நீண்ட நாட்கள் உயிர்வாழும் 5 உயிரினங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Longest Living Animals Ever in Tamil 

பொதுவாக ஒரு மனிதன் சராசரியாக 80 ஆண்டுகள் உயிர்வாழ்கிறான். 2019-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 72.6 ஆண்டுகள் தான் சராசரியாக ஒரு மனிதன் உயிர்வாழ்கிறான் என்று கண்டறியப்பட்டது. அதேபோல் சில உயிரினங்களும் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.

அவ்வாறு தற்பொழுது வரை அதிக ஆண்டுகள் உயிர்வாழ்ந்த 5 உயிரினங்கள் பற்றி தான் இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

 சிலந்திக்கு எத்தனை கண்கள் உள்ளன தெரியுமா

Animals That Live the Longest in Tamil:

1. Turritopsis Dohrnii:

Animals that live the longest in tamil

நமது பட்டியலில் முதலாவது இடத்தில் உள்ளது தான் இந்த Turritopsis Dohrnii என்ற உயிரினம். இது ஒரு Jellyfish குடும்பத்தை சேர்ந்த உயிரினமாகும். 4.5 மி.மீட்டர் அளவில் உள்ள இந்த உயிரினம் பொதுவாக அனைத்து கடல் பகுதிகளிலும் காணப்படுகின்றன.

இவை கடலில் உள்ள தூசுக்களையே தனது உணவாக உட்கொண்டு வாழ்கின்றது. American Museum of Natural History செய்த ஆய்வின் படி இந்த உயிரினத்திற்கு இறப்பு என்பதே கிடையாது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

2. Ocean Quahog:

Animals that live the longest on earth in tamil

அடுத்து நாம் பார்க்க இருப்பது Ocean Quahog பற்றி தான். இது வடக்கு அட்லாண்டிக் கடல் பகுதிகளில் வாழக்கூடிய ஒரு வகை சிப்பியாகும். பொதுவாக கடல் சிப்பிகள் அனைத்துமே பல 100 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர்வாழும்.

இதற்கு காரணம் மற்ற விலங்குகளினால் இது வேட்டை ஆடப்படும் வாய்ப்புகள் குறைவு. அதனால் இவைகள் ஒரே இடத்தில் இருந்துகொண்டு அதிக அளவில் இனப்பெருக்கம் செய்யும்.

மேலும் 2006-ஆம் ஆண்டில் ஐஸ்லாந்து நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட சிப்பி 507 ஆண்டுகள் உயிர்வாழ்ந்தது என்று அறியப்பட்டுள்ளது. பொதுவாக நன்னீர் மற்றும் உப்புநீர் சிப்பிகள் 400 ஆண்டுகளுக்கும் மேலே உயிர்வாழக்கூடியது என்று அறியப்பட்டுள்ளது.

 வித்தியாசமாக தூங்கும் விலங்கு எது தெரியுமா

3. Greenland Shark:

Longest living fish in tamil

அடுத்து Greenland Shark பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். ஆர்டிக் மற்றும் வடக்கு அட்லாண்டிக் கடல் பகுதிகளில் வாழக்கூடிய ஒரு அறிய வகை சுறாமீனாகும்.  

சராசரியாக இந்த வகை சுறாக்கள் 272 ஆண்டுகளுக்கு மேலாக உயிர்வாழ்கின்றன. அதில் சில சுறாக்கள் 400 ஆண்டுகளுக்கு மேலாகவும் உயிர்வாழ்கின்றன என்று பல ஆய்வுகளின் முடிவுகள் கூறுகின்றன.

4. Rougheye Rockfish: 

Animals with longest lifespan in tamil

நமது பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது இந்த Rougheye Rockfish. இது பொதுவாக பசிபிக் பெருங்கடல், கலிபோர்னியா மற்றும் ஜப்பான் போன்ற இடங்களில் காணப்படும் ஒருவகை மீன் இனமாகும்.

இது இளம்சிவப்பு நிறத்தில் அல்லது பிங்க் நிறத்தில் காணப்படும். இந்த மீன்களை மக்கள் பொதுவாக உணவுக்காக அதிக அளவில் பயன்படுத்துக்கின்றனர்.

பொதுவாக இந்த Rougheye Rockfish 205 ஆண்டுகளுக்கும் மேலாக  உயிர்வாழ்கின்றது என்று பல ஆய்வுகளின் முடிவுகள் கூறுகின்றன.

உலகில் இரவே இல்லாத 6 நாடுகளை பற்றி உங்களுக்கு தெரியுமா

5. Galapagos Giant Tortoise:

Which animal lives the longest in tamil

Galapagos என்னும் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட ஜோனத்தான் ஒரு ஆமை வகையாகும். பொதுவாகவே ஆமைகள் 100 ஆண்டுகளுக்கும்  மேலாக வாழக்கூடியவை. அதிலும் குறிப்பாக இந்த Galapagos என்னும் தீவில் உயிர்வாழுகின்ற ஜோனத்தான் என்று பெயர்கொண்டுள்ள ஆமையின் வயது 190 ஆண்டுகள் ஆகும்.

மேலும் இந்தியாவில் கூட 2006 ஆம் ஆண்டு 250 ஆண்டுகள் வாழ்ந்த ஒரு ஆமை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil
Advertisement