இந்திய தேசிய நூலகம் அமைந்துள்ள இடம் | India Thesiya Noolagam in Tamil

Indhiya Thesiya Noolagam in Tamil

இந்திய தேசிய நூலகம் | Indhiya Thesiya Noolagam in Tamil

நம்முடைய கல்வி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், அறிவை வளர்ப்பதற்கும் பெரிதும் பயன்படுவது நூலகம். எவ்வித பாகுபாடும் இன்றி அனைவரும் புத்தங்களை படிப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் பாடசாலைக்கு அடுத்து மிகவும் உதவுவது நூலகம் தான். அப்படிப்பட்ட நம்முடைய தேசிய நூலகம் எங்குள்ளது என்பதை தெரிந்து கொள்வது அவசியம் அல்லவா. அந்த வகையில் நாம் இந்த பதிவில் இந்தியாவின் தேசிய நூலகம் எங்கு அமைந்துள்ளது என்று பார்க்கலாம் வாங்க.

இந்திய தேசிய நூலகம் அமைந்துள்ள இடம் எது?

விடை: இந்திய தேசிய நூலகம் கொல்கத்தாவில் உள்ளது.

தேசிய நூலாகம் பற்றிய குறிப்புகள்:

 • கொல்கத்தாவில் அமைந்துள்ள இந்த தேசிய நூலகம் தான் இந்தியாவின் மிக பெரிய நூலகமாக கருதப்படுகிறது.
 • இந்த நூலகம் கொல்கத்தாவில் அலிபூர் என்னும் இடத்தில் உள்ளது. இது 30 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு உள்ளது.
 • தேசிய நூலகம் பொது நூலகமாக 1830-ம் ஆண்டில் செயல்பட துவங்கியது. இந்த தேசிய நூலகத்துடன் அபிஷியல் இம்பிரியல் நூலகத்தை இணைத்து தி இம்பீரியல் நூலகத்தை 1903-ம் ஆண்டில் கர்சன் பிரபு என்பவர் உருவாக்கினார்.
 • இந்த நூலகம் பிப்ரவரி மாதம் 1-ம் தேதி 1953-ம் ஆண்டு தேசிய நூலகமாக செயல்பட தொடங்கியது. பதினைந்து லட்சம் நூல்கள் 1990-ம் ஆண்டு வரை இருந்தது, இப்போது இந்த நூலகத்தில் 22 லட்சம் நூல்கள் உள்ளன.
 • நூல்களை சேகரிக்கும் நான்கு நூலகங்களில் இதுவும் ஒன்று. இந்திய மொழிகளில் எழுதப்பட்ட நூல்கள் மற்றும் உலக மொழிகளில் எழுதப்பட்ட நூல்களும் இங்கு உள்ளன. வங்காள மொழி, இந்தி, தமிழ் போன்ற இந்திய மொழிகளில் எழுதப்பட்ட அதிக நூல்கள் இந்த நூலகத்தில் அமைந்துள்ளது. பிற நாட்டு மொழிகளான ரஸ்யா, அரபி, பிரஞ்சு மொழிகளில் எழுதப்பட்ட நூல்களும் உள்ளன.
 • இந்த நூலகத்தில் தமிழின் அறிய சுவடிகள் மற்றும் நூல்கள் சேகரிப்பதோடு மட்டும் இல்லாமல் இந்திய அரசின் ஆவணங்கள், ஐக்கிய நாட்டு சபையின் ஆவணங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான நூல்களும் சேமிக்கப்படுகின்றன.

இந்தியாவின் தேசிய நூலக தினம் கொண்டாடப்படும் நாள்:

 • ஆகஸ்ட் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது?

விடை: உலகின் மிகப்பெரிய நூலகம் அமெரிக்காவில் உள்ளது.

 • அமெரிக்காவில் இருக்கும் லைப்ரரி ஆப் காங்கிரஸ் நூலகமே உலகின் மிக பெரிய நூலகம் ஆகும்.
 • இந்த நூலகம் 1800-ம் ஆண்டு தொடங்கபட்டது. இந்த நூலகத்தில் ஆறு கோடி கையெழுத்து பிரதிகளும் லட்சக்கணக்கான நூல்களும் உள்ளன.

இந்தியாவின் மிகப்பெரிய நூலகம்:

 • 1836-ம் ஆண்டு கொல்கத்தாவில் நிறுவப்பட்ட தி நேஷனல் லைப்ரரி ஆப் இந்தியா.
 • 1951-ம் ஆண்டு புது தில்லியில் நிறுவப்பட்ட தில்லி பொது நூலகம்.
 • 1918-ம் ஆண்டு தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட சரஸ்வதி மஹால் லைப்ரரி அல்லது டான்ஜர் மஹாராஜா சர்பிஜிஸ் சரஸ்வதி மஹால் லைப்ரரி.
 • 2010-ம் ஆண்டு தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட ANNA மைய நூலகம் சென்னை.
 • 1864-ம் ஆண்டு உத்தர பிரதேஷ் மாநிலத்தில் நிறுவப்பட்ட அலஹாபாத் பொது நூலகம்.
 • 1950-ம் ஆண்டு குஜராத்தில் நிறுவப்பட்ட திருமதி ஹாசன் மேஹ்டா லைப்ரரி.
 • 1896-ம் ஆண்டு நிறுவப்பட்ட கன்னி மாரா பொது நூலகம் சென்னையில் உள்ளது.
 • 1829-ம் ஆண்டு கேரளாவில் நிறுவப்பட்ட மாநில மத்திய நூலகம்.
 • 1829-ம் ஆண்டு ஹைதராபாத்தில் நிறுவப்பட்ட மாநில மத்திய நூலகம்.
இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்கள்
இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகம்

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil