India Porulatharathin Thanthai in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்..! தினமும் நம் பதிவின் வாயிலாக பல பொது அறிவு தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவின் வாயலாக (India Porulatharathin Thanthai in Tamil) இந்திய பொருளாதாரத்தின் தந்தை யார் என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். சரி உங்களுக்கு தெரியுமா இந்திய பொருளாதாரத்தின் தந்தை யார் என்று..? நம்மில் பலரும் இந்த கேள்விக்கான விடையை தேடி இருப்பீர்கள். ஆகவே இந்த பதிவின் வாயிலாக இந்திய பொருளாதாரத்தின் தந்தை யார் என்பதை பற்றி விரிவாக காணலாம் வாங்க.
லோக்சபாவிற்கு செல்லாத இந்திய பிரதமர் யார்
இந்திய பொருளாதாரத்தின் தந்தை யார்..?
பிவி நரசிம்மராவ் என்பவர் தான் இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
இவர் 1921 ஆம் ஆண்டு ஜுன் 28 -ம் தேதி தெலுங்கானாவின் முன்னால் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள நர்சம்பேட் மண்டல் என்ற லக்னேபள்ளி கிராமத்தில் பிறந்தார். பின்னர் உசுமானியா பல்கழைக்கழகத்தில் இளங்கலை படித்து முடித்தார். பின்னர் மும்பை பல்கலைக்கழகம் மற்றும் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலை பட்டம் பெற்றார்.
தெலுங்கு, மராத்தி, ஒரியா, சமஸ்கிருதம், பிரெஞ்ச், ஆங்கிலம், உருது, ஜெர்மன், ஸ்பானிஷ், ஹிந்தி, அரபு ஆகிய மொழிகள் இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை பி.வி.நரசிம்ம ராவ் சரளமாகப் பேசக்கூடிய மொழிகள் ஆகும்.
நாடாளுமன்றத் தேர்தலில் நரசிம்மராவ் பெற்ற வெற்றி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்டது. அவர் “சமீபத்திய இந்தியாவின் கட்டிடக் கலைஞர்” மற்றும் “இந்திய பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார்.
பதவியை ராஜினாமா செய்த முதல் இந்திய பிரதமர் யார்
அரசியல் வாழ்க்கை:
- வழக்கறிஞராக பணியாற்றி வந்த நரசிம்மராவ் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
- இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த தலைவர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
- இவர் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நந்தியாலை தோற்கடித்தார்.
- பின் தேர்தலில் களம் இறங்கிய பி.வி.நரசிம்மராவ் அவர்கள் 1962 முதல் 1971 வரை மத்திய அமைச்சரவையில் பொறுப்பு வகித்தார்.
- பின்னர் 1971 முதல் 1973 வரை ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
- பின்னர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து மத்திய அமைச்சராக பதவி வகித்து வந்தார்.
- 1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- அதாவது இவர் 1991 முதல் 1996 வரை இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராகப் பணியாற்றினார்.
- இந்திய சுதந்திர இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்று இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினராக இருந்தார்.
- இந்திய பொருளாதாரத்தின் தந்தை ஒரு அரசியல்வாதி மற்றும் ஒரு வழக்கறிஞர் ஆவார்.
- இந்திய பொருளாதாரத்தின் தந்தை இந்தியாவில் ஒரு பெரிய பொருளாதார மாற்றத்திற்கு காரணமாக இருந்தார்.
இந்திய குடியரசு தலைவர் பெயர் என்ன
இந்திய பொருளாதாரத்தின் தந்தை என்று அழைக்க காரணம்:
பி.வி.நரசிம்ம ராவ் அவர்கள் 1991 ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதில் இவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆகவே தென் இந்தியாவைச் சேர்ந்த முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்றார் பி.வி.நரசிம்ம ராவ் அவர்கள்.
பி.வி.நரசிம்ம ராவ் அவர்கள் இந்தியாவின் அரசியல் அமைப்புகளுக்கு உரிய சட்ட அங்கீகாரம் வழங்க பாடுபட்டார். அதனை அடுத்து பி.வி.நரசிம்ம ராவ் அவர்கள் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்த போது, பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இதன் காரணமாக அவர் இந்தியாவின் தந்தை என்று பி.வி.நரசிம்ம ராவ் அனைவராலும் அழைக்கப்படுகிறார்.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |