இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் அதிகாரி

Indhiyavin Muthal Thalaimai Therthal Athikari

Indhiyavin Muthal Thalaimai Therthal Athikari

நமது இந்திய நாடு ஒரு குடியரசு நாடாகும். இந்தியா பெருநிலம் ஆகும் அதாவது தெற்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே அரபிக் கடல், கிழக்கே வங்காள விரிகுடா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் எல்லை நாடுகளாக மேற்கே பாக்கிஸ்தான், வடக்கே பூட்டான், மக்கள் சீனக் குடியரசு, நேபாளம், கிழக்கே வங்காளதேசம், மியான்மர் ஆகியவை அமைந்துள்ளன. இந்தியாவை பற்றி கூறவேண்டும் என்றால் நிறைய சொல்லிக்கொண்டே போலாம். சரி இந்த பதிவில் இந்தியா பற்றிய பொது அறிவு விஷயமான ஒன்றை பற்றி தெரிந்து கொள்வோமா? அதாவது இந்த பதிவில் இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் அதிகாரி யார் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

India First Election Commissioner Name in Tamil

இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் அதிகாரி யார்?

விடை: சுகுமார் சென் என்பவர் இந்தியாவின் முதல் தேர்தல் அதிகாரி ஆவார் இவரை பற்றிய சிறு குறிப்புகளை இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

சுகுமார் சென்:

சுகுமார் சென் என்பவர் இந்திய அரசு ஊழியர் ஆவர், மேலும் இவர் இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் அதிகாரியாக அழைக்கப்படுகிறார்.

இவர் தலைமை தேர்தல் அதிகாரியாக 1950-ம் ஆண்டு மார்ச் 21 தேதி முதல், 1958 டிசம்பர் 19 வரை பணியாற்றினார்.

இவரது தலைமையின் கீழ், தேர்தல் ஆணையம் 1951-52 மற்றும் 1957-யில் சுதந்திர இந்தியாவின் முதல் இரண்டு பொதுத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியது.

இந்திய அரசியலமைப்பு அட்டவணைகள்

பிறப்பு:

சுகுமார் சென், ஜனவரி 2, 1899 அன்று ஒரு பெங்காலி பைத்யா-பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவர் அரசு ஊழியர் அக்ஷோய் குமார் சென்னின் மூத்த மகன்.

கல்வி:

கொல்கத்தாவின் பிரசிடென்சி கல்லூரி மற்றும் இலண்டன் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். இவருக்குக் கணிதத்தில் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

இவர் ஆற்றிய பணிகள்:

இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் ஆணையராக அழைக்கப்படும் சுகுமார் சென் அவர்கள் 1921-ஆம் ஆண்டில், சென் இந்தியக் குடிமைப் பணியில் சேர்ந்தார், மேலும் பல்வேறு மாவட்டங்களில் ஐ.சி.எஸ் அதிகாரியாகவும், நீதிபதியாகவும் பணியாற்றினார்.

1947-ஆம் ஆண்டில், மேற்கு வங்கத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இது பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு ஐ.சி.எஸ் அதிகாரி அடையக்கூடிய மிக உயர்ந்த பதவியாகும் தலைமைத் தேர்தல் ஆணையரின் பிரதிநிதியாக அனுப்பப்பட்டபோதும் அதே தகுதி நிலையில் பணியாற்றி வந்தார்.

பத்ம பூசண் முதன் முதலில் பெற்றவர்களில் சுகுமார் சென்னும் ஒருவர்.

திருமண வாழ்கை:

இவர் கவுரி என்பாரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் மகள்களும் உள்ளனர்.

பத்திரிகை துறையின் உயரிய விருது
இந்தியாவின் முதல் சபாநாயகர்

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil