கேரளாவின் தலைநகரம் எது? – Kerala Thalainagaram
கேரளம் இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்று. இது கிழக்கில் தமிழ் நாட்டையும், வடக்கில் கர்நாடகத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. மேற்கில் அரபுக் கடல் உள்ளது. மலையாளம் கேரளத்தின் முதன்மையான மொழியாகும். தமிழ் பேசுவோரும் அதிகமாக காணப்படுகின்றனர். மேற்கில் அரபிக்கடல் சூழ்ந்திருக்க, கிழக்கில் மேற்குத்தொடர்ச்சிமலை உயர்ந்திருக்க, 44 ஒன்றுடன் ஒன்று இணைந்த ஆறுகளுடன், ஆசியாவின் மிகவும் விரும்பப்படுகிற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கேரளா தனிச்சிறப்பான புவியியல் அம்சங்களுடன் இருக்கிறது. அழகான நீண்ட கடற்கரைகள், அமைதியான பசுமைக் காயல்கள், பசுமைப் போர்த்திய மலைவாழிடங்கள் மற்றும் கவர்ச்சியான வன உயிர்கள், ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு கடந்து செல்லும் போது உங்களுக்காக காத்திருக்கும் சில அதிசயங்களாகும். இத்தகைய சிறப்பு மிகுந்த கேரள மாநிலத்தின் தலைநகரம் எதுவென்று உங்களுக்கு தெரியுமா? அப்படி தெரியாது என்றால் இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள். சரி வாங்க கேரளாவின் தலைநகரம் எது என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.
கேரளாவின் தலைநகரம் எது? – Kerala Thalainagaram
விடை: திருவனந்தபுரம்
மேலும் கேரளாவின் பிற குறிப்பிடத்தக்க நகரங்கள் கொச்சி, கோழிக்கோடு திருச்சூர் மற்றும் கோட்டயம் ஆகும்.
கேரளாவின் சிறப்புகள் சில இங்கே:
- 5 ஏப்ரல் 1957ல் ஜனநாயக முறைப்படி, ஆசியாவிலேயே முதன் முதலாக கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த முதல் மாநிலம் கேரளா ஆகும்.
- ஆதி சங்கரர் (பொ.ஊ. 788-820) பிறந்த இடம் காலடி ஆகும். காலடி கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஓரு ஊர் ஆகும்.
- இந்திய செவ்வியல் நடன வடிவம் “கதகளி”யின் பிறப்பிடம் கேரளா தான்.
- இரப்பர் உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி மாநிலம் கேரளா தான்.
- இந்தியாவின் நறுமணத் தோட்டம் கேரளா தான்.
- களரிப்பயிற்று தற்காப்புக் கலையின் பிறப்பிடம் கேரளா தான்.
- இந்தியாவின் முதல் டிஜிட்டல் மாநிலம் கேரள மாநிலம் தான்.
- இந்திய மாநிலங்களில் கல்வியறிவு விகிதத்தில் கேரளம் முதலிடம் வகிக்கிறது.
- வளைகுடா நாடுகளில் பணி புரியும் இந்தியர்களில் கேரள மாநிலத்தவர்கள் அதிகமாக உள்ளனர். அதனால் வெளிநாட்டு செலாவணி கேரளத்திற்கு கூடுதலாக கிடைக்கிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது தெரியுமா.?
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |