இரட்டை காப்பியங்கள் யாவை | Irattai Kappiyangal

Advertisement

இரட்டை காப்பியங்கள் என்றால் என்ன?

ஹாய் பிரண்ட்ஸ் இன்றைய பதிவில் இரட்டை காப்பியங்கள் என்று எதை அழைக்கப்படுகிறது. இதற்கு ஏன் இரட்டை காப்பியம் என்று பெயர் சூட்டப்பட்டது என இரட்டை காப்பியங்கள் பற்றிய பொது அறிவு சார்ந்த வினா விடைகளை இங்கு நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

இரட்டை காப்பியங்கள் யாவை?

சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டை காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

Irattai Kappiyangal Notes in Tamil

பெயர் சூட்டப்பட்ட காரணம்:

சிலப்பதிகாரமும், மணிமேலையும் ஒரே குடும்ப வரலாற்றை கூறுவதானால் இதற்கு இரட்டை காப்பியங்கள் என்று பெயர் சூட்டப்பட்டது.

தமிழில் சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐந்தையும் ஐம்பெரும் காப்பியம் என்று அழைப்பார்கள். ஆகவே சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய இரண்டும் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று.

இரட்டை காப்பியங்கள் – Irattai Kappiyangal in Tamil:

கண்ணகி, கோவலன், மாதவி ஆகியோரின் வாழ்க்கையை பற்றி கூறுவது சிலப்பதிகாரம் ஆகும்.

கோவலன், மாதவி ஆகியோருக்கு பிறந்த மணிமேகலையின் வாழ்க்கையை பற்றி கூறுவது மணிமேகலை காப்பியம் ஆகும்.

சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவைகள் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்

சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள் ஆவார். இவர் ஒரு சாதனை துறவி. இவர் சேரன் செங்குட்டுவனின் தம்பி ஆவர். மேலும் இவர் பல கலைகளை அறிந்தவர்.

கண்ணகியின் சிலம்பால் விளைந்த கதையை முதன்மையாகக் கொண்டது. ஆதலின், சிலப்பதிகாரமாயிற்று.

இந்த சிலப்பதிகாரம் காப்பியத்தில் புகார்க்காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்னும் முப்பெரும் காண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது. மேலும் “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு” எனப் பாரதியார் புகழ்கிறார்

மணிமேகலையை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார் ஆவார். சிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக இலக்கிய அழகில் பெருமை வாய்ந்தது மணிமேகலை. இக்காப்பியத்தின் தலைவி, மணிமேகலை, சிலப்பதிகாரத்தின் கோவலன் மற்றும் மாதவி என்பவர்களின் மகளாவாள்.

இது தொடர்புடைய பதிவுகள் 
ஆறாம் வகுப்பு சிலப்பதிகாரம் வினா விடை
சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம்
சிலப்பதிகாரம் சிறப்புகள்
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement