கரப்பான் பூச்சிக்கு எத்தனை இதயம் உள்ளன தெரியுமா..?

How Many Hearts Does a Cockroach Have in Tamil 

How Many Hearts Does a Cockroach Have in Tamil 

இன்றைய பதிவில் நாம் அனைவரின் வீட்டிலேயும் அங்கும் இங்குமாய் உலாவிக்கொண்டிருக்கும் கரப்பான் பூச்சி பற்றிய சில தகவல்களை தான் தெரிந்துகொள்ள போகின்றோம். பொதுவாக நாம் அனைவருமே கரப்பான் பூச்சியை பார்த்து இருப்போம். ஆனால் அதனை பற்றிய முழுவிவரங்களும் தெரிந்திருக்காது. நீங்கள் நினைக்கலாம் சாதாரண கரப்பான் பூச்சித்தானே அதனை பற்றி தெரிந்துகொள்ள என்ன இருக்கிறது என்று.

ஆனால் கரப்பான் பூச்சியிடம் மனிதன் பார்த்து வியக்கும் வண்ணம் பல ஆச்சரியங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பற்றி தான் இந்த பதிவில் காண இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து கரப்பான் பூச்சி பற்றிய பல ஆச்சரியமூட்டும் தகவல்களை அறிந்துகொள்ளுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> நீண்ட நாட்கள் உயிர்வாழும் 5 உயிரினங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Information About Cockroaches in Tamil:

Information About Cockroaches in Tamil

கரப்பான் என்பது பூச்சி இனங்களில் ஒன்று ஆகும். இது உலகில் உள்ள துருவப் பகுதிகள் தவிர்த்து மற்ற எல்லாப் பகுதிகளிலும் வீடுகளில் வாழும் ஒரு உயிரினமாக காணப்படுகிறது.

ஆறு குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3,490 கரப்பான் இனங்கள் இப்பொழுது வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. கரப்பான் பூச்சிகள் எதையும் சாப்பிடக் கூடிய அனைத்துண்ணிகள் ஆகும்.

Information About Cockroaches in Tamil:

இதற்கு ஹீமோகுளோபின் என்ற நிறமி இல்லாததால் இவற்றின் இரத்தம் வெள்ளை நிறமாக காணப்படுகிறது. கரப்பான் பூச்சிகளின் நரம்பு மண்டலம் எளிமையான முறையில் செயல்படுகிறது.

அதாவது இதன் உடல் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் அதைக்கட்டுப்படுத்தும் நரம்பணுத்திரள்கள் உள்ளன. எனவே தலையை வெட்டினாலும் கூட கரப்பான் பூச்சிகள் இரண்டு வாரத்திற்கு உயிர்வாழுமாம்.

இதையும் படித்துப்பாருங்கள்=> சிலந்திக்கு எத்தனை கண்கள் உள்ளன தெரியுமா..?

மேலும் அணுகுண்டு வெடிப்பையும் தாண்டி கரப்பான்கள் வாழும் என்று நம்பப்படுகிறது. கரையான்கள் கரப்பான்களில் இருந்து பரிணாமம் அடைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

How Many Hearts Does a Cockroach Have in Tamil:

கரப்பான் பூச்சியின் உடல் பொதுவாக பழுப்பு மற்றும் கருப்பு நிறங்களில் காணப்படுகிறது. இதன் அளவு 0.6-7.6 செ.மீ வரை இருக்கும். கரப்பான் பூச்சியின் இதயம் அடிவயிற்றின் முதுகெலும்புக் கோட்டுடன் இணைந்து ஒரு நீளமான தசைக் குழாயைக் கொண்டுள்ளது.

இது காலப்போக்கில் புனல் வடிவ அறைகளாக மாற்றப்படுகிறது. கரப்பான் பூச்சிக்கு 13 அறைகள் கொண்ட குழாய் இதயம் உள்ளது. இந்த 13 அறைகளுக்கும் ஆஸ்டியா எனப்படும் ஒரு ஜோடி பிளவின் மூலம் ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தம் பாய்ச்சப்படுகிறது.

இதையும் படியுங்கள்⇒ வித்தியாசமாக தூங்கும் விலங்கு எது தெரியுமா..?

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil