இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர் யார்?

indhiyavin muthal pen sabanayagar name tamil

Indhiyavin Muthal Pen Sabanayagar Name Tamil

சபாநாயகர் என்றால் என்ன?

சபாநாயகர் என்பவர் சட்டசபையின் தலைவர் ஆவார். அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மேலும் அந்த சபையை நடத்துவதற்கு அவரே முழு அதிகாரத்தை பெற்றவர். எந்த ஒரு மசோதாக்களும் அரசாங்க மசோதாவாக இருந்தாலும் தனி நபர் மசோதாவாக இருந்தாலும் சரி அவருடைய அனுமதி பெற்றே கொண்டு வர இயலும். உறுப்பினர்கள் கேள்விகள் எழுப்புவதும் அவருடைய அனுமதி பெற்றே எழுப்ப வேண்டும். எந்த ஒரு மசோதாவும் வெற்றி பெற்றதாகவோ அல்லது தோல்வி அடைந்ததாகவோ சபாநாயகரே அறிவிக்க வேண்டும். வாக்கெடுப்பை அவரே நடத்த வேண்டும். பொதுவாக அவருடைய சட்டசபை நடவடிக்கைகளில் எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது. இத்தகைய சிறப்புமிக்க பணிகளை செய்யும் பதவிதான் சபாநாயகர் பதவி ஆகும். அந்த வகையில் இந்த பதிவில் இந்தியாவின் முதல் லோக்சபாவின் பெண் சபாநாயகர் யார் என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம்.

இந்தியாவின் முதல் லோக் சபாவின் பெண் சபாநாயகர் யார்?

meira kumar

விடை: மீரா குமார் தான் இந்தியாவின் முதல் லோக்சபாவின் பெண் சபாநாயகர் ஆவார்.

மீரா குமார் பற்றிய மேலும் சில தகவல்கள்:

  1. இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்
  2. 1945-ஆம் ஆண்டு மார்ச் 31-யில் பாட்னாவில் பிறந்தார்
  3. முன்னாள் துணை பிரதமர் பாபு ஜகஜீவன் ராமின் மகள்
  4. பள்ளிக் கல்வியை டேராடூன் மற்றும் ஜெய்ப்பூரில் படித்தவர்
  5. டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர்
  6. ஐஎப்எஸ் படித்து பல நாடுகளில் பணியாற்றியவர்
  7. 1985ல் உ.பி. மாநிலத்தில் பிஜ்நோர் தொகுதியில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  8. மயாவதி மற்றும் ராம் விலாஸ் பஸ்வானை தேர்தலில் தோற்கடித்தவர்
  9. 8, 11, 12-வது லோக் சபா தேர்தலில் டெல்லி கரோல் பாக் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்
  10. 2004-09 வரை காங்கிரஸ் தலைமையிலான அரசில் சமூக நீதித்துறை அமைச்சராக பணியாற்றினார்
  11. லோக் சபாவின் முதல் பெண் சபாநாயகர்
  12. 2009 – 14 வரை சபாநாயகராக லோக் சபாவில் பணியாற்றினார்


இந்தியாவின் முதல் சட்டமன்ற பெண் சபாநாயகர் யார்?

விடை: சானோ தேவி தான் இந்தியாவின் முதல் சட்டமன்ற பெண் சபாநாயகர் ஆவார்.

சானோ தேவி பற்றிய சிறு குறிப்பு:

  1. இந்தியாவின் முதல் சட்டமன்ற பெண் சபாநாயகரான சானோ தேவி ஜூன் 1, 1901-ஆம் ஆண்டு முல்தான் என்னும் நகரில் பிறந்தார்.
  2. அரியானா சட்டமன்றத்தின் சபாநாயகராக டிசம்பர் 6, 1966 முதல் மார்ச் 17, 1967 வரை  இருந்தார்.
  3. அதன் பிறகு பஞ்சாப் சட்டமன்றத்தின் துணை சபாநாயகராக மார்ச் 19, 1962 முதல் அக்டோபர் 31, 1966 வரை இருந்தார்.
இந்தியாவின் முதல் சபாநாயகர்
இந்தியாவின் முதல் பிரதமர் யார்?

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil