இந்தியாவின் ஏழு குன்றுகளின் நகரம் எது?

Advertisement

இந்தியாவின் ஏழு குன்றுகளின் நகரம் | Indiyavin Yelu Kundrugalin Nagaram

இன்றைய பொது அறிவு பகுதியில் இந்திய நாட்டின் ஏழு குன்றுகளின் நகரம் எது என்று தெரிந்துக்கொள்ளலாம்.. பொது அறிவு விஷயங்களை பற்றி நாம் இளம் வயதிலிருந்து நிறைய கற்றுக்கொண்டால் எதிர்காலத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். பொது அறிவு சார்ந்த கேள்விகள் அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு மிகவும் பயன்படுகிறது. வாங்க இந்த பதிவில் இந்தியாவின் ஏழு குன்றுகளின் நகரம் எது என்று தெரிந்துக்கொள்ளலாம்..!

இந்தியாவின் ஏழு குன்றுகளின் நகரம் எது.? என்ற கேள்வியை நீங்கள் பல தேர்வுகளில் பார்த்து இருப்பீர்கள். ஆனால், அதற்கான சரியான விட எதுவென்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.

உக்ரைன் நாட்டின் தலைநகரம் எது?

இந்தியாவின் ஏழு குன்றுகளின் நகரம் எது?

விடை: இந்திய நாட்டின் ஏழு குன்றுகளின் நகரம் என்று அழைக்கப்படுவது திருப்பதி

அமைந்துள்ள இடம்:

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தின் திருப்பதி ஊரில் இந்த திருத்தலம் அமைந்துள்ளது.

திருப்பதியின் சிறப்பு:

 • திருப்பதி வெங்கடாசலபதி கோயில் அல்லது திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.
 • சேஷாத்திரி, கருடாத்திரி, நீலாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷபாத்திரி, நாராயணாத்திரி, வெங்கடாத்ரி என ஏழு மலைகள் சூழந்த இடத்தில் இருப்பதால் இத்தலம் ஏழுமலை என்றும், இத்தலத்தின் மூலவர் ஏழுமலையான் என்றும் அழைக்கப்படுகிறார்.
 • இத்தலத்தின் மூலவர் வெங்கடாசலபதி என்றும் வேங்கடன் என்றும் அழைக்கப்படுகிறார். தாயார் பத்மாவதி அம்மையார்.
 • இந்த திருத்தலத்தின் வெங்கடாத்ரி மலை 3200 அடி உயரமும், 10.33 சதுர மைல்கள் கொண்டதாகும்.
 • இந்த கோவிலில் பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இந்த லட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக வருமானம் கொண்ட கோயிலாக இந்த திருத்தலம் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகரம் எது?

கோவில் அமைப்பு:

 • இந்த கோவில் மூன்று பிரகாரங்களையும், ராஜ கோபுரத்தினையும் கொண்டுள்ளது.
 • திருப்பதி கோயிலின் முதல் பிரகாரம் சம்பங்கி பிரதட்சணம் எனப்படுகிறது. இதில் பிரதிம மண்டபம், ரங்க மண்டபம், திருமலைராய மண்டபம் (துவஜஸ்தம்ப மண்டபம்), சாலுவ நரசிம்ம மண்டபம் ஆகியவை காணப்படுகின்றன.
 • விமான பிரதட்சண பிரகாரம் என்பது இரண்டாவது பிரகாரமாகும். இதில் கல்யாண மண்டபம், விமான வேங்கடேசுவரர், ஸ்னபன மண்டபம், சயன மண்டபம், ஆனந்த நிலையம் மற்றும் கர்ப்பகிரஹம் ஆகியவை உள்ளன.
 • மூன்றாவது பிரகாரம் வைகுண்ட பிரகாரம் ஆகும். இது ஆண்டுக்கொரு முறை வைகுண்ட ஏகாதேசியின் பொழுது திறக்கப்படுகிறது.

கோவில் மண்டபங்கள்:

 1. கிருஷ்ண தேவராய மண்டபம்
 2. ரங்க மண்டபம்
 3. திருமலை ராய மண்டபம்
 4. ஜனா மண்டபம்
 5. துவஜஸ்தம்ப மண்டபம்
 6. திருமாமணி மண்டபம்
 7. உண்டியல் மண்டபம் – இந்த மண்டபம் பரகாமணி மண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது.

விழாக்கள்:

 • பிரம்மோற்சவம்
 • வசந்த உற்சவம்
 • பத்மாவதி பரிநயம்
 • அபிதேயக அபிஷேகம்
 • புஷ்ப பல்லக்கு
ஆஸ்திரேலியா நாட்டின் தலைநகரம்
பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரம் எது?

கல்வெட்டுகள்:

 • இந்த கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் அமைந்துள்ளது.
 • இக்கல்வெட்டுகளில் பல்லவர், சோழர், பாண்டியர், சாளுக்கியர், கிருஷ்ண தேவராயர் காலத்தியவைகளாக உள்ளன.
 • இக்கல்வெட்டுகள் பெரும்பாலும் தமிழ் கல்வெட்டுகளாக அமைந்துள்ளது.
 • அந்த கோவிலில் தெலுங்கு, கன்னட மொழிகளில் இருக்கும் கல்வெட்டுகள் மிகவும் குறைவாக இருக்கிறது.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement