இவரது பிறந்த தினம் தேசிய விளையாட்டு | Ivarathu Pirantha Dhinam Vilayattu Dhinam

Advertisement

யாருடைய பிறந்த தினம் தேசிய விளையாட்டு தினம்

வணக்கம் நண்பர்களே இன்றைய பொது அறிவு பகுதியில் யாருடைய பிறந்த தினம் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இது போன்ற பொது அறிவு வினா விடைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். போட்டி தேர்வுகளுக்கு மட்டுமல்லாமல் பள்ளி படிக்கும் இளம் வயது மாணவர்களுக்கு தங்களுடைய அறிவை மேம்படுத்துவதற்கு உதவியாக இருக்கும். வாங்க தேசிய விளையாட்டு தினம் யாருடைய நினைவாக கொண்டாடப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இவரது பிறந்த தினம் தேசிய விளையாட்டு தினம் எது?

விடை: மேஜர் தயான் சந்த் அவர்களின் பிறந்த தினத்தை இந்தியா தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது.

தேசிய விளையாட்டு நாள் – National Sports Day in Tamil:

விடை: ஆகஸ்ட் 29-ம் தேதி இந்தியாவின் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது.

Ivarathu Pirantha Dhinam Vilayattu Dhinam:

  • இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்பது அனைவருக்கும் தெரியும். இந்த ஹாக்கி அணியின் முன்னாள் வீரரான தயான் சந்த் அவர்களை போற்றும் விதமாக அவரது பிறந்த தினமான ஆகஸ்ட் 29-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
  • மக்கள் ஆரோக்கியமான நல்வாழ்வை வாழ வேண்டும் என்ற நோக்கில் தேசிய விளையாட்டு நாள் கொண்டாடப்படுகிறது.
  • தயான் சந்த் பிறந்த தினத்தை தேசிய விளையாட்டு தினமாக இந்திய அரசு 2012-ம் ஆண்டு அறிவித்தது.
  • இவர் அலகாபாத்தில் 1905-ம் ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதி பிறந்தார். தந்தை பெயர் சமேஷ்வர் சிங் (Sameshwar Singh), தாயார் பெயர் சரதா சிங் (Sharadha Singh). இவர் 1926-ம் ஆண்டு முதல் முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்றார்.
உலக தேசிய இளைஞர் தினம்

இவரது பிறந்த தினம் தேசிய விளையாட்டு தினம் அவர் யார்?

  • இந்தியாவுக்கு முதன் முதலில் தங்க பதக்கம் ஹாக்கி விளையாட்டின் மூலம் தான் கிடைத்தது. இந்தியா மூன்று முறை தங்கப்பதக்கம் வாங்கும்பொழுதும் அதில் தயான் சந்த்தின் பங்கு அளவுக்கு அதிகமாக இருந்தது. 1956-ல் இவர் பத்ம பூஷன் விருதை பெற்றார். இவர் மொத்தம் 400 Goal அடித்துள்ளார்.
  • ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, மற்றும் துரோணாச்சாரியார் போன்ற விருதுகள் தேசிய விளையாட்டுகளில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு கொடுக்கப்படும். 1956-ல் பத்ம பூஷன் விருதை தயான் சந்த் பெற்றார்.
  • 1936-ல் பெர்லின் ஒலிம்பிக்கில் ஜெர்மனிக்கு எதிரான இறுதிப் போட்டி நடந்தது. அதில் தயான் சந்த் சிறப்பாக விளையாடி இந்தியாவிற்கு வெற்றி தேடி தந்தார். இந்தியாவிற்கு பல புகழையும், சிறப்பையும் தேடி தந்த தயான் சந்த் 1979-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார். இவருடைய புகழ் இன்றைக்கு உள்ள பல இளைஞர்களுக்கு உதாரணமாக உள்ளது.
தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement