இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் யார்?

Indhiyavin Muthal Pen Kudiyarasu Thalaivar

இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் | Indhiyavin Muthal Pen Kudiyarasu Thalaivar

வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவர் யார் என்று தெரிந்துக்கொள்ளலாம். பொது அறிவு கேள்வியானது அனைவரின் வாழ்க்கைக்கும் மிக முக்கியமான ஒன்று. அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் பொது அறிவு சம்பந்தமான வினா விடைகள் பற்றி தெரிந்துக்கொள்வது அவசியம். தொடர்ந்து நமது பதிவில் பலவகையான பொது அறிவு (GK in Tamil) சார்ந்த விஷயங்களை பதிவு செய்து வருகின்றோம். இந்த பதிவில் “இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர்” என்று அழைக்கப்படுபவர் யார் என்று தெரிந்துகொள்ளலாம்.

இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர் யார்?

Indhiyavin Muthal Pen Kudiyarasu Thalaivar:

விடை: இந்திய நாட்டின் முதல் பெண் குடியரசு தலைவர் திருமதி. பிரதீபா தேவிசிங் பாட்டில். 

பிறப்பு:

பிரதீபா பாட்டில் என்பவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜல்கோன் மாவட்டத்தில் இருக்கும் நத்கோன் என்ற கிராமத்தில் டிசம்பர் 19-ம் தேதி 1934-ஆம் ஆண்டு பிறந்தார்.

திருமணம்:

திருமதி. பிரதிபா பாட்டில் அவர்கள், ஜூலை 7, 1965 ஆம் ஆண்டு, டாக்டர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத் என்பவரை மணமுடித்தார். அவர்களுக்கு ராஜேந்திர சிங் என்ற ஒரு மகனும், ஜோதி ரத்தோர் என்ற ஒரு மகளும் பிறந்தனர்.

பிரதீபா தேவிசிங்க் பாட்டில்:

அவரின் தந்தை பெயர் ஸ்ரீ நாராயண ராவ். ஜல்கானில் உள்ள எம். ஜே. கல்லூரியில் முதுகலைமாணி (எம். ஏ.) பட்டம் பெற்றார். பின்னர் அவர் மும்பையில் உள்ள அரசு சட்ட கல்லூரியில் எல்.எல்.பி. பட்டம் பெற்று வக்கீலாகவும் பயிற்சி பெற்றார்.

மகாராஷ்டிரா மாநில அவையில் உறுப்பினராக 1962 முதல் 1985 வரை இருந்தவர். நாடாளுமன்ற உறுப்பினராகவும் 1991 முதல் 1996 வரையில் இருந்தவர். 2004 ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் மாநில ஆளுநராக பணியாற்றினார்.

பிரதீபா தேவிசிங்க் பாட்டில் 2004-ஆம் ஆண்டு நவம்பர் 08 அன்று ராஜஸ்தான் மாநில கவர்னராக பொறுப்பு ஏற்று அதன் பிறகு 2007-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23-ஆம் தேதி வரை அந்த பதவியில் இருந்தார்.

அதன் பின்பு 2007-ஆம் ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி முதல் 2012-ஆம் ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி வரை இந்திய நாட்டின் குடியரசு தலைவராக பதவி ஏற்றவர்.

இந்தியாவின் முதல் சபாநாயகர்
இந்தியாவின் முதல் பிரதமர் யார்?

புகழ்:

பிரதிபா பாட்டில் அவர்கள், இந்தியாவின் வளர்ச்சிக்காக முக்கிய பங்கு வகித்ததோடு மட்டுமல்லாமல், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காகவும், சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டோரின் பொது நலனுக்காகவும் அரும்பாடு பாடுபட்டார்.

மும்பை மற்றும் தில்லியில், வேலை பார்க்கும் பெண்களுக்காக தங்கும் விடுதிகளும், கிராமப்புற இளைஞர்களுக்காக ஜல்கானில் ஒரு பொறியியல் கல்லூரியும், பெண்களின் முன்னேற்றத்திற்காக பல நலன்புரி நடவடிக்கைகளில் ஈடுபடும் ‘ஷ்ரம் சாதனா டிரஸ்ட்’ என்ற அமைப்பையும் நிறுவினார்.

ஏழை குழந்தைகள் மற்றும் பின்தங்கிய வகுப்பு குழந்தைகளுக்காகவும், பள்ளிகள் அமைத்துக் கொடுத்தார். மகாராஷ்டிராவில், அமராவதியிலுள்ள ஏழை மற்றும்  பெண்களுக்கு இசை, கணினி மற்றும் தையல் வகுப்புகளுக்கும் ஏற்பாடு செய்தார்.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil