லோக்சபாவிற்கு செல்லாத இந்திய பிரதமர் யார்?

Loksapavirku Sellatha Muthal Pirathamar

Loksapavirku Sellatha Muthal Pirathamar

வணக்கம் நண்பர்களே.. நமது பொதுநலம்.காம் பதிவில் சுவாரசியமாக பலவகையான பொது அறிவு சார்ந்த விஷயங்களை பதிவு செய்து வருகின்றோம், அந்த வகையில் இந்த பதிவில் லோக்சபாவிற்கு செல்லாத இந்திய பிரதமர் யார்? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்..

லோக்சபாவிற்கு செல்லாத இந்திய பிரதமர் பெயர்?

விடை: திரு. சரண்சிங்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்–> பதவியை ராஜினாமா செய்த முதல் இந்திய பிரதமர் யார்? 

சரண் சிங் வரலாறு:

திரு. சரண் சிங் 1902-ல் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் மாவட்டத்தின் நூர்பூரில் ஒரு நடுத்தர விவசாய குடும்பத்தில் பிறந்தார். 1923-ல் அவர் அறிவியலில் இளநிலை பட்டம் பெற்றார். 1925-ல் ஆக்ரா பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். சட்டம் பயின்ற அவர் காசியபாத்தில் வழக்குரைஞராகப் பதிவு செய்தார்.1929 மீரட் சென்ற அவர் காங்கிரஸ்சில் இணைந்தார்.

இந்திய குடியரசின் ஏழாவது பிரதமராக ஜூலை 1979 28 முதல் ஜனவரி 1980 14 வரை பணியாற்றினார். குறுகிய காலம் மட்டுமே பிரதமராக இருந்துள்ள இவர் ஒரு நாள் கூட பாராளுமன்றத்தை எதிர்கொள்ளவில்லை என்ற சாதனையையும் புரிந்துள்ளார். இவர் தன்னுடைய பதவிக் காலத்தில் நாடாளுமன்றம் சென்று உரை ஆற்றியது இல்லை.

திரு. சரண்சிங் பொது பணிக்காகத் தன்னை முழுதும் அற்பணித்தவர், சமூக நீதியைப் பெரிதும் நம்புபவர். லட்சக்கணக்கான விவசாயிகள் மத்தியில் பெரும் நம்பிக்கையை உருவாக்கியவர்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்–> இந்திய குடியரசு தலைவர் பெயர் என்ன 2021

 

எளிமையான வாழ்க்கையை வாழ்ந்த திரு. சரண் சிங் தனது ஓய்வு நேரத்தை படிப்பதற்காகவும், எழுதுவதற்காகவும் செலவிட்டார். “ஜமீன்தாரி முறை ஒழிப்பு”, “கூட்டுறவு பண்ணை முறை”, “இந்தியாவில் வருமை ஒழிப்பும் அதற்கான தீர்வும்”, “வேலை செய்பவர்களுக்கு நிலம்”, “ஆஃப் ஹோல்டிங்க் பிலோ ஏ செர்டெய்ன் மினிமம்” உள்ளிட்ட பல்வேறு புத்தகங்கள் மற்றும் துண்டுப் பிரச்சுரங்களை அவர் எழுதியுள்ளார்.

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil