சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் யார்?| Indiavin Mudhal Prathamar
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் யார்? (Indiavin Mudhal Prathamar) என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம்.இந்தியாவின் பிரதமர் அல்லது இந்தியத் தலைமை அமைச்சர் என்பவர் இந்திய அரசின் செயல் தலைவர் ஆவர். இந்தியாவில் பிரதமர் பதவி மிக முக்கியமான அதிக அதிகாரங்கள் உள்ள பதவியாகும். பாராளுமன்றத்தின் மக்களவை தலைவர்களின் பரிந்துரையின் படி இந்தியக் குடியரசுத் தலைவர் இந்திய பிரதமரை நியமிப்பார். ஒரு பிரதமரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். நாம் இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் இந்தியாவின் முதல் பிரதமர் யார் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.
இந்தியாவின் முதல் பிரதமர் யார்? | Who Was the First Prime Minister of India
விடை: இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு
- இவர் நவம்பர் 4-ம் தேதி 1889-ம் ஆண்டு உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத்தில் பிறந்தார். இவருடைய தாயின் பெயர் சுவரூப ராணி, தந்தையின் பெயர் மோதிலால் நேரு. 1916 ல் கமலா கவுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
பதவி காலம் – இந்தியாவின் முதல் பிரதமர் யார்?
- இவர் 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி பதவியேற்றார். 1951-ல் இந்திய திட்டக் குழுவை உருவாக்கி, ஐந்தாண்டு திட்டத்தை உருவாக்கினார். இந்தியாவின் வளர்ச்சிக்கு பல திட்டங்களை தீட்டி நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றவர்.
- குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதற்காக அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய மேலாண்மைக் கழகங்கள், தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் போன்ற பல கல்வி நிறுவனங்களை நிறுவினார்.
- பின் 1964-ம் ஆண்டு மே மாதம் 27-ம் தேதி அதாவது அவருடைய இறுதி காலம் வரை பிரதமராக பணியாற்றினார். இந்தியாவில் அதிக நாட்கள் பிரதமராக இருந்த பெருமை ஜவஹர்லால் நேருவையே சாரும்.
இந்தியாவின் பிரதமர் பட்டியல் – Indiyavin Mudhal Pradhamar:
- ஜவஹர்லால் நேருவிற்கு பின் குல்சாரிலால் நந்தா அவர்கள் 1964-ம் ஆண்டு இடைக்கால பிரதமராக இருந்தார்.
- 1964-ம் ஆண்டு லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் இந்தியாவின் பிரதமராக பொறுப்பு வகித்தார். இவர் 582-நாட்கள் பதவியில் இருந்தார். இவர் மாரடைப்பால் இறந்துவிட்டார். வெளிநாட்டில் இறந்த முதல் பிரதமர் இவரே.
- 1966-ம் ஆண்டு இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக பொறுப்பேற்றார். இவர்கள் 5,831 நாட்கள் பதவியில் இருந்தார். இந்தியாவின் முதல் பெண் பிரதமர் என்ற புகழை பெற்றவர்.
- 1977-ம் ஆண்டில் மொரார்ஜி தேசாய் அவர்கள் இந்தியாவின் பிரதமராக பொறுப்பு வகித்தார். காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து ஜனதா கட்சியின் முதல் பிரதமர் ஆவார்.
இந்தியாவின் முதல் பிரதமர்:
- மொரார்ஜி தேசாய் அவர்களின் பதவி விலகளுக்கு பின் சரண் சிங் சிறிது காலம் பிரதமராக இருந்தார்.
- இந்திரா காந்தி இரண்டாவது முறை பிரதமராக பொறுப்பேற்றார். பின் 1984-ம் ஆண்டு அவருடைய மறைவிற்கு பின் ராஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமராக இருந்தார். இந்தியாவின் இளம் வயது பிரதமர் என்ற சிறப்பை உடையவர்.
- 1989-ம் ஆண்டு வி.பி. சிங் அவர்கள் இந்தியாவின் 7-வது பிரதமராக பொறுப்பேற்றார். இவருக்கு துணை பிரதமராக தேவிலால் அவர்கள் இருந்தார்.
- 1990-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ம் தேதி சந்திரசேகர் அவர்கள் 8-வது இந்திய பிரதமராக இருந்தார்.
- 1991-ல் ராஜிவ் காந்தி மறைவிற்கு பின் காங்கிரஸ் கட்சியின் தலைவரான நரசிம்மராவ் பிரதமர் ஆனர்.
- இந்தியாவின் 14-வது பிரதமராக தேவ கௌடா என்பவர் 1996-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
- 1997-ல் தேவ கவுடா பதவியில் இருந்து விலகியவுடன் ஜனதா தளம் கட்சி சார்ந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதி 1997-ம் ஆண்டு ஐ. கே. குஜ்ரால் சிறிது காலம் பிரதமராக இருந்தார்.
- பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமர் ஆனார். திருமணம் ஆகாத முதல் இந்திய பிரதமர் என்ற பெருமைக்கு உரியவர்.
- 2004-ம் ஆண்டு மன்மோகன் சிங் இந்தியாவின் பிரதமர் ஆனார். இவர் 2004 முதல் 2014-ம் ஆண்டு வரையில் பதவியில் இருந்தார்.
இந்தியாவின் தற்போதைய பிரதமர் யார்?
- மன்மோகன் சிங்கிற்கு பிறகு 2014-ம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் தேர்ந்தெடுக்கபட்டார். இரயில் நிலையத்தில் தேநீர் வியாபாரியாக இருந்தவர், சாதாரண மனிதனும் பிரதமர் ஆக முடியும் என்ற பெருமைக்கு உரியவர். தற்போதைய பிரதமரும் நரேந்திர மோடி அவர்கள் ஆவார்.
இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர் யார்? |
பதவியை ராஜினாமா செய்த முதல் இந்திய பிரதமர் யார்? |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |