கியாட் என்பது எந்த நாட்டின் நாணயம் உங்களுக்கு தெரியுமா..? 

Advertisement

Kyat Coin Which Country

அனைவருக்கும் இன்றைய பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும். அப்படி என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். யோசித்து கொண்டே இந்த பதிவை படிக்க தொடங்குங்கள். உங்கள் கேள்விக்கான விடை கிடைத்து விடும். என்னதான் நாம் வாழ்வதற்கு உணவு, நீர் தேவைப்பட்டாலும் அதை கூட வாங்குவதற்கு பணம் தான் முக்கியமானதாக இருக்கிறது. பணம் இல்லையென்றால் நம்மால் இந்த உலகில் வாழவே முடியாது என்றே சொல்லலாம்.

அதுபோல பணம் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. அதாவது சில நாடுகளில் நாணயம் என்றும், சில நாடுகளில் டாலர் என்றும் பல பெயர்களில் இருக்கிறது. அந்த வகையில் இன்று கியாட் என்பது எந்த நாட்டின் நாணயம் என்று உங்களுக்கு தெரியுமா..? விடை தெரியாதவர்கள் இந்த பதிவை படித்து பயன்பெறுங்கள்..!

இந்தியர்களே ஆரம்பித்த முதல் வங்கி எது?

Kyat Coin Which Country in Tamil:

கியாட் என்பது எந்த நாட்டின் நாணயம் தெரியுமா..? 

பதில்:  மியான்மர் 

மியான்மர் மற்றும் கியாட் நாணயத்தின் தகவல்கள்:

Kyat Coin Which Country

மியான்மர் அல்லது பர்மா என்பது ஆசியாவில் தென்கிழக்கு பகுதியில் அமைந்த நாடாகும். இது இரும்புத் திரை நாடு என்று அழைக்கப்படுகிறது. 1989 ஆம் ஆண்டு பர்மா என்ற நாட்டின் பெயரை மியான்மர் நைங்கண்டௌ என்று மாற்றி கொண்டனர்.

வங்காளதேசம், இந்தியா, சீனா, லாவோஸ் மற்றும் தாய்லாந்து இந்நாட்டின் எல்லைகளாக விளங்குகின்றன.

முந்தைய தலைநகராக ரங்கூன் இருந்து வந்தது. அதன் பின் யங்கோன் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 2006 ஆம் ஆண்டில் மியான்மரின் தலைநகராக நைப்பியித்தௌ மாற்றியமைக்கப்பட்டது. இதன் மிகப்பெரிய நகரம் யங்கோன் ஆகும்.

சீனாவின் தலைநகரம் எது?

 

ஆரம்பகால மியான்மர் நாணயங்கள் இம்பீரியல் பர்மா காலத்தைச் சேர்ந்தவை. 1852 மற்றும் 1885 -க்கு இடையில் மிண்டன் மற்றும் பேகன் மன்னர்களால் வெளியிடப்பட்ட ஆரம்பகால நவீன கால நாணயம் என்று சொல்லப்படுகிறது. இது மேல் பர்மாவில் அதிகளவில் புழக்கத்தில் இருந்தது.

இந்திய நாணயங்கள் கீழ் பர்மாவில் புழக்கத்தில் இருந்தன. நவீன மியான்மர் கியாட் நாணயங்கள் 1991 மற்றும் 1999 இல் அச்சிடப்பட்டன. அவை 10 பைகள், 50 பைகள், 1 கியாட், 5 கியாட், 10 கியாட், 50 கியாட் மற்றும் 100 கியாட் என்று பயன்படுத்தப்பட்டன.

16 வெள்ளி கியாட் நாணயங்கள் 1 தங்க கியாட் நாணயத்திற்கு சமம். வெள்ளி கியாட் இந்திய ரூபாய்க்கு சமமானது.

ஆயிரம் ஏரிகளின் நிலம் என்று அழைக்கப்படுவது எது தெரியுமா…?

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement