இந்திய அரசியலமைப்பு TNPSC Questions..!
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொது அறிவு பதிவில் நாம் பார்க்க இருப்பது இந்திய அரசியலமைப்பு பற்றிய பொது அறிவு வினா விடைகள் பற்றி தான். இன்றைய காலக்கட்டத்தில் பல போட்டி தேர்வுகள் நடைபெறுகின்றன. அப்படி நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் நமது இந்திய அரசியலமைப்பு பற்றிய ஒரு வினா கூட இல்லாமல் இருக்காது. அப்படி போட்டி தேர்வுகளில் கேட்கப்பட்டும் சில முக்கியமான இந்திய அரசியலமைப்பு பற்றிய பொது அறிவு வினா விடைகளை பற்றி பார்க்கலாம். போட்டித் தேர்வுகளுக்காக நீங்கள் உங்களை தயார் செய்து கொண்டிருந்தீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
இந்திய அரசியலமைப்பு பற்றிய பொது அறிவு வினா விடைகள்:
- மனிதன் ஒரு அரசியல் மிருகம் என்று கூறியவர் யார்.?
விடை : அரிஸ்டாட்டில்
2. இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள்.?
விடை : 26 ஜனவரி 1950
3. இந்திய அரசியலமைப்பின் தந்தை யார்.?
விடை : Dr.அம்பேத்கர்
4. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை பற்றி கூறும் அரசியல் பிரிவு.?
விடை : பாதுகாப்பு சரத்து – 14
5. மாநில அரசின் தலைவர் என அழைக்கப்படுபவர்.?
விடை : ஆளுநர்
6. முதல் இந்திய குடியுரிமை சட்டம் வெளியான ஆண்டு.?
விடை : 1955
7. இந்திய அரசியலமைப்பில் எத்தனை அட்டவணைகள் உள்ளது.?
விடை : பன்னிரண்டு அட்டவணைகள்
8. தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படும் நாள்.?
விடை : ஜனவரி 25
9. இந்திய உச்சநீதிமன்றம் அமைந்துள்ள இடம்.?
விடை : புதுடெல்லி
10. குடியரசுத் தலைவர் நீக்கம் பற்றி கூறும் அரசியல் பிரிவு.?
விடை : சரத்து – 61
11. இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழி.?
விடை : ஹிந்தி
12. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எத்தனையாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளை பற்றி கூறப்பட்டுள்ளது.?
விடை : 8-வது அட்டவணையில்
13. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை எத்தனை.?
விடை : 22
14. இந்திய தேசியக் கீதத்தை பாடும் கால அளவு .?
விடை : 52 வினாடிகள்
15. “உள்ளாட்சி அமைப்பின் தந்தை” என அழைக்கப்படுபவர் யார்.?
விடை : ரிப்பன் பிரபு
16. மதுரை உயர்நீதிமன்ற கிளை தொடங்கப்பட்ட ஆண்டு.?
விடை : 2004
17. சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை நீதிபதி யார்.?
விடை : ஹரிலால் J கனியா
18. மக்களாட்சி(Democracy) எனும் சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது.?
விடை : கிரேக்கம்
19. எந்த நாட்டிலிருந்து அடிப்படை உரிமைகள் பெறப்பட்டது.?
விடை : அமெரிக்கா
20. தீண்டாமை ஒழிப்பு பற்றி கூறும் அரசியல் பிரிவு.?
விடை : சரத்து – 17
21. தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநர்.?
விடை : பாத்திமா பீவி
22. இந்தியாவின் முதல் பெண் ஆளுநர்.?
விடை : சரோஜினி நாயுடு
23. எந்த ஆண்டு டெல்லி தேசிய தலைநகர் என்ற நிலையைப் பெற்றது.?
விடை : 1991
24. இந்தியாவின் முதல் குடிமகன் என அழைக்கப்படுபவர் யார்.?
விடை : குடியரசுத் தலைவர்
25. லோக் அதாலத் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு.?
விடை :1987
TNUSRB பொது அறிவு வினா விடைகள்
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |