இந்தியாவின் முதல் பெண்மணிகள் | Indhiyavin Muthal Pengal
அரசு பொது தேர்வுகள், போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் பல மாணவர்களுக்கு பயன்படும் வகையில் நாங்கள் உங்கள் அனைவருக்கும் எளிதில் புரிந்து கொள்வதற்கும், மறக்காமல் நினைவில் வைத்து கொள்வதற்கும் ஏற்ற வகையில் எளிமையாக புரிந்துகொள்ளும்படியான பொது அறிவு சார்ந்த கேள்வி பதில்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இந்த தொகுப்பில் இந்தியாவில் முதன் முதலில் சாதனை படைத்த பெண்களின் பட்டியலை கொடுத்துள்ளோம் அதை படித்து அனைவரும் பயன்பெறுங்கள்.
இந்தியாவின் முதல் பெண்கள் – Indhiyavin Muthal Pen Sadhanaiyalargal in Tamil:
- இந்தியாவின் முதல் பெண் பிரதமர் யார்?
விடை: இந்திரா காந்தி
2. இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் யார்?
விடை: சுசேதா கிருபளானி இவர் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சர் ஆவார்.
3. இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் யார்?
விடை: சரோஜினி நாயுடு
4. இந்தியாவின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி யார்?
விடை: பாத்திமா பீவி
5. இந்தியாவின் முதல் பெண் மாநில தலைமை செயலாளர் யார்?
விடை: லட்சுமி பிரானேஷ்
இந்தியாவின் முதல் பெண் சாதனையாளர்கள்:
6. இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதர் யார்?
விடை: விஜயலட்சுமி பண்டிட்
7. இந்தியாவின் முதல் பெண் காபினெட் அமைச்சர்
விடை: ராஜ்குமாரி அம்ரித் கௌர் (சுகாதார அமைச்சர் 1957 வரை பொறுப்பு வகித்தார்)
8. இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் யார்?
விடை: கார்னிலியா சொராப்ஜி
9. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் யார்?
விடை: ஆனந்தி கோபால் ஜோஷி
10. இந்தியாவின் முதல் பெண் பொறியாளர் யார்?
விடை: ஏ. லலிதா
இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் யார்? |
இந்தியாவின் முதல் பெண்கள்:
11. இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி யார்?
விடை: அன்னா ராஜம் ஜார்ஜ் (மல்ஹோத்ரா)
12. இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி யார்?
விடை: கிரண் பேடி
13. இந்தியாவின் முதல் பெண் நீதிபதி யார்?
விடை: அன்னா சாண்டி
14. இந்தியாவின் முதல் பெண் பத்திரிக்கையாளர்
விடை: சுவர்ணகுமாரி தேவி (ராம்பூதோதானி பத்திரிக்கை)
15. இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முதல் பெண் விமானி யார்?
விடை: கேப்டன் துர்கா பானர்ஜி
பெண் சாதனையாளர்கள் பட்டியல்:
16. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் பெண்
விடை: கமல்ஜித் சந்து
17. இந்தியாவின் முதல் பெண் மேயர் யார்?
விடை: தாரா செரியான்
18. இந்தியாவின் முதல் பெண் துணைவேந்தர்
விடை: ஹன்சா மேத்தா
19. இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் யார்?
விடை: வசந்தகுமாரி
20. இந்தியாவின் முதன் முதலில் விண் வெளிப்பயணம் மேற்கொண்ட பெண்மணி
விடை: கல்பனா சாவ்லா
இந்தியாவின் பெண் ஆளுநர்கள் பட்டியல் |
இந்தியாவின் முதல் பெண் சாதனையாளர்கள்:
21. இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர்
விடை: சுரோகா யாதவ்
22. இந்தியாவின் முதல் பெண் டி.ஜி.பி
விடை: காஞ்சன் சௌத்ரி பட்டாச்சார்யா
23. இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர்
விடை: மீராகுமார்
24. பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண் இசை கலைஞர்
விடை: எம்.எஸ். சுப்புலட்சுமி
25. இந்தியாவில் நோபல் பரிசை பெற்ற முதல் இந்திய பெண் யார்?
விடை: அன்னை தெரசா
இந்தியாவின் முதல் பெண்மணிகள் – Indhiyavin Muthal Pen Sadhanaiyalargal in Tamil:
26. இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் யார்?
விடை: பிரதிபா பாட்டில்
27. இந்தியாவின் முதல் எவரெஸ்ட் சிகரம் ஏறிய பெண்
விடை: செல்வி பச்சேந்திரி பால்
28. இந்தியாவின் முதல் பெண் அதிக நேரம் விமானம் ஒட்டி சாதனை செய்தவர்
விடை: திருமதி துர்பா பானர்ஜி
29. ஆங்கில கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்திய வீராங்கனை யார்
விடை: ஆர்த்தி சாஹா
30. இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் அரசி யார்?
விடை: ரஸியா பேகம்
இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்கள் |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |