இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் யார் தெரியுமா?

Advertisement

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் இவர் தான்?

இன்றைய காலத்தில் பலருக்கும் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்காக தினமும் செய்தித்தாள், செய்திகள் போன்றவற்றை பார்ப்பார்கள். இதில் ஏதும் வேலைவாய்ப்புகள் ஏதும் வந்திருக்கிறதா என்று பார்ப்பார்கள். அப்படி ஒரு வேலை வாய்ப்பு செய்திகளை பார்த்து விட்டார்கள் என்றால் அதற்கான முயற்சிகளை எடுப்பார்கள்.  அதில் எல்லா தேர்வுகளிலும் பொது அறிவு வினா விடைகள் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது.

நம்முடைய பதிவில் தினந்தோறும் பொது அறிவு சார்ந்த கேள்விகளும் அதற்கான பதில்களும் பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதவில் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் யார் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்:

 இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஆவார்  

பிறப்பு:

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்

இவர் புதுக்கோட்டையில் 1866-ம் ஆண்டு ஜூலை 30 அன்று  நாராயணசுவாமி ஐயர், சந்திராம்மாள் ஆகிய இருவருக்கும் மகளாக பிறந்தார். இவருடைய தந்தை புதுக்கோட்டையிலிருந்த மகாராஜா கல்லூரியின் முதல்வராக பணிபுரிந்தார். தந்தை கண்டிப்பும் ஒழுக்கமும் கொண்ட குணமுடையவர். இவருடைய அம்மா சந்திராம்மாள் அவர்கள் இசை வேளாளர் குலத்தைச் சேர்ந்தவர்.

பள்ளி வாழ்க்கை:

முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் படிப்பில் சிறந்து விளங்கியதால் ஆசிரியர்களுக்கு பிடித்த மாணவராக இருந்தார். இவருக்கு ஆசிரியர்கள் ஆங்கிலம் சொல்லி கொடுத்தார்கள். கல்லூரி வாழ்க்கைக்காக மகாராஜா கல்லூரில் சேர விரும்பினார். ஆனல் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. அவர் ஒரு  பெண், மற்றும் அவருடைய அம்மா பிராமணராக இல்லாததால் சீட் கிடைக்கவில்லை. ஆனால் மகாராஜாவின் உதவியுடன் கல்லூரியில் சேர்ந்தார். சென்னை மருத்துவக் கல்லூரியில் ஆண்கள் மட்டுமே படித்த நிலையில் முத்துலட்சுமி ரெட்டி தான் முதல் பெண் மருத்துவர். இவர் தான் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ஆவார்.

1912-ல் மருத்துவப் படிப்பை முடித்த அவர் 1914-ல் டாக்டர் சந்தார ரெட்டியை திருமணம் செய்து கொண்டார். முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் சொந்தகார பெண் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இதனால் அவர் புற்றுநோய் மருத்துவத்தை கற்று கொள்ள வேண்டும் என்று நினைத்து இங்கிலாந்துக்குச் சென்று ராயல் கேன்சர் மருத்துவமனையில் அதற்கான கல்வியை கற்று கொண்டார்.

இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் யார்

சாதனை:

சென்னையிலுள்ள அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, ஆதரவற்ற கைம்பெண்களுக்கு இருப்பிடம் தரும் அவ்வை இல்லம் ஆகியவை தோன்றக் காரணமாக இருந்தவர். சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள கஸ்தூரிபாய் மருத்துவமனை கட்டுவதற்கும் காரணமும் இவர் தான். 1952-ல் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அடிக்கல் நாட்டிய அடையாறு புற்று நோய் மருத்துவமனை 1954 ஜூன் 18-ல் செயல்படத் தொடங்கியது.

விருதுகள்:

முத்துலட்சுமியின் சேவைகளுக்காக மத்திய அரசு 1956 இல் பத்ம பூஷன் விருது கொடுத்து கௌரவித்தது

இறப்பு:

முத்துலட்சுமி 1968-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் தேதி இந்த உலகத்தை விட்டு பிரிந்தார்.

இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி யார்

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil

 

Advertisement