குறுந்தொகை ஆசிரியர் குறிப்பு | kurunthogai Aasiriyar Kurippu

Advertisement

குறுந்தொகை நூலின் விளக்கம்

வணக்கம் நண்பர்களே. இன்று இந்த பதிவில் குறுந்தொகை ஆசிரியர் குறிப்பு பற்றி தான் பார்க்கப்போகிறோம். தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்களுள் ஓன்று தான் குறுந்தொகை. இந்நூல் எட்டுத்தொகை நூல்களைத் தொகுத்து சுட்டும் வகையில் இந்நூல் “நல்ல குறுந்தொகை” என சிறப்பித்து பாடப்படுகிறது. இந்த குறுந்தொகையின் சிறப்புகளை இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

 குறுந்தொகை நூல் குறிப்பு:

  • இந்நூல் எட்டுத்தொகை நூல்களுள் ஓன்று.
  • இந்நூலை தொகுத்தவர் பூரிக்கோ. தொகுப்பித்தவர் பெயர் இதுவரை அறியப்படவில்லை.
  • இந்நூல் குறைந்த அடிகளால் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் “குறுந்தொகை” என பெயர் பெற்றது.
  • இந்த நூல் அகம் சார்ந்த பொருளினை அகவற்பாவினால் கூறுவதால் இந்நூல் அகநூல் என்று கூறப்படுகிறது.
  • கடவுள் வாழ்த்துடன் 401 பாடல்களை கொண்டுள்ளது.
  • இந்நூலின் பாடல்கள் 4 அடி முதல் 8 அடி வரை உள்ளன. இந்நூல் குறைந்த அளவாக 4 அடிகளையும், அதிக அளவாக 8 அடிகளையும் கொண்டுள்ளது.
  • இந்நூல் அதிக மேற்கோள்கள் காட்டப்பட்ட நூல் ஆகும்.
  • இந்நூல் எட்டுத்தொகை நூல்களில் முதலில் தொகுக்கப்பட்ட நூல் ஆகும்.
  • இந்நூலில் இடம்பெற்றுள்ள கடவுள் முருகப்பெருமான் ஆவார். முருகபெருமானை பாட்டுடைத் தலைவனாக கொண்டு கடவுள் வாழ்த்து பாடல்  பாடப்பட்டுள்ளது.
  • இந்நூலுக்கு கடவுள் வாழ்த்து பாடலை பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்” ஆவார்.
  • இந்நூலில் அமைந்துள்ள 401 பாடல்களை 206 புலவர்கள் பாடியுள்ளனர்.
  • பழந்தமிழர் வாழ்வினைக் காட்டும் காலக்கண்ணாடி என்று இந்நூல் அழைக்கப்படுகிறது.
  • இந்நூலில் உணர்வு மிகுந்தும் வருணைகள் குறைந்தும் காணப்படுகின்றன.
  • இந்நூலில் 20 பாடல்களுக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார். இந்த தகவலை “சீவக சிந்தாமணி சிறப்பாயிரத்தில் நச்சினார்க்கினியர் கூறியுள்ளார்”.
நற்றிணை ஆசிரியர் குறிப்பு

குறுந்தொகை நூலை பாடியவர்கள்:

இந்த நூலில் 10 பாடல்களுக்கு ஆசிரியர் பெயர் தெரியவில்லை. அதனால், அந்த பாடல்களின் தொடக்க வரிகளையே ஆசிரியர் பெயர்களாக அமைத்துள்ளனர். உவமைச் சிறப்பால் பெயர் பெற்ற 18 ஆசிரியர்கள் இந்நூலில் காணப்படுகிறார்கள். இந்நூலை முதலில் வெளியிட்டவர் சௌரிப்பெருமாள் அரங்கனார் ஆவார். சி.வை. தாமோதரம் பிள்ளை என்பவர் இந்நூலை முதன் முதலில் பதிப்பித்துள்ளார். இந்நூலை ஆராய்ச்சி பதிவு செய்தவர் உ.வே. சாமிநாத ஐயர்.

  • அணிலாடு முன்றிலார்.
  • செம்புலப்பெயல் நீரார்.
  • குப்பைக் கோழியார்.
  • காக்கைப் பாடினியார். 
  • விட்ட குதிரையார். 
  • மீனெறி தூண்டிலார்.
  • ஓரேருழவனார்.
  • காலெறி கடிகையார்.
  • கல்பொரு சிறுநுரையார்.
  • வெள்ளி வீதியார்.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement