இந்தியாவின் முதல் துணை பிரதமர் யார்? | Indiavin Muthal Thunai Pradhamar
இந்தியாவின் முதல் துணை பிரதமர்: பொதுநலம் வாசகர்களுக்கு அன்பான வணக்கம்.. இன்றைய பதிவில் இந்தியாவின் முதல் துணை பிரதமர் (thunai prathamar) யாரென்று படித்து தெரிந்துக்கொள்ளலாம். பொது அறிவு சம்பந்தமான கேள்விகள் அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் ஒவ்வொரு தேர்வாளர்களுக்கும் நீங்கள் எளிமையாக படித்து தேர்வுகளில் வெற்றி பெற தினம்தோறும் எங்கள் வெப்சைட்டை பார்வையிடவும்.
இந்தியாவின் முதல் சபாநாயகர் பெயர் என்ன? |
இந்தியாவின் முதல் துணை பிரதமர் யார்:
விடை: சர்தார் வல்லபாய் பட்டேல்.
முதல் துணை பிரதமர் பற்றி சிறு குறிப்பு:
இவர் ஒரு இந்திய விடுதலை போராட்ட வீரர் ஆவார். குஜராத் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார்.
பிறப்பு:
அக்டோபர் 31-ஆம் தேதி குஜராத்தில் 1875-ஆம் ஆண்டு விவசாயக் குடும்பத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தார். சிறு வயதிலிருந்தே படிப்பில் அதிக நாட்டத்துடன் சிறந்து விளங்கியவர்.
இவருக்கு சோமாபாய், நர்சிபாய் மற்றும் விதால்பாய் பட்டேல் என்ற மூன்று அண்ணன்களும், காசிபாய் என்ற தம்பியும் தைபா என்ற தங்கையும் உடன் பிறந்தவர்கள் ஆவார். அவரது தந்தை சுவாமிநாராயணனின் சம்ப்ரதாயின் ஒரு பக்தராக இருந்தார்.
இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர் யார்? |
சர்தார் வல்லபாய் பட்டேலின் சொந்த ஊர்:
சர்தார் வல்லபாய் படேலின் சொந்த ஊர் கரம்சாத் ஆகும்.
கல்வி:
தன்னுடைய 25-ம் வயதில் ‘டிஸ்ட்ரிக்ட் பிளீடர்’ படிப்பை முடித்துவிட்டு கோத்ராவில் வழக்கறிஞராக தொழில் செய்யத் ஆரம்பித்தார். பிறகு 1910 ஆம் ஆண்டு லண்டன் சென்று பட்டம் படித்து முதல் மாணவராக தேர்வானார்.
பிறகு நாடு திரும்பிய அவர் அகமதாபாத்தில் வழக்கறிஞராக வேலை செய்ய தொடங்கினார். அகமதாபாத்தில் வழக்கறிஞர் தொழில் நடத்திய போது உள்ளூர் மக்களின் பிரச்சனைகளுக்காக மிகவும் போராடி, அவர்களுடைய இதயங்களில் இடம் பிடித்தார் சர்தார் வல்லபாய் பட்டேல்.
நினைவு சின்னம்:
இவருடைய நினைவாக குஜராத் மாநிலத்தில் உள்ள நர்மதா மாவட்டத்தில் பாயும் நர்மதா நதிக்கரையில் சர்தார் வல்லபாய் பட்டேலின் 143 வது பிறந்த நாளில் ஒற்றுமைக்கான சிலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த சிலையே உலகின் மிக உயரமான சிலையாகும். சிலையின் அடியானது 182 அடியாகும்.
இந்தியாவின் முதல் பெண் நீதிபதி யார்? |
விருதுகள்:
- பார்டோலி என்ற இடத்தில் விவசாயிகள் நலன் காக்க நடைபெற்ற மற்றொரு சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் படேலுக்கு வெற்றி கிடைத்தது.
- படேலுக்கு பாரத ரத்னா விருது 1991-ல் வழங்கப்பட்டது.
மனைவியின் இறப்பு:
புற்றுநோய்க்கான முக்கிய அறுவை சிகிச்சை செய்ய பம்பாயில் (மும்பை) உள்ள மருத்துவமனையில் 1909ம் ஆண்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தும் அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததால் மருத்துவமனையில் படேலின் மனைவி உயிரிழந்தார்.
இறப்பு:
தன்னுடைய 75-ம் வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்தார் சர்தார் வல்லபாய் பட்டேல்.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |