இந்தியப் பெருங்கடல் பெயர்கள்..!

Advertisement

இந்திய பெருங்கடலை இப்படியும் சொல்வார்கள் | இந்திய பெருங்கடல் மற்றொரு பெயர்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் இந்தியப் பெருங்கடல் பெயர்கள் (இந்திய பெருங்கடல் மற்றொரு பெயர்) பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். உலகில் அட்லாண்டிக் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல் மற்றும் அண்டார்டிக் பெருங்கடல் என்று ஐந்து பெருங்கடல்கள் உள்ளது. பெருங்கடல் என்பது நீர் கோளத்தின் முக்கியமான கூறு ஆகும். பூமியின் உயிர்கோளத்தில் உலக பெருங்கடல்கள் முக்கிய அங்கமாக இருக்கிறது.

அவற்றில் ஒன்று தான் இந்திய பெருங்கடல். பெருங்கடலுக்கு வேறொரு பெயர்களும் உள்ளது. அதனை பற்றி இப்பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளோம். எனவே, நீங்கள் இந்திய பெருங்கடல் மற்றொரு பெயர் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

கடலுக்கு வேறு பெயர் என்ன..?

இந்திய பெருங்கடல் மற்றொரு பெயர்:

இந்திய பெருங்கடல் மற்றொரு பெயர்

  •  இந்திய பெருங்கடலின் மற்றொரு பெயர் இந்து மகா சமுத்திரம் ஆகும்.  இது உலகின் மூன்றாவது பெரிய நீர்த்தொகுதியாகும். இது உலகின் பரப்பில் 20% கொண்டுள்ளது. இதன் வட பகுதியில் இந்தியா, ஆசியா, மேற்கில் ஆப்பிரிக்கா, கிழக்கில் ஆஸ்திரேலியா, தெற்கில் தெற்குப் பெருங்கடல் ஆகியன இவற்றின் எல்லைகளாக அமைந்துள்ளது.
  • இந்திய பெருங்கடலை கிழக்குப் பெருங்கடல் என்றும் அழைப்பார்கள். இந்திய பெருங்கடல் முழுவதும் கிழக்கு அரைக்கோளத்தில் உள்ளது.
  • 1515 ஆம் ஆண்டில் இருந்தே இந்திய பெருங்கடல் என்று அறியப்படுகிறது. அதன் பிறகு இந்திய கிழக்குப் பெருங்கடல் என்று சான்றளிக்கப்பட்டது.
  • மறுபுறம், 15 ஆம் நூற்றாண்டில் இந்தியப் பெருங்கடலுக்குப் பயணித்த சீன ஆய்வாளர்கள் அதனை மேற்கு பெருங்கடல் என்றும் அழைத்து வந்தார்கள். அதுமட்டுமில்லாமல், பண்டைய கிரேக்க புவியியலில் , கிரேக்கர்களால் அறியப்பட்ட இந்தியப் பெருங்கடல் பகுதி ஆனது எரித்ரேயன் கடல் என்றும் அழைக்கப்ட்டதாம்.
  • இந்திய பெருங்கடல் ஆனது, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு மிக அருகில் உள்ளது.
  • இந்திய பெருங்கடலில் சாம்பெசி, சட்-அல்-அரபு, சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா, ஐராவதி ஆறு, போன்றவை கலக்கிறது.

காவிரி ஆறு உற்பத்தியாகும் இடம் எது.?

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement