கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர்
இன்றைய காலத்தில் தனியார் வேலைகளை விட அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கிறது. அதற்காக தங்களை தயார் படுத்தி கொள்கிறார்கள். இந்த அரசு தேர்வில் தமிழ் பாடத்திலிருந்து அதிகமாக கேட்படுகிறது. இந்த தமிழ் பாடத்தை நன்றாக படித்தாலே அந்த தேர்வில் பாஸ் ஆகிவிடலாம். முன்பெல்லாம் அரசு தேர்விற்கு தயார் ஆகிறவர்கள் புத்தகத்தை வாங்கி படித்தார்கள்.
ஆனால் இன்றைய காலத்தில் யாரும் புத்தகத்தை வாங்கி படிப்பதில்லை. காரணம் இப்போது தான் எல்லார் கையிலும் போன் இருக்கிறதே. இதில் தங்களுக்கு தேவையான கேள்வியை கூகுளில் தேடுகிறார்கள். அதற்கான விடை வந்துவிடுகிறது. அந்த வகையில் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயரை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் என்ன தெரியுமா.?
கம்பராமாயணம் என்னும் நூல் கம்பரால் இயற்றப்பட்ட தமிழ் நூலாகும். இந்நூல் இந்து சமய இதிகாசங்கள் இரண்டினுள் ஒன்றான இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும். இராமாவதாரம் என்ற பெயரில் கம்பரால் இயற்றப்பட்ட கம்பராமாயணம் ஒரு வழி நூலாகும். இது வடமொழியில் வால்மீகி என்பவர் இயற்றிய இராமாயணத்தினைத் தழுவி எழுதப்பட்ட நூல் ஆகும். இது ஒரு வழி நூலாகவே இருந்தாலும் கம்பர் தனக்கே உரித்தான பாணியில் தன் புலமையை வெளிக்காட்ட தமிழ் மொழியில் இயற்றியுள்ளார். வடமொழி கலவாத தூய தமிழ் சொற்களைத் தனது நூலில் கையாண்டதால் கம்பர், தொல்காப்பிய நெறி நின்றவர் என்று புகழப்படுகிறார்.
கம்பர் இந்நூலை சில மாறுபாடுகளோடு இயற்றியிருந்தார். அதனால் இதனை கம்பராமாயம் என்று பெயரிடப்பட்டது. இந்த கம்பராமாயணம் ஆனது பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்னும் ஆறு காண்டங்களையும், 118 படலங்களையும் உடையது. இதில் 10589 பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது.
கம்பர் தாம் இயற்றிய இந்நூலுக்கு ராமாவதாரம் என்று பெயர் சூட்டினார். ஆனால் இராமாயணம் பலரால் இயற்றப்பட்டதால் கம்பரின் பெயரோடு இணைத்து கம்பராமாயணம் என்றே அழைக்கப்படுகிறது
காப்பிய காலம்:
கம்பராமாயணத்தில் உள்ள பாடல்களையும், கம்பரின் வாழ்வினையும் கொண்டு கம்ப இராமாயணம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். சிலர் கம்பராமாயணம் ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்தது, பத்தாம் நூற்றாண்டினைச் சேர்ந்தது என்றும் கூறியுள்ளார்கள்.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.Com |