India Border Name in Tamil
India Border Name in Tamil: பொதுநலம்.காம் வாசகர்களுக்கு எங்களது அன்பான வணக்கங்கள்.. நாங்கள் சுவாரசியமான பல பதிவுகளை பதிவு செய்து வருகின்றோம். அந்த வகையில் இந்த பதிவில் இந்தியா எல்லை கோடுகளின் பெயர்களை பட்டியலிட்டுள்ளோம். இது ஒரு பொது அறிவு (Gk in Tamil) சார்த்த விஷயம் என்பதால் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் அனைவருக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க இந்தியா சீனா எல்லை கோடு பெயர் என்ன? (india china border name in tamil) மற்றும் நமது இந்தியா நாட்டிற்கும் மற்ற நாட்டிற்கும் உள்ள எல்லைக்கோடுகளின் பெயர்களை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
இந்திய எல்லை கோடுகள் TNPSC வினா விடை?
1 இந்தியா-சீனா எல்லை கோடு பெயர் என்ன?
விடை: மெக்மோகன் எல்லைக் கோடு
2. இந்தியா-பாகிஸ்தான் எல்லை கோடு பெயர் என்ன?
விடை: ரெட் கிளிஃப் எல்லைக் கோடு
3. இந்திய-வங்கதேச எல்லைக் கோடு பெயர் என்ன?
விடை: புர்பச்சால் எல்லைக் கோடு
4. இந்தியா-பூடான் எல்லைக்கோடு பெயர் என்ன?
விடை: இந்தோ-பூடான் எல்லைக் கோடு
5. இந்தியா-ஆப்கானிஸ்தான் எல்லைக்கோடு பெயர் என்ன?
விடை: துரந்த் கோடு
6. இந்தியா-இலங்கை எல்லை கோடு பெயர் என்ன?
விடை: பாக் சலசந்தி
7. இந்தியா-மியான்மர் எல்லை கோடு பெயர் என்ன?
விடை: இந்தோ-பர்மா எல்லை
8. இந்தியா-நேபாளம் எல்லை கோடு பெயர் என்ன?
விடை: எல்லை கோடு
இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் பெயர் என்ன? |
இந்தியாவின் எல்லை பற்றிய தகவல்கள்:
- இந்திய 7 நாடுகளுடன் தனது நில எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. அவை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனா, பூடான், நேபாளம், மியான்மர் மற்றும் வங்காளதேசம் ஆகியவை ஆகும்.
- இந்தியா தனது எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மிகப்பெரிய நாடு சீனா.
- இந்தியா தனது எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மிக சிறிய நாடு பூடான்.
- இந்தியா வங்காள தேசத்துடன் தான் மிக நீளமான எல்லையைக் கொண்டுள்ளது. (சுமார் 4,096.7 கி.மீ). மிகக் குறைந்த எல்லையைக் கொண்டுள்ள நாடு ஆப்கானிஸ்தான் (சுமார் 106 கி.மீ).
- மிக அதிக நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இந்திய மாநிலம் ஜம்மு-காஷ்மீர்.
- மிக அதிக மாநிலங்களுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இந்திய மாநிலம் – உத்திரப்பிரதேசம் (எட்டு மாநிலங்கள்).
- ஒரேயொரு மாநிலத்துடன் மட்டும் எல்லையைக் கொண்டுள்ள இந்திய மாநிலங்கள் சிக்கிம் (மேற்கு வங்காளம்) மற்றும் மேகாலயா (அஸ்ஸாம்)
கடற்பரப்பு. - இந்தியாவில் எட்டு மாநிலங்கள் கடற்கரை பரப்பு பெற்றுள்ளன. அவை குஜராத், மகாராஷ்டிரம், கோவா, கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒடிஷா மற்றும் மேற்கு வங்காளம்.
- மிக அதிகமான கடற்கரை பெற்றுள்ள மாநிலம் குஜராத்.
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் உயர் நீதிமன்றம் |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |