மனிதன் எவ்வளவு காலம் தூங்காமல் இருக்க முடியும்..! | How Many Days Can a Human Live Without Sleep in Tamil..!
மனிதன் உயிர் வாழ்வதற்கு தண்ணீர், ஆக்சிஜன், உணவு போன்றவை எப்படி முக்கியமோ. அதே போல் தூக்கமும் முக்கியம். மனிதன் இரவில் தூங்கவில்லை என்றால் மறுநாள் வேலை பார்க்கமுடியாத அளவிற்கு சோம்பேறியாக ஆகிவிடுவான். எனவே மனிதன் ஒழுங்காக தூங்கினால் மட்டுமே அவனது உடல் புத்துணர்ச்சியாக இருக்கிறது இல்லையெனில் உடலில் நீர்சத்து குறைந்து உடல் சோம்பேறியாக மாறிவிடுகிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு மனிதன் எவ்வளவு காலம் தூங்காமல் இருக்க முடியும் என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!
இதையும் தெரிந்து கொள்ளுங்கள் ⇒ அதிக நேரம் தூங்கும் மக்கள் வசிக்கும் நாடுகள் எது உங்களுக்கு தெரியுமா..?
ஒரு மனிதன் எவ்வளவு காலம் தூங்காமல் உயிர் வாழ முடியும்..?
ஒரு மனிதனுக்கு தூக்கம் மிகவும் முக்கியமான ஒன்று. நல்ல தூக்கம் மனிதனுக்கு புத்துணர்ச்சியையும், புதிய ஆற்றலையும் அளிக்கிறது. நாம் நன்றாக தூங்கும் போது நம் உடலில் உள்ள சோம்பல் அனைத்தும் நீங்கி புத்துணர்ச்சியாக இருக்கிறது.
அதேபோல் ஒரு மனிதன் தூங்காமல் இருந்தால் அதன் விளைவாக அவன் எதிர்மறையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்.
இதையும் படியுங்கள் ⇒ இரவு சரியாக தூங்க மாட்டீர்களா..! அப்போ அவ்ளோ தான்..!
ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் கட்டாயமாக தூங்க வேண்டும். 8 மணி நேரம் தூங்குபவர்களின் உடல் நிலை தான் நன்றாக இருக்கிறது என்றும், ஒருவன் தூங்கவே இல்லை என்றால் அவன் உயிர் வாழ்வது கடினம் என்று கூறுகிறார்கள்.
எனவே ஒரு மனிதன் 11 நாட்கள் மட்டுமே தூங்காமல் உயிர் வாழ முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஒரு மனிதன் அவன் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை அவன் தூங்குவதற்காக செலவிடுகிறான் என்றும் கூறுகிறார்கள்.இந்த மாதிரி குப்புற படுத்து தூங்குவது நன்மையா தீமையா?
நீங்கள் முறையாக தூங்கவில்லை என்றாலோ அல்லது நீங்கள் குறைவான நேரத்தில் தூங்கினாலோ உங்களுக்கு நாளடைவில் தூக்கமின்மை பிரச்சனை வரக்கூடும்.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |