இந்திய நாட்டின் தேசிய நதி எது? | National River of India in Tamil
நண்பர்களுக்கு வணக்கம் இன்றைய பொது அறிவு பகுதியில் இந்திய நாட்டின் தேசிய நதி எது என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.. தேசிய வகைகளில் தேசிய சின்னம், தேசிய கொடி, தேசிய விலங்கு, தேசிய நாட்காட்டி, தேசிய பறவை, தேசிய மொழி போன்ற பல வகைகள் இருக்கிறது. இது மாதிரியான பல கேள்விகள் போட்டி தேர்வுகளில் பெரும்பாலும் கேட்கப்படுகிறது. சரி வாங்க இந்த பதிவில் இந்திய நாட்டின் தேசிய நதி எது என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..
இந்தியாவின் தேசிய மரம் எது? |
இந்தியாவின் தேசிய நதி எது?
விடை: இந்திய நாட்டின் தேசிய நதியாக கருதப்படுவது கங்கை நதியாகும்.
கங்கை நதி பற்றிய தகவல்கள்:
இந்தியாவிலையே மிகவும் நீளமான நதியாக இருப்பது இந்த கங்கை நதி. இந்த நதியினை கேன்ஐஸ் என்றும் வேறு பெயரால் அழைக்கிறார்கள். இந்து மதத்தினர்கள் கங்கை நதியை புனித நதியாக வணங்கி வருகிறார்கள்.
இந்திய நாடு முழுவதும் ஒன்றிணைக்கும் அம்சமாக விளங்குகிறது இந்த கங்கை நதி. இது 2,510 கி.மீ தூரத்திற்கு பாய்ந்து ஓடி கடலில் கலக்கிறது.
இமயமலையில் தான் இந்த கங்கை நதி உற்பத்தியாகிறது. இந்த கங்கை நதி நீரானது வங்காள விரிகுடாவில் கடைசியாக கலக்கிறது.
கங்கை ஆற்றின் கரையோரம் ரிஷிகேஷ், ஹரித்துவார், அலகாபாத், வாரணாசி பாட்னா, கொல்கத்தா ஆகிய பெருநகரங்கள் அமைந்துள்ளன.
புனித நதி பாயும் பகுதியில் தான் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகம் |
மாசு:
- புனித நதியாக கங்கை நதியை கூறினாலும் அதில் பல மாசுக்கள் கலக்கிறது. உலகிலையே அதிக மாசு அடைந்த நதியாகவும் விளங்குகிறது. புனிதமான கங்கை நதியில் பிளாஸ்டிக் குப்பைகள், எறிந்த பிணங்கள், பூக்கள் போன்ற எண்ணற்ற மாசுக்கள் அந்த நதியில் கலக்கிறது.
- அந்த நதியின் ஓரத்தில் சுமார் 90 சுடுகாடுகள் அமைந்துள்ளது. காசி நகரத்தின் உள்ள சாக்கடை நீர் முழுவதும் கங்கை ஆற்றில் தான் கலக்கிறது. ஒரு நாளில் கங்கை ஆற்றில் 400 பிணங்கள் எரிக்கப்பட்டு புனித நீரான கங்கை ஆறு மாசடைந்து காட்சி தருகிறது.
- கொல்கத்தாவில் இருக்கும் 296 தொழிற்சாலைகளின் கழிவுகள் அனைத்தும் கலப்பது இந்த கங்கை நதியில் தான்.
பாவங்கள் நீங்க:
- முன் ஜென்மத்தில் நீங்கள் செய்த அனைத்து பாவங்களும் விலக இந்த கங்கை நதியில் மூழ்கி எழுந்தால் தீராத பாவங்கள் கூட உங்களை விட்டு விலகிவிடும்.
தேசிய நதியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு:
- முன்னால் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் கங்கை நதியை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் நவம்பர் 4, 2008-ஆம் ஆண்டு இந்தியாவின் தேசிய நதி கங்கை நதி என்று அறிவித்தார்.
- இதன் மூலம் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டம் உருவானது. 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி அரசு கங்கையை தூய்மைப்படுத்தும் பணியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |