இந்தியாவின் முதல் பெண் பிரதமர் யார்?

Advertisement

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் | Indhiyavin Muthal Pen Pirathamar

Indhiyavin Muthal Pen Pirathamar: வணக்கம் நண்பர்களே இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் TNPSC, UPSC போன்ற அரசு நடத்தும் அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் பயன்படும் வகையில் பல பொது அறிவு சார்ந்த கேள்விகளை எங்களது பொதுநலம்.காம் பதிவில் பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் நாம் இந்த பதிவில் இந்தியாவின் முதல் பெண் பிரதமர் யார் என்ற தகவலையும், அவர்கள் பற்றிய சில குறிப்புகளையும் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் யார்?

இந்தியாவின் முதல் பெண் பிரதமர்

விடை: இந்தியாவின் முதல் பெண் பிரதமர் திருமதி. இந்திரா காந்தி

பிறப்பு – Indhiyavin Muthal Pen Pirathamar:

இவர் 1919-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்ஷினி. இவருடைய தந்தையின் பெயர் ஜவகர்லால் நேரு, தாயின் பெயர் கமலா நேரு ஆவார். இளம் வயதிலேயே தாயை இழந்து பள்ளி, கல்லூரிகளில் தனது வாழ்க்கையை தொடங்கினார்.

கல்வி:

ஜெனிவாவிலுள்ள எக்கோல் இண்டர் நேஷனல், பம்பாய் மற்றும் பூனாவில் உள்ள பீப்பிள்ஸ் ஒன் ஸ்கூல், பிரிஸ்டாலிலுள்ள பேட்மிட்டன் ஸ்கூல், விஷ்வபாரதி, சாந்தி நிகேதன், ஆக்ஸ்போர்ட் சோமார் போன்ற கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்றார்.

திருமணம்:

1942-ம் ஆண்டில் ஃபெரோஸ் காந்தி என்பவரை மணந்தார். இவருக்கு இரண்டு மகன்கள். இவருடைய குழந்தைகளின் பெயர் ராஜிவ் காந்தி, சஞ்ஜய் காந்தி

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் யார்?

1964 முதல் 1966 தந்தையின் மறைவிற்கு பிறகு லால் பஹதூர் சாஸ்திரியின் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராகப் பணியாற்றினார். பின் ஜனவரி மாதம் 1966-ம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்றார். இவர் 1977-ம் ஆண்டு வரை இந்தியாவின் பிரதமராக இருந்தார்.

அரசியல் சிறப்புகள்:

  • அவர் ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் உள்ள வங்கிகளை தேசிய மயமாக்கினார். இவர் பிரதமராக இருந்த போது நீர்ப்பாசனம் மற்றும் அதிக விளைச்சல் தரும் விதைகள் போன்றவற்றை அறிமுகப்படுத்தி இந்திய விவசாயத்திற்கு உறுதுணையாக இருந்தார்.
  • 1974-ம் ஆண்டு அணுசக்தி திட்டத்தை அறிமுகப்படுத்தி அதனையும் ஊக்குவித்தவர்.
  • 1967, 1972, 1977, 1980 ஆகிய வருடங்களில் அணுசக்தி மற்றும் விண்வெளி அமைச்சராக இருந்தார். வெளியுறவுத்துறை அமைச்சராக 1967-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி முதல் 1969-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி வரை பொறுப்பு வகித்தார்.
  • 1969-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ம் தேதி முதல் 1970-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ம் தேதி வரை நிதி அமைச்சராக பொறுப்பில் இருந்தார்.
  • ஜூன் மாதம் 1970-ம் ஆண்டு முதல் 1973-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை நிதியமைச்சராக இருந்தார்.
  • மார்ச் மாதம் 1971-ம் ஆண்டு முதல் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராகப் பொறுப்பில் இருந்தார்.
  • ஜனவரி மாதம் 1980-ம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்.

இறப்பு -Indhiyavin Muthal Pen Pirathamar:

  • இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்த பொது ஊழல் மற்றும் சர்வாதிகார ஆட்சி என்ற வதந்தியால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு அதன் பிறகு வந்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.
  • 1980-ல் மீண்டும் இந்தியாவின் பிரதமராக ஆனார். பின் அவருடைய அவசர முடிவு மற்றும் அரசியலில் ஏற்பட்ட பிழை காரணமாக அவருக்கு அரசியலில் சில எதிரிகள் உருவாகின.
  • படுகொலையின் காரணமாக 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13-ம் தேதி  மரணமடைந்தார்
இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் யார்?
இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர் யார்?

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil

 

Advertisement