 பைக் அல்லது ராயல் என்ஃபில்ட் பைக். அப்படியில்லை நீங்கள் கொஞ்சம் வசதியான பகுதியில் வசித்தீர்கள் என்றால் சிஃப்ட் கார் அல்லது ஆடி கார் கூட வைத்திருக்கலாம். ஆனால் உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் எதிர்வீட்டுக்காரர் ஏன் உங்கள் தெருவில் உள்ளவர்கள் அனைவரும் விமானம் வைத்திருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்.

அப்படி ஒரு பகுதி இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் ஆம். அந்த இடம் எங்கு அமைந்துள்ளது. இந்த வீட்டுக்கு ஒரு விமானம் என்ற திட்டம் எவ்வாறு உருவானது என்பதை பற்றியெல்லாம் இந்த பதிவில் காணலாம்.

Fly-in Communities in Tamil:

Fly-in communities in tamil

முதலில் இந்த வீட்டுக்கு ஒரு விமானம் என்ற திட்டம் எவ்வாறு உருவானது என்பதை பற்றி பார்க்கலாம். இரண்டாம் உலக போர் நடந்த காலகட்டம் அது. அந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் பல விமானத்தலங்கள் உருவானது.

குறிப்பாக 1939 முதல் 1946 காலக்கட்டத்தில் விமானிகளின் எண்ணிக்கை 36,000 முதல் 4 லட்சம் வரை அதிகரித்தது. இதனால் சிவில் ஏரோநாட்டிக்ஸ் நிர்வாகம் திட்டம் ஒன்றை வகுத்தது.

அது என்ன திட்டம் என்றால் நாடு முழுவதும் குடியிருப்பு விமான நிலையங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இராணுவத்தால் கைவிடப்பட்ட விமானங்களைப் பயன்படுத்தலாம்.

மேலும் அங்கு ஓய்வு பெற்ற விமானிகளைக் குடியமர்த்தலாம் என்பது தான் அந்த திட்டம். இப்படியாக தான் உருவாக்கப்பட்டது இந்த Fly-in-Communities.

விமான நிலையமே இல்லாத நாடுகள்

History of Residential Airpark in Tamil: 

அதன் பிறகு 1946ம் ஆண்டு கலிபோர்னியாவில் முதல் குடியிருப்பு விமான தளம் உருவாக்கப்பட்டது. பொதுவாக நாம் சாலைகளில் கார்களைக் கடந்து செல்வது போல அங்கு விமானங்களைக் கடந்து சென்றனர்.

வீட்டிற்குப் பக்கத்தில் ஷெட் அமைத்து அதில் விமானங்களை நிறுத்தி வைத்தனர். இந்த குடியிருப்புகளில் வசித்த அனைவருக்கும் விருப்பமான செயல் என்று ஒன்று இருந்தது அது தான் விமானப் பயணம்.

அட ஒரு பகுதி முழுவதும் இத்தனை விமானங்கள் இருந்தால் அந்த சாலையில் எப்படிச் செல்வது என்ற கேள்வி உங்களின் மனதில் எழும்பலாம். ஆனால் கவலை வேண்டாம் அங்கு உள்ள சாலைகள் மிக அகலமாக இருக்கின்றன.

இந்த தெருவில் நின்று எதிர் வீட்டுக்காரரிடம் பேசவேண்டுமென்றால் ஸ்பீக்கர் தான் உபயோகிக்க வேண்டியிருக்கும். இந்த தெருக்களுக்குக் கூட விமானம் தொடர்பான பெயர்கள் தான் சூட்டப்பட்டிருக்கின்றன. உதாரணமாக போயிங் சாலை என்பது ஒரு தெருவின் பெயர்.

விமானம் மேல் செல்லும் போது டார்ச் அடித்தால் பைலட்டுக்கு கண் கூசுமாம் இது யாருக்கு தெரியும்

History of Residential Airpark in Tamil: 

Fly-in communities patriya thagaval

 

இந்த விமானங்களை இதன் உரிமையாளர்கள் டாக்சியாக பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் அருகில் இருக்கும் விமான நிலையங்களுக்கு இவற்றைப் பயன்படுத்தி சென்று வருகின்றனர்.

இந்த பகுதி அமெரிக்காவின் ஏதோ ஒரு முலையில் உள்ள பகுதி என்று நினைக்க வேண்டாம். உலகில் மொத்தம் இந்த மாதிரியான விமானத்தள குடியிருப்புகள் 630 உள்ளது.

அதில் 610 குடியிருப்புகள் அமெரிக்காவிலேயே உள்ளது. ஒரு குடியிருப்பில் எத்தனை வீடுகள் இருக்கும் என்று சிந்தித்து பாருங்கள். உதாரணமாக ஃபுளோரிடாவிலுள்ள Spruce Creek எனும் பகுதியில் மட்டும் 650 விமானங்கள் உள்ளன.

இதில் தனியார் ஜெட் முதல் 1940-களின் போர்க்கால விமானங்கள் வரை அடங்கும். இது அமெரிக்காவின் பெரிய குடியிருப்பு விமானத்தலங்களில் ஒன்று ஆகும்.

 உலகில் இருக்கும் பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியல்

Fly-in Communities in Tamil:

வீட்டுக்கு வீடு விமானம் இருக்கும் இந்த பகுதிகளில் உணவகங்கள், கடைகள், விளையாட்டு அரங்கங்கள், கிளப்புகள் போன்ற மக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களும் உள்ளன.

ஆகா இது போன்ற பிரம்மாண்டங்கள் நிறைந்த இடத்தில் தான் நீங்கள் வசிக்க வேண்டும் என்று தோன்றுகிறதா? அது தான் முடியாது. இந்த பகுதியில் வசிக்கும் யாரோ ஒருவர் உங்களை அழைத்தால் மட்டும் தான் நீங்கள் அங்குச் செல்ல முடியும்.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil

 

Advertisement