சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
பொதுநலம் நண்பர்களுக்கு வணக்கம்.. இந்த பதிவில் பொது அறிவு சம்பந்தமான இந்திய நாட்டின் முதல் சட்ட அமைச்சர் யார் என்று தெரிந்துக்கொள்ளுவோம். இது மாதிரியான பொது அறிவு சார்ந்த கேள்விகள் பல போட்டி தேர்வுகளில் கேட்கப்படும். அதற்கு பயனுள்ளதாக இந்த பதிவு இருக்கும். இந்தியாவில் பல சட்ட அமைச்சர்கள் இருந்தாலும் முதன் முதலில் சட்ட அமைச்சராக இருந்தது என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயமாகும். அந்த வகையில் சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார் என்று படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!
இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர் யார்? |
இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?:
விடை | டாக்டர் பி ஆர் அம்பேத்கர். |
டாக்டர் பி ஆர் அம்பேத்கர்:
அம்பேத்கர் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் 14-ஆம் தேதி ஏப்ரல் 1891 – 6 டிசம்பர் 1956 இந்தியாவின் முதல் சட்டஅமைச்சராக இருந்தவர். அம்பேத்கர் மிகவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக காலம் முழுவதும் போராடி உரிமைகளை பெற்று கொடுத்தவர். அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பையும் ஏற்படுத்தி கொடுத்தவர்.
இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் வரைவுக்குழுவுக்குத் தலைமை தாங்கி இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவர் சமூக சீர்திருத்தவாதி அம்பேத்கர். இராம்ஜி சக்பால் இராணுவப்பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பீமாராவ் இராம்ஜி இளம் வயதில் பல்வேறு துன்பங்களை அனுபவித்தார்.
இந்தியாவின் முதல் சபாநாயகர் |
அம்பேத்கர் உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் முனைவர் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதே நேரத்தில், சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடினார். இந்திய நாட்டு மக்களுக்காக மிகவும் போராடியவர் டாக்டர் அம்பேத்கர்.
அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |