சிப்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும்?

How many years does it take for an oyster to grow a pearl

சிப்பி முத்துக்கள் பற்றிய சில தகவல்

இயற்கையின் அதிசயங்களில் ஒன்று முத்து. எங்கோ கடல் அடியில் தானாக வளரும் இந்த முத்து பெண்களின் கழுத்துக்கு அழகு ஆபரணமாக விளங்குகிறது. தங்கம், வைரம், வெள்ளி, பவளம் என்று பலவகையான ரத்தினங்கள் இருந்தாலும். அதிகமான பெண்கள் விரும்பும் ஒன்று முத்து. தமிழ் திரைப்படத்தில் முத்துக்கு என்று நிறைய பாடல்களும் உள்ளது. முத்து மணிகள் பார்ப்பதற்கு அழகாகவும், பளபளப்பாகவும் கண்களை கவரும் வகையில் இருக்கும். இந்த முத்துக்கள் இயக்கையான முறையில் விளைவதற்கு எத்தனை ஆண்டுக்கு ஆகும் என்று உங்களுக்கு தெரியுமா? அப்படி தெரியாது என்றால் இந்த பதிவை படித்து தெரிந்துகொள்ளுங்கள். மேலும் முத்து எப்படி உருவாகுகிறது என்பதை பற்றியும் படித்தறியலாம் வாங்க.

சிப்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும்? | How many years does it take for an oyster to grow a pearl?

விடை: 15 ஆண்டுகள்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஆமையின் ஆயுட்காலம் எவ்வளவு தெரியுமா..?

முத்து எப்படி உருவாகிறது:oyster pearl

சிப்பியின் உடலுக்குள் புகுந்துவிடும் அந்நிய பொருட்களிலிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள சிப்பியின் உடலுக்கு நடக்கும் ஒரு உயிரியல் செயல்முறையின் விளைவே முத்துக்கள் ஆகும்.

பிலாம்ஸ் எனப்படும் மட்டிகள் மற்றும் மசில்ஸ் எனப்படும் கிளிஞ்சல்கள் போன்றவைகளும் முத்துக்களை உருவாக்கக்கூடியவை என்றாலும் அவை மிக அரிதாக தான் முத்துக்களை உருவாகிறது.

ஆனால் Oyster எனப்படும் சிப்பிகள் நன்நீர் மற்றும் உப்புநீர் ஆகிய இரண்டிலும் முத்துக்களை அதிகம் உற்பத்தி செய்கிறது.

சிப்பி வளரும்போது மென்சில் என்றழைக்கப்படும் அதன் உள்ளுறுப்பு ஒன்று சிப்பி உட்கொள்ளும் உணவுகளில் உள்ள தாதுக்களை பயன்படுத்தி நெக்கர் என்பதும் பொருட்களை உற்பத்திசெய்கிறது. இந்த நெக்கர் எனும் பொருளே சிப்பியின் ஓட்டை உருவாக்கும் பொருள் ஆகும். எப்போதாவது மணல் துகள்கள் அந்நிய பொருட்கள் சிப்பியின் உடலுக்கு சென்று மெண்டில் உறுப்பிற்கும், ஓட்டிற்கும் இடையில் சிக்கிக்கொள்ளும் இவ்வாறு சிக்கிக்கொள்ளும் அந்த அந்நிய பொருளானது, சிப்பிக்கு ஒரு உறுத்தலை ஏற்படுத்தும், ஆக சிப்பி இந்த உறுத்தலில் இருந்து விடுபட சிப்பியின் இயற்கையான எதிர்விளைவாக உறுத்தலை தூண்டும் அந்த அந்நிய பொருளை சிப்பி ஓட்டை உருவாக்கும் நெக்கர் என்ற பொருள் முழுமையாக மூடிக்கொள்கிறது.

இதன் காரணமாக சிப்பியின் ஒட்டுக்கும், மெண்டில் உறுப்புக்கும் இடையில் சிக்கி இருக்கும் மணல் துகள் உள்ளிட்ட அந்நிய பொருள் வலுவலுப்பு தன்மையை பெற்றுவிடுவதால் சிப்பி உறுத்தலில் இருந்து விடுபடுகிறது. இப்படி தான் சிப்பிக்குள் முத்துக்கள் உருவாகிறது.

நாம் முத்து நகைகளில் பார்க்கும் முத்துக்கள்அழகிய உருண்டை வடிவத்தில் இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் சிப்பிக்குள் இருக்கும் அனைத்து முத்துக்களும் ஒரே வடிவத்தில் இருப்பதில், அதாவது சில முத்துக்கள் சீரற்ற வடிவங்களிலும் உருவாகின்றன.

மேலும் பெரும்பாலான மக்கள் முத்துக்கள் வெள்ளை நிறத்தில் தான் இருக்கும் என்று நினைக்கின்றன. ஆனால் முத்துக்கள் வெள்ளை நிறம் மட்டும் இன்றி பழுப்பு, சிவப்பு, நீலம், பச்சை மற்றும் கருப்பு நிறங்களிலும் கிடைக்கின்றன. இந்த முத்துக்களை பண்ணைகளில் செயற்கையாவும் இயற்கை முத்துக்களை உற்பத்தி செய்கின்றன. அதாவது சிப்பிகளை பிடித்து அதன் சிறு பிளவு ஏற்படுத்தி உறுத்தலை ஏற்படுத்தும் பொருட்களை சிப்பியின் மெண்டில் உறுப்பில் வைத்து மூடிவிடுகின்றன. சிப்பி அந்த உறுத்தலில் இருந்து விடுபட முத்துக்களை உருவாகிறது. இப்படி செயற்கையாக தயாரிக்கப்படும் இயற்கை முத்துக்களை Cultured pearl என்று அழைப்பார்கள். Cultured pearl மற்றும் Natural pearl ஆகிய இரண்டுமே சம அளவிலான தரம்வாய்ந்த முத்துக்கள் ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த உலகில் நதிகள் இல்லாமல் நாடு உள்ளது..? இது யாருக்கு தெரியும்..!

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil