அதிர்ச்சியில் ஆழ்த்தும் சில சுவாரஸ்யமான உண்மைகள்..! | Interesting Facts in Tamil

Advertisement

சுவாரஸ்யமான தகவல்கள் – Interesting Facts About World in Tamil

வணக்கம் நண்பர்களே இந்த உலகில் 200 மேற்பட்ட நாடுகள் இருக்கின்றன.. ஒட்டுமொத்தமாக 2021-ம் ஆண்டு கணக்கெடுக்குபடி சுமார் 7.9 பில்லியன் மக்கள் வாழ்கின்ற இந்த உலகில் பலவகையான சுவாரசியமான விஷயங்களும் ஒவ்வொரு நாளும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் இந்த பதிவில் நீங்கள் அறிந்திராத சில சுவாரஸ்யமான உண்மைகளை பற்றி காண்போம்.

நமக்கு தெரியாத பல ஆச்சரியமூட்டும் தகவல்கள் இவ்வுலகில் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், அதனை பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.

Amazing Facts in Tamil:

Amazing Facts in Tamil

மின்னஞ்சலை (Mail) கண்டுபிடித்தவர் யார் தெரியுமா?

 

Interesting Facts in Tamil:- பொதுவாக நாம் இப்பொழுது பெரிதளவில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மின்னஞ்சலை கண்டுபிடித்தவர் வெளிநாட்டவர்கள் என்று தான் நினைத்திக்கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த மின்னஞ்சலை கண்டுபிடித்தவர் தமிழ்நாட்டை சேர்ந்த வி.ஏ.சிவா அய்யாதுரை ஆவர். சிவா மெயிலைக் கண்டுபிடிப்பதற்கு முன்னரே, கணினியில் சிறு தகவல்களை அனுப்பும் முறை இருந்தது. அதனை ரேமண்ட் டாம்லின்சனின் கண்டுபிடித்தார் இருப்பினும் அது இரு கணினிகளிடையே சிறு தகவலை அனுப்ப மட்டுமே உதவியது. ஆனால், சிவா உருவாக்கிய மின்னஞ்சல் முறையானது, எந்தக் கணினியிலிருந்தும் பிற கணினிகளுக்கு இணைய வழியில் தகவல்களை அனுப்பக் கூடியதாகும்.

நொடிக்கு 4 குழந்தைகள்:

இந்த உலகத்தில் நொடிக்கு சராசரியாக 4 குழந்தைகள் பிறக்கிறது. அப்படி பார்த்தால் ஒவ்வொரு நிமிடத்திற்கு 250 குழந்தைகளும், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15,000 குழந்தைகளும், ஒவ்வொரு நாளைக்கு 3 லட்சத்து 60 ஆயிரம் குழந்தைகளும் பிறக்கிறது. ஆகா மொத்தத்தில் ஒரு வருடத்தில் தோராயமாக 131.4 மில்லியன் குழந்தைகள் பிறக்கிறது.

இரட்டை பிறவிகள்: 

ஒவ்வொரு 50 பிரசவத்திற்கு ஒரு பிரசவம் இரட்டை குழந்தையாக இருக்கும். இது 1995ஆம் ஆண்டுகாலில் 2.5 சதவீதமாக அதிகரித்தது. தற்போது 30 பிரசவங்களில் 1 பிரசவம் இரட்டைக்குழந்தையாக இருக்கக்கூடும் என்று புள்ளிவிவரம் கூறுகிறது.

பிஸ்கெட்:

பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பிஸ்கெட் அதிகமாக விரும்பி சாப்பிடுவார். பலர் டீ அருந்தும் போது Biscuits நனைத்து சாப்பிடும் பழக்கம் இருக்கும். இத்தகைய பிஸ்கட்டில் சிறு சிறு ஓட்டைகள் இருக்குமல்லவா. இந்த ஓட்டையை பலர் டிசைன் என்றுதான் நினைப்பார்கள் ஆனால் அந்த ஓட்டைகள் டிசைன் கிடையாது. பிஸ்கட் நன்றாக வெந்து, வருவதற்காக அதில் ஓட்டை இடப்படுகிறது.

இறப்பே இல்லாத உயிரினம்:

இதன் பெயர் Jellyfish இந்த மீனுக்கு இறப்பு என்பதே கிடையாது இதனை கடலை விட்டு வெளியே எடுக்கும் வரை இறப்பு இதற்கு வரவே வராது.

இரவே இல்லாத நாடு எது?

Interesting Facts in Tamil – ஐரோப்பாவின் வடக்கு பகுதியான நார்வேயில் ஏப்ரல் முதல் ஆகஸ்டு மாதம் வரை 5 மாதங்களுக்கு சூரியன் மறைவதே இல்லை அதாவது இரவே கிடையாது ஏனெனில் இது ஆர்டிக் பகுதிக்கு மிக அருகில் உள்ளது.

மேகங்களுக்கும் எடை உண்டு:

பொதுவாக வானில் இருக்கும் மேகங்களுக்கு எடை இல்லையென்று நாம் அனைவரும் நினைத்திருப்போம். ஆனால் உண்மையில் மேகங்களுக்கு எடை உண்டு என்றால் உங்களால் நம்ப முடியுதா? உண்மையில் ஒரு மேகத்தின் சராசரியான எடையானது 1.1 மில்லியன் பவுண்டுகள் ஆகும். அதாவது ஒரு மேகத்தின் எடை சராசரியாக 100 யானைகளின் எடைக்கு ஈடானதாகும். இதற்கான காரணம் மேகத்திற்கிடைய நீர்துளிகள் இருக்கும் இதுதான் பின்பு மழையாக பொழியும் இதனால் இதற்கு எடை அதிகமாக உள்ளது.

கரப்பான் பூச்சி:

இந்த பூமியில் டைனோசர்களின் காலத்திற்கு 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே கருப்பான்பூச்சி உயிரினம் வாழ்ந்து வருகிறது.

குள்ள மனிதர்கள் அதிகம் வாழும் நாடு எது?

உலகிலேயே குள்ளமான மனிதர்கள் அதிகமாக வாழும் நாடு இந்தோனேசியா ஆகும். இந்தோனேஷியர்களின் சராசரி உயரம் 5 அடி 1.8 அங்குலம் ஆகும்.

உயரமான மனிதர்கள்:

குள்ள மனிதர்களளை போலவே மிக உயரமான மனிதர்கள் வாழும் நாடு நெதர்லாந்து ஆகும். நெதர்லாந்து நாட்டு மக்கள் 6 அடி உயரமுள்ளவர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட உயரத்தில் தான் இருப்பார்கள்.

வித்தியாசமாக தூங்கும் விலங்கு:

Interesting Facts in Tamil – டால்பின் உலகில் வித்தியாசமாக தூங்கும் பண்புகளை கொண்ட விலங்காகும். டால்பின் தூங்கும் போது ஒரு கண்களை திறந்து கொண்டு மற்றொரு கண்களை மூடி கொண்டு வித்தியாசமாக தூங்குமாம். இதற்கான காரணம் நம்மைப்போல் இரண்டு கண்களையும் மூடி உறங்கினால் அது மூச்சு திணறி இறந்து விடும் ஏனென்றால் நம் மூளை போன்று அவற்றின் மூளை தன்னிச்சையாக செயல்படாது அப்படியே இரண்டு கண்களை மூடினால் மூளை செயலிழந்து விடும். அதனால் இது தூங்கும் பொழுது மூளையின் ஒரு பகுதியை மட்டுமே தூங்க அனுமதிக்கும் வலது மூளை உறங்கினால் இடது கண் திறந்திருக்கும் இது போன்றுதான் கண்களை மாற்றி மாற்றி தூங்கும்.

சீட்டு கட்டு பற்றிய தகவல்:

சீட்டு கட்டில் உள்ள 4 ராஜா சீட்டும் வரலாற்றில் பெரும் புகழ் பெற்ற 4 ராஜாவை குறிக்கிறது. 1) ஸ்பே டு – கிங் டேவிட், 2) கிளப்பு – அலெக்ஸாண்டர் தி கிரேட், 3) இதயம் – சார்லிமேக்னே மற்றும் 4) டைமென்ட் – ஜூலியஸ் சீசர்

26 ஆங்கில எழுத்துக்களும் பயன்படுத்தப்பட்டுள்ள ஆங்கில வாக்கியம் இது தான்:

“The quick brown fox jumps over the lazy dog” என்ற ஆங்கில வாக்கியத்தில் அனைத்து (26) ஆங்கில எழுத்துக்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement