Advertisement
இந்தியாவின் மிக உயர்ந்த பீடபூமி | Indiyavin Migaperiya Bhoomi
பீடபூமி என்பது ஒரு வகையான மேட்டு நிலப்பரப்பைக் குறிக்கும். பொதுவாக கடல் மட்டத்தை விட நன்கு உயரமான சம நிலப்பரப்பு பீடபூமி எனப்படுகிறது. காலநிலை மாற்றங்கள் பீடபூமியினால் ஏற்படும். பீடபூமி என்பதற்கு ஆங்கில வார்த்தை Plateau ஆகும். இந்த உலகத்தில் பல வகையான பீட பூமிகள் உள்ளன. நாம் இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் இந்தியாவின் மிகப்பெரிய பீடபூமி எது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.
இந்தியாவின் மிகப்பெரிய பீடபூமி எது?
- இந்தியாவின் மிகப்பெரிய பீடபூமி என்று அழைக்கப்படுவது தக்காணப் பீடபூமி (Deccan Plateau) ஆகும்.
- இது பெரிய தீபகற்ப பீடபூமி என்றும், முக்கோண பீடபூமி என்றும் அழைக்கப்படுகிறது.
தக்காணப் பீடபூமி:
- தக்காண பீடபூமி என்பது மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர், கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர், மற்றும் விந்திய மலைத்தொடர் ஆகிய மூன்று மலைத்தொடருக்கும் நடுவில் அமைந்துள்ளதால் இதனை முக்கோண பீடபூமி என்று அழைக்கிறார்கள்.
- தக்காண பீடபூமியின் சராசரி உயரம் 600 மீட்டர். தெற்குப்பகுதியில் 1000 மீட்டர் உயரமாகவும், வடக்கு பகுதியில் 500 மீட்டர் உயரத்தையும் கொண்டுள்ளது. 5 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பினை கொண்டுள்ளது.
தக்காண பீடபூமி குறிப்பு:
- மேற்கிலிருந்து, கிழக்கு பகுதி உயரம் குறைந்து காணப்படுகிறது. இதனால் இப்பீடபூமி மேற்கிலிருந்து கிழக்காக சரிந்து காணப்படுகிறது. தக்காண பீடபூமியில் பாயும் ஆறுகள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கின்றன.
- மகாராஷ்டிரா பீடபூமி, கர்நாடகா பீடபூமி, தெலுங்கானா பீடபூமி, சத்தீஸ்கர் சமவெளி இதன் வழியே பாயும் சில சிறு பீடபூமிகளாகும். தக்காண பீடபூமியின் மேற்பகுதியில் கோதாவரியும், நடுப்பகுதியில் கிருஷ்ணாவும், கீழ் பகுதியில் காவிரியும் அமைந்துள்ளது.
- அரிக்கப்பட்ட எரிமலை வெடிப்பின் மூலம் உருவான எரிமலை பீடபூமிக்கு உதாரணமாக தக்காண பீடபூமி உள்ளது.
உலகின் உயரமான பீடபூமி எது?
- திபெத் பீடபூமி உலகின் உயரமான பீடபூமி ஆகும்.
பீடபூமி வகைகள்:
- இன்டர் மான்டென்ட்
- பிட்மான்ட்
- கான்டினென்டல்
பீடபூமிகள் பெயர்:
பீடபூமிகள் பெயர்கள் | |
மார்வார் பீடபூமி | மத்திய உயர்நிலம் |
புந்தேல்கண்ட் உயர்நிலம் | மாளவ பீடபூமி |
பாகேல்கண்ட் பீடபூமி | சோட்டாநாகபுரி பீடபூமி |
மேகாலயா பீடபூமி | தக்காண பீடபூமி |
மகாராஷ்டிரா பீடபூமி | கர்நாடகா பீடபூமி |
தெலுங்கானா பீடபூமி | சத்தீஸ்கர் சமவெளி |
இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் பெயர் என்ன? |
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் உயர் நீதிமன்றம் |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |
Advertisement