இந்தியாவின் மிகப்பெரிய குகை எங்கு உள்ளது தெரியுமா?

இந்தியாவின் மிகப்பெரிய குகை

இந்தியாவின் மிகப்பெரிய குகை – Largest Cave in India in Tamil

வணக்கம் நண்பர்களே.. இன்றைய பொது அறிவு பகுதியில் இந்தியாவின் மிகப்பெரிய குகை என்றும் அழைக்கப்படுவது எது? அந்த குகை எங்கு அமைத்துள்ளது மற்றும் அந்த குகை பற்றிய சில தகவலக்கை நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இது போன்ற பொது அறிவு சார்ந்த விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்வதன் மூலம் அரசு நடத்தும் பொது தேர்வுகளில் கலந்துகொள்ளும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் நீங்கள் மற்றவர்களுக்கு இது போன்ற பொது அறிவு விஷயங்களை தெரியப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க இந்தியாவின் மிகப்பெரிய குகை எங்கு உள்ளது என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம்.

இந்தியாவின் மிகப்பெரிய குகை:

விடை: அமர்நாத் (Amarnath caves)

அமர்நாத் குகை பற்றிய சில தகவல்கள்:

அமர்நாத் குகை இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய இந்துக் குடைவரை கோயில் ஆகும்.

இக்கோயில் 5,000 ஆண்டு பழமையானதாகவும் இந்து புராண காலத்தில் மிக முக்கியமானதாகவும் கருதப்படுகிறது.

அமர்நாத் ஆசிரமத்தின் உட்புறத்தில் சிவலிங்கம் ஒன்றின் பனிக்கட்டிச் சிலை அமைந்துள்ளது. இச்சிலை மே முதல் ஆகஸ்ட் வரையான காலங்களில் உருகி மீண்டும் உருப்பெறுகிறது. இந்த லிங்கமானது சந்திரனின் வளர், மற்றும் தேய் காலங்களுக்கு ஏற்ப உரு மாறுவதாக குறிப்பிடப்படுகிறது.

இந்துப் புராணங்களின் படி இங்கு தான் சிவன் வாழ்வின் இரகசியங்களை பார்வதிக்குத் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது. பார்வதி, மற்றும் பிள்ளையார் பனிச்சிலைகளும் இங்கு உள்ளன.

இக்குகை 3,888 மீட்டர் உயரத்திலும், ஸ்ரீநகரில் இருந்து கிட்டத்தட்ட 141 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. இஸ்லாமியத் தீவிரவாதிகளின் திடீர்த் தாக்குதல்களுக்கு இலக்காகலாம் என்ற காரணத்தினால் இக்கோயில் இந்திய இராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் உள்ளது. எனவே இந்திய அரசின் முன் அனுமதியைப் பெற்றே இங்கு செல்ல வேண்டும்.

இந்த இடம் 51 சக்தி பீடங்களில் தேவியின் தொண்டைப் பகுதி விழுந்த இடமாகும்.

உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil