இருண்ட கண்டம் என அழைக்கப்படுவது எது?
நண்பர்களுக்கு வணக்கம் இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் இருண்ட கண்டம் என்று அழைக்கப்படும் கண்டம் எது என்று படித்து தெரிந்துக்கொள்ளலாம். பொது அறிவு சம்பந்தமான வினா விடைகள் பள்ளி படிக்கும் மாணவர்கள் முதல் அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் ஒவ்வொரு தேர்வாளர்களுக்கும் மிகவும் பயன்படக்கூடிய ஒரு விஷயம். அதனால் இதுபோன்ற வினா விடைகளை நீங்கள் தெரிந்துவைத்துக்கொள்வது அவசியம். ஏனென்றால் TNPSC EXAM இல் இந்த கேள்விகள் எல்லாம் கேட்கப்படலாம். சரி வாங்க நண்பர்களே இருண்ட கண்டம் என்று அழைக்கப்படும் இடத்தை பற்றி தெரிந்துகொள்ளுவோம்.
இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் நகரம் எது? |
இருண்ட கண்டம் என அழைக்கப்படும் கண்டம் எது?:
விடை: ஆப்பிரிக்க கண்டம்
இருண்ட கண்டம்:
உலகிலையே இரண்டாம் மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட கண்டம் ஆப்பிரிக்கா கண்டம். இந்த கண்டத்தில் 54 நாடுகளில் மொத்தம் 80 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளின் பட்டியல்:
கிழக்கு ஆப்பிரிக்கா | மேற்கு ஆப்பிரிக்கா |
புருண்டி | நைகர் |
கென்யா | செனகள் |
ருவாண்டா | நைஜீரியா |
தான்சானியா | காம்பியா |
உகாண்டா | கானா |
வடக்கு ஆப்பிரிக்கா | தெற்கு ஆப்பிரிக்கா |
அல்ஜீரியா | தென்னாப்பிரிக்கா |
எகிப்து | ஜிம்பாப்வே |
லிபியா | ஜாம்பியா |
மொராக்கோ | நமீபியா |
சூடான் | அங்கோலா |
துனிசியா | மொசாம்பிக் |
மேற்கு சகாரா |
மத்திய ஆப்பிரிக்கா |
அங்கோலா |
கேமரூன் |
மத்திய ஆப்பிரிக்க குடியரசு |
காங்கோ |
தமிழ்நாட்டின் எலுமிச்சை நகரம் எது? |
ஆப்பிரிக்க கண்டம் வரலாறு:
- ஆப்ரிக்கா கண்டத்தில் கி.மு. 16000 முதல் விவசாயம் செய்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெறுகின்றன. மேலும் உலோக பயன்பாடு கி.மு. நான்காயிரம் முதல் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
- உலகின் முதன் மனிதனின் கால் தடமும் ஆப்ரிக்க கடற்கரை ஓரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
- பழைய கற்காலத்திலேயே மக்கள் பெருமளவில் ஆப்ரிக்காவில் வாழ்ந்து வந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
- மக்கள் கி.மு 16000 வாக்கில் செங்கடல் மலைகள் முதல் வடக்கு எத்தியோப்பிய நிலப்பகுதிகள் வரை உள்ள கொட்டைகள், கிழங்குகள், மற்றும் புட்கள் ஆகியவற்றை உணவாக உண்டு வாழ்ந்துள்ளார்கள். இந்த வகை உணவு முறைகள் ஆப்ரிக்காவிலிருந்து ஆசியா நாடு வரையிலும் பரவ தொடங்கியது. விவசாயம் தோன்றக் இதுவே முக்கிய காரணமாக இருந்தது.
- ஆப்ரிக்காவில் நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே செம்பு, வெண்கலம் ஆகிய உலோககங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது.
- கிபி ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வடக்கு ஆபிரிக்காவும், கிழக்கு ஆபிரிக்காவும் இஸ்லாம் மதத்தின் செல்வாக்குக்கு உட்பட்டது.
- 10000 முதல் 8000 கி.மு வாக்கில் வடகிழக்கு ஆப்ரிக்க மக்கள் பார்லி, மற்றும் கோதுமை ஆகிய தானியங்களைப் பயிரிடத் தொடங்கியுள்ளனர். மேலும் ஆசியர்களைப் போல ஆடுகளையும் வளர்க்கத் தொடங்கியுள்ளனர்.
- கி.மு ஏழாயிரம் வாக்கில் ஆப்ரிக்கர்கள் கழுதைகளை வளர்க்கத் தொடங்கியுள்ளனர். அதனை விவசாயம் செய்வதற்கும் பயன்படுத்தி வந்துள்ளனர்.
- கழுதைகளை வீட்டு விலங்காக வளர்ப்பது ஆப்ரிக்காவிலிருந்து ஆசியாவிற்கு பரவியது.
- ஆப்பிரிக்க விடுதலை இயக்க நடவடிக்கைகளால், 1951 ஆம் ஆண்டில் லிபியா விடுதலை பெற்ற முதலாவது முன்னாள் ஆப்பிரிக்கக் குடியேற்ற நாடு ஆகியது.
ஆப்பிரிக்க கண்டத்தின் சிறப்பு:
- ஆபிரிக்க கண்டம் என்பது மிகுதியான ஒரு நிலம் சார்ந்ததாகும். உலகின் மிக உயரமான, உயரமான மலை, உலகின் மிக நீளமான நதி மற்றும் புவியின் மிகப்பெரிய நில விலங்கு போன்றவற்றை இந்த கண்டத்தில் பார்க்கலாம்.
- ஆப்பிரிக்காவில் 3,000 க்கும் அதிகமான இனக்குழுக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
- ஆப்பிரிக்காவில் பேசப்படும் உள்நாட்டு மொழிகளின் மொத்த எண்ணிக்கை 1,500 முதல் 2,000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |