வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கம்பர் பற்றிய குறிப்புகள் | kambar patriya kurippu in tamil 

Updated On: December 4, 2025 12:29 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

kambar patriya kurippu in tamil 

இன்றைய பதிவில் கம்பர் பற்றிய குறிப்புகள் பற்றி பார்க்க போகிறோம். கம்பர் என்றாலே நம்  நினைவிற்கு வருவது கம்பராமாயணம் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கம்பராமாயணத்தை படித்திருப்போம். கம்பரை பற்றியும் நாம் எல்லோரும் அறிந்திருப்போம். கம்பரை பற்றி தெரியாத ஒரு சில விஷயங்களை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். கம்பர் தமிழ் கவிஞர் மற்றும் நூலாசிரியர் ஆவார். இவர் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வால்மீகி இராமாயணத்தைத் தழுவி, தமிழில் இராமாவதாரம் என்ற நூலை எழுதினார்.

இன்றைய காலத்தில் தனியார் வேலைகளை விட அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கிறது. அதற்காக தங்களை தயார் படுத்தி கொள்கிறார்கள். இந்த அரசு தேர்வில் தமிழ் பாடத்திலிருந்து அதிகமாக கேட்படுகிறது. இந்த தமிழ் பாடத்தை நன்றாக படித்தாலே அந்த தேர்வில் பாஸ் ஆகிவிடலாம். முன்பெல்லாம் அரசு தேர்விற்கு தயார் ஆகிறவர்கள் புத்தகத்தை வாங்கி படித்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் யாரும் புத்தகத்தை வாங்கி படிப்பதில்லை. காரணம் இப்போது தான் எல்லார் கையிலும் போன் இருக்கிறதே. இதில் தங்களுக்கு தேவையான கேள்வியை கூகுளில் தேடுகிறார்கள். அதற்கான விடை வந்துவிடுகிறது. அந்த வகையில் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் கம்பர் பற்றிய குறிப்புகள் பற்றி பார்க்க போகிறோம்.

கம்பர் பற்றிய குறிப்புகள்:

கம்பர் என்பவர் தமிழ் கவிஞரும் , நூலாசிரியரும் ஆவார். இவர் சமஷ்கிருதத்தில் இயற்றப்பட்ட ராமாயணத்தை தழுவி தமிழில் ராமாவதாரம் என்ற நூலை இயற்றியுள்ளார். பிற்காலத்தில் அது கம்பராமாயணம் என்று அழைக்கப்பட்டது. கம்பராமாயணத்தை படித்த அனைவரும் கம்பரின் கவித்திறனை பாடியுள்ளனர். கம்பருக்கு கல்வியிற் பெரியோன் கம்பன் , கவிச்சக்ரவர்த்தி போன்ற பட்டங்களை சூட்டியுள்ளனர். கம்பரின் கவித்திறனால் கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிப்பாடும். என்ற முதுமொழி தமிழில் உள்ளது. தமிழ்  இலக்கியத்தில் கம்பராமாயணமே மிகப்பெரிய இதிகாசம் எனக் கருதப்படுகிறது.

பெயர்க்காரணம்:

கம்பர் குலம் என்று அழைக்கப்படும் உவச்சர்கள் குலத்தில் பிறந்தமையால் பெற்ற பெயர் என்று கூறுவர். காளி கோயிலில் பூசை செய்யும் மரபினர் என்று உவச்சகர் சூட்டப்படுகின்றன. கம்பர் குழந்தையாக காளி கோயில் கம்பத்தின் அருகில் கிடந்தமையால் இப்பெயர் பெற்றது என்பர். கம்பங் கொல்லையை காத்து வந்தமையால் கம்பர் என்று அழைக்கப்பட்டார் என்று கூறுவார்.

கம்பர் இயற்றிய நூல் பெயர்கள்:

  • சிலையெழுபது
  • சடகோபர் அந்தாதி 
  • சரசுவதி அந்தாதி
  • திருக்கை வழக்கம்
  • கம்பராமாயணம்
  • ஏரெழுபது
  • மும்மணிக்கோவை 

கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர்

கம்பரின் சிறப்பு:

கம்பர் என்றோரு  மானுடன் வாழ்ந்ததும்,என தன்னுடைய சுய தரிசையில் மகாகவி பாரதி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தன்னுடைய பாடலில் கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு எனப் பாடியுள்ளார்.

அம் புவியில் மக்கள் அமுதம்  அருந்த வைத்த கம்பர் கவியே கவி என தேசிய விநாயகம் பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்மொழி தனக்கு ஒரு தவசிறப்பை தந்தது. கம்பரின் கவி சிறப்பே என நாமக்கல் கவிஞர் கூறியுள்ளார். 

கல்வியிற்  பெரியன்  கம்பன் – முதுமொழி 

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிப்பாடும்-முதுமொழி 

பலபட்டடை  சொக்கநாதப்  புலவர்  பாடல் இவரை விருத்தம் என்னும் ஒண்பா பாடுவதில் மிகச் சிறந்தவர் என்று குறிப்பிடுகிறார்.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.Com 
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now