Advertisement
குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் நகரம் எது | Which Place is Kutty Japan in India in Tamil
அனைவருக்கும் பொதுநலம்.காம்-ன் அன்பான வணக்கம். இன்றைய பொது அறிவு பதிவில் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் நகரம் என்ன என்பதை பார்க்க போகிறோம். ஜப்பான் என்றால் அது ஒரு பெரிய நாடாகும். அந்த நாட்டை போல தமிழ் நாட்டில் உள்ள ஒரு ஊரை குட்டி ஜப்பான் என்று சொல்கிறார்கள். இந்த பெயர் எதற்காக சூட்டப்பட்டது. யார் இந்த பெயரை வைத்தது என்பதை பார்ப்போம்.
சீனாவின் தலைநகரம் எது |
தமிழ்நாட்டின் குட்டி ஜப்பான்:
- தமிழ்நாட்டின் குட்டி ஜப்பான் அழைக்கப்பட காரணம் வெளிநாட்டிலிருந்து வருவதாலும் அங்கு கொஞ்சம் நாட்கள் தங்கி ரசிப்பதாலும் சிவகாசியை குட்டி ஜப்பான் என்று அழைக்கிறார்கள்.
- அதுமட்டுமில்லாமல் முன் இருந்த காலத்தில் தமிழ்நாட்டில் விவசாயம் நடந்தது. அப்போது போதிய மாட்டு வண்டிகள் மூலம் ஊர் ஊராக சென்று புகையிலை, பஞ்சு அழைத்தல், நெசவுத்தொழில், மண்பானை செய்தல், கயிறு திரித்தல், பசு மாடுகள் வளர்த்தல் போன்ற வேலைகளை செய்து வந்தார்கள். இது போல் தொடர்ந்து செய்து வர வாழ்க்கை மாறிவந்த பிறகு அதனை சிவகாசியிலும் வளர்ச்சி தொடங்கியது.
- அதன் பிறகு 1922-க்கு பிறகு சிவகாசியில் உள்ள சில படித்த இளைஞர்கள் கல்கத்தா என்ற பகுதிக்குச் சென்று வங்க மொழி தெரியாமல் இருந்தாலும் தொழில் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்து கற்றுக்கொண்டு கூடவே தீ பெட்டி தொழிலை கற்று வந்தார்கள். அதன் மூலமாக அதனை தமிழ்நாட்டில் உள்ள சிவகாசியில் தீப்பெட்டி தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது. அந்த தொழிலும் வெற்றிகரமாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து தீபாவளி போன்ற பண்டிகைகளில் மகிழ்ச்சியை கொண்டாடுவதற்காக பட்டாசுகள் தயாரிக்க ஆரம்பித்தார்கள்.
- பலரும் தீப்பெட்டி தொழில் பங்குகொண்டு சிறப்பாக செய்து வந்தாலும் பட்டாசு தொழிற்சாலையில் ஈடுபடுவதற்கு சற்று தயக்கத்தில் இருந்தாலும் துணிந்து பட்டாசு தொழிலில் ஈடுபட்டார்கள்.
- அதனுடன் தீப்பிடிக்கும் கருவிகளையும் தயாரித்து வந்தார்கள். இந்நிலையில் சீனாவில் இரண்டாம் உலக போருக்கு பிறகு இறக்குமதி கொள்கை செய்ய முடியவில்லை. அதன் பிறகு பட்டாசு தொழில் சிவகாசியில் கொடிகட்டி பறந்தது. அதன் பிறகு சீனாவுக்கு சிவகாசியிலிருந்து பொருட்களை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு விளங்கப்பெற்றது.
- எல்லா தொழிலுக்கும் தேவைப்படும் பொருட்கள் அனைத்தும் சிவகாசியில் கிடைக்கக் பெற்றது. அதனால் முன்னாள் பாரத பிரதமர் நேரு அவர்கள் சிவகாசியை குட்டி ஜப்பான் என்று அழைத்தார்.
மக்களின் மகிழ்ச்சியை அளவிடும் நாடு எது |
குட்டி ஜப்பான் என்று அழைத்தவர் யார்:
- முன்னாள் பாரத பிரதமர் நேரு அவர்கள் சிவகாசியை குட்டி ஜப்பான் என்று அழைத்தார்.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |
Advertisement