சிலந்திக்கு எத்தனை கண்கள் உள்ளன தெரியுமா..?

Advertisement

சிலந்திக்கு எத்தனை கண்கள் உள்ளன

நமக்கு தெரிந்த வரை மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் 2 கண்கள் மட்டும் தான் இருக்கிறது என்று நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படி கிடையாது. விலங்குகள் அனைத்தும் ஒன்றுபட்டு காணப்படுவதில்லை. ஒவ்வொரு உயிரினத்திற்கும் சில வேறுபாடுகள் இருக்கிறது. அதில் சிலந்தியும் ஒன்று. மற்ற உயிரினத்தை போல சிலந்தி கிடையாது. ஏனென்றால் சிலந்திக்கு 2 கண்கள் மட்டும் கிடையாது. அதனால் இன்று சிலந்திக்கு எத்தனை கண்கள் இருக்கிறது என்று தெரிந்துக்கொள்வோம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ வித்தியாசமாக தூங்கும் விலங்கு எது தெரியுமா..?

How Many Eyes in Spider in Tamil:

சிலந்தி பற்றிய தகவல்கள்

வடஅமெரிக்காவில் உள்ள ஃபிடிப்பஸ் ஆடாக்ஸ் என்ற குதிக்கும் சிலந்திக்கு உடல் முழுவதும் கண்கள் காணப்டுகிறது. இந்த சிலந்திக்கு மொத்தம் 4 ஜோடி கண்கள் அதாவது 8 கண்கள் இருக்கிறது. 

குதிக்கும் சிலந்தியின் கண்கள் கேமரா போன்ற சிறப்பினை பெற்றுள்ளது. அதுமட்டும் இல்லாமல் இதில் முன் பகுதியில் உள்ள 2 கண்கள் தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. 

இந்த 2 கண்களும் தான் எதிரே காணப்படும் நிறத்தை கண்டறிய உதவுகிறது. மற்ற 3 ஜோடி கண்களும் சிலந்தியின் பின் புறத்தில் நடப்பதை எச்சரிக்கிறது.

இத்தகைய குதிக்கும் சிலந்தியின் முன் பகுதியில் உள்ள இரண்டு கண்கள் தனக்கான உணவிற்கான தேடலை செய்கிறது. மற்ற மூன்று ஜோடி கண்களும் யாரும் தாக்க வராமல் எச்சரிக்கை கொடுப்பதற்கு தயாராக இருக்கும். 

குதிக்கும் சிலந்தியின் கண்கள் சிறியதாக இருந்தாலும் அதனுடைய பார்வைத்திறன் பெரிய பெரிய விலங்குகளுக்கு ஈடாக இருக்கிறது.

சிலந்தி பற்றிய தகவல்கள்:

jumping spider information in tamil

இந்த சிலந்தி 2 முதல் 20 மீட்டர் வரை இருக்கும். இத்தகைய சிலந்தியில் உள்ள 8 கண்கள் 360 டிகிரி அளவிலான கூர்மையான பார்வையை கொண்டுள்ளது.

சுவர்க்கோழி அல்லது சில்வண்டு பூச்சி இந்த இரண்டினை மட்டும் தான் குதிக்கும் சிலந்தி இரையாக எடுத்துக்கொள்கிறது.

குதிக்கும் சிலந்தி மற்ற சிலந்தியை போல அதனுடைய கால்களால் வலை பின்னுவதில்லை. அதுமட்டும் இல்லாமல் தனுக்கு தேவையான உணவை தேடவும் மற்றும் தன்னை தாக்க வருபவர்களிடமிருந்து காப்பாற்றி கொள்வது இது மட்டுமே குதிக்கும் சிலந்தியின் செயல் ஆகும்.

அதுபோல இதனுடைய முன் பகுதியில் உள்ள இரண்டு கண்களை மூடினாலோ அல்லது அதனை மறைத்தலோ அதனால் செயல்பட முடியாது. பின் புறத்தில் இருக்கும் கண்களின் செயல்பாட்டை வைத்து மட்டும் செயல்பட தொடங்கும். 

இதையும் படியுங்கள்⇒ உலகில் இரவே இல்லாத 6 நாடுகளை பற்றி உங்களுக்கு தெரியுமா..?

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil
Advertisement