இந்தியர்களே ஆரம்பித்த முதல் வங்கி எது?

Advertisement

Indian Started First Bank Name in Tamil | இந்தியர்கள் ஆரம்பித்த முதல் வங்கி  | Indiyargal Aramitha Muthal Vangi

இன்றைய பொது அறிவி தலைப்பில் நாம் பார்க்கவிருப்பது என்னவென்றால் நமது இந்திய நாட்டில் இந்தியர்களினால் ஆரம்பித்த முதல் வங்கி எது என்பதை பற்றியும். வங்கி பற்றிய தகவல்களையும் இங்கு நாம் படித்து தெரிந்து கொள்வோம். படித்து பயன்பெறுங்கள் நன்றி.

பொது அறிவு வினா விடைகள் பற்றி தெரிந்துகொள்வது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. எனவே, நீங்கள் தெரிந்துகொள்ளும் வகையில் நம் பொதுநலம் பதிவில் பல்வேறு பொது அறிவு வினா விடைகளை கொடுத்துள்ளோம். அந்த வகையில் இன்றைய பதிவில் இந்தியர்களே ஆரம்பித்த முதல் வங்கி எது? என்பதையும் அதனை பற்றிய சில விவரங்களையும் பின்வருமாறு தொகுத்து விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

இந்தியர்களே ஆரம்பித்த முதல் வங்கி எது? | India First Bank Name in Tamil:

விடை: பஞ்சாப் தேசிய வங்கி அல்லது பஞ்சாப் நேசனல் வங்கி

பஞ்சாப் நேசனல் வங்கி இந்தியாவில் செய்யப்பட்டு வரும் பொது வங்கி ஆகும். இந்தியாவில் செயல்பட்டுவரும் வரும் நான்கு பெரிய வங்கிகளில் பஞ்சாப் தேசிய வங்கியும் ஒன்றாகும் இந்த வங்கி இந்தியாவில் 1894-ஆம் ஆண்டு புதுதில்லியில் தொடங்கப்பட்ட வங்கி ஆகும். இந்த வங்கி, இந்தியாவின் 764 நகரங்களில், 6,300-க்கும் அதிகமான கிளைகளையும், 7,900-க்கும் அதிகமான ஏடிஎம்களையும் கொண்டுள்ளது. இவ்வங்கி இந்தியா முழுவதும் 80 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.



வங்கி பற்றிய சில தகவல்கள்:

  • 1656-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு தனியார் வங்கியில் இருந்து துவங்கப்பட்ட உலகின் முதல் மைய வங்கியான ஸ்வீடன் நாட்டு ரிக்ஸ் வங்கி ஆகும்.
  • 1864-ஆம் ஆண்டு வங்கிக் கலையின் அடிப்படையில் பணத்தை வெளியிட்ட முதல் மைய வங்கி இங்கிலாந்து வங்கியாகும்.
  • 1881, ஜனவரி, 01 – அன்று, மணி ஆர்டர் அனுப்பும் முறை தொடங்கப்பட்டது.
  • 1897 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டு ரிக்ஸ் வங்கி பணத்தை வெளியிடுவதற்கான முழு உரிமையைப் பெற்றது.
  • 1999, ஜனவரி, 01 – அன்று யூரோ நாணயம் (ஐரோப்பா) அறிமுகமானது.


இந்திய வங்கிகள் வரலாறு:

  • 1770 ஆம் ஆண்டு, வெள்ளையர்கள் ஆட்சியில் நிறுவப்பட்ட ஹிந்துஸ்தான் வங்கி (Bank of Hindustan) இந்தியாவின் முதல் வங்கி ஆகும்.
  • 1894 ஆம் ஆண்டு, முதன் முதலாக இந்தியர்களால் ஆரம்பிக்கப்பட்ட வங்கி – பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகும்.
  • 1921 ஆம் ஆண்டு பிரசிடென்சி வங்கிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு இந்தியன் இம்பீரியல் வங்கி (Imperial Bank of India) உருவாக்கப்பட்டது.
  • 1934 இல், டாக்டர் அம்பேத்கரின் ‘பணத்தின் சிக்கலும் அதன் தீர்வும்’ (The Problem of the Rupee and its solution) என்ற ஆராய்ச்சிக் கட்டுரையின் அடிப்படையில்தான் இந்திய ரிசர்வ் வங்கியின் அடிப்படைச் சட்டம், உருவாக்கப்பட்டது.
  • 1935 ஆம் ஆண்டு, இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்டது.
  • 1955 ஆம் ஆண்டு, இந்தியன் இம்பீரியல் வங்கி (Imperial Bank of India) மாற்றப்பட்டு இந்திய ஸ்டேட் வங்கி (State Bank of India) உருவாக்கப்பட்டது, பின்னர் தேசியமயமாக்கப்பட்டது.
  • 1964 – ஆம் ஆண்டு, இந்திய தொழில் வளர்ச்சி வங்கி (IDBI) தொடங்கப்பட்டது.
  • 1982 ஆம் ஆண்டு – தேசிய விவசாய கிராமப்புற வளர்ச்சி வங்கி (NABARD – National Bank for Agricultural and Rural Development) துவங்கப்பட்டது.
  • 2020, செப்டம்பர், 19 – இந்திய வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.


இந்தியாவில் உள்ள வங்கிகளின் அமைப்பு பிரசிடென்சி வங்கிகளால் கட்டுப்படுத்தப்பட்டும், ஆதிக்கம் செலுத்தப்பட்டும் வந்தது.

அக்காலகட்டத்தில் மூன்று பிரசிடென்சி வங்கிகள் இருந்தன.

  • வங்காள வங்கி (Bank of Bengal) – 1809
  • மும்பை வங்கி (Bank of Bombay) – 1840
  • சென்னை வங்கி (Ban of Madras) – 1843
    இவ்வங்கிகள் பிரசிடென்சி வங்கிகள் என்று அழைக்கப்பட்டன.
இது
போன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>
GK  in Tamil
Advertisement